சாயங்கால தூதன் Mesa, Arizona, USA 63-0116 1மிக்க நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உட்காரலாம். என் மகன் என்னிடம், ''அப்பா இந்த ஆலயம் மிகவும் அழகாக இருக்கிறது. நம்முடைய ஆலயத்தை கட்டுவதற்கு முன்பு நாம் இந்த ஆலயத்தை பார்த்திருக்க வேண்டும். இச்சபையின் போதகரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய மனைவியைப் போலவே அவரும் நல்லவராக இருப்பார். நிச்சயமாகவே அவர் ஒரு நல்ல மனிதர்'' என்று சொன்னான். ஆகவே இங்கு வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆகவே இன்றிரவு நடக்க இருக்கும் கூட்டத்தில், தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை நம் மேல் பொழிந்து நமக்கு உதவுவார் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன். 2இப்பொழுது நாம்... நான் உள்ளே வந்த போது, ரமாதாவில் நடைபெறப் போகும் ஆவிக்குரிய கூட்டத்தைப் பற்றி சகோ. வில்லியம் அறிவித்துக் கொண்டிருந்தார் என்று நம்புகிறேன். அதைக் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு விட்டன என்று நான் யூகிக்கின்றேன். வழக்கமாக இவ்வித அறிவிப்புகளை நான் வருவதற்கு முன்பே அறிவித்து விடுவார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு மகத்தான வேளையை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் என்னுடைய பொறுப்பு என்னவென்றால் நான் பல இடங்களுக்குச் சென்று சகோதரர்களை சந்தித்தும், ஜனங்களோடு ஐக்கியம் கொண்டும், மற்றும் முழுமையான எழுச்சிக்காக ஜெபிப்பதுமாகும். பின்பு நாம் ரமாதாவில் அக்கூட்டத்திற்கு பெரிய அளவில் செல்லலாம். அது வரையில் கூடுமான வரையிலும் எல்லா சபைகளையும் சந்திப்பதற்கு முயற்சிக்கிறோம். இப்போது நமக்கு சகோதரர்களோடு ஐக்கியம் கொண்டுள்ள உன்னதமான வேளையாயிருக்கிறது. 3நான் பெரிய போதகனல்ல என்றும், ஊழியத்தில் நான் ஒரு உதிரி சக்கரம் போலிருக்கிறேன் என்பதையும் எவரும் அறிவர். நோயுற்றோருக்காக ஜெபிப்பதே என்னுடைய ஊழியம். ஆகவே நான். இரவு வேளைகளில் மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது போதிய இடமில்லை. நாங்கள் தகுந்த இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். அது கிடைத்த பிறகு அட்டைகள் கொடுத்து மக்களை வரிசையில் அழைத்து ஜெபிக்கலாமென்றிருக்கிறோம். ஒரு இரவு கூட்டத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அடுத்த நாள் இரவு வேறொரு இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கு கொள்ளலாம். நான் ஒவ்வொரு இரவிலும் மக்களுக்காக ஜெபிக்கிறேன். நாம் நேசித்து, அன்பு கூர்ந்து, ஐக்கியம் கொள்கிற இயேசு கிறிஸ்துவின் கனத்திற்கும் மகிமைக்கும் என்னால் இயன்றவரை நான் இதை செய்கிறேன். 4சிறிது நேரத்திற்கு முன்பு, அந்த மூலையில் நடந்த விபத்தைக் குறித்த கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அந்த மனிதன், அல்லது யாராவது ஒருவர், கொல்லப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த கார் வந்தது. நாங்கள் நின்று ஒரு சிறிய ஜெபத்தை செய்தோம். சிறிது நேரத்திற்கு முன்பு நடந்தது. இங்கிருந்து சுமார் நான்கு தெருவிற்கு தள்ளியாரோ ஒருவர் மீது வாகனம் மோதி தெருவில் உள்ள நடைபாதையில் தள்ளிவிட்டது. ஒரு பெரிய நபர் துணியால் மூடப்பட்டு கிடந்தார். அங்கே காவல் துறையினரும் இருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் விரைவு ஊர்தி அங்கு வரவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் கொல்லப்படவில்லையெனில், அது நிச்சயமாக.... இந்த பக்கத்தில் இடித்து அடுத்த கதவின் புறமாக வந்து நின்றது. ஆகவே அது மிவும் மோசமாக மோதியிருக்கலாம். உங்களுக்கு தெரியுமா, அது வெறும்... 5நாம் ஒவ்வொரு நிமிடமும் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும். இவ்விதமான காரியங்கள் எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்று நமக்கு தெரியாது. அந்த விபத்து நமக்கு நேரிடவில்லை என்று ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால் நமக்கும் அது நேரிட முடியும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, ''ஆயத்தமாயிருங்கள், ஏனெனில் எந்த நிமிடம் எந்த மணி நேரம் நாம் அழைக்கப்படுவோம் என்று நமக்கு தெரியாது'' என்று இயேசு கூறினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவ்விதம் அழைக்கப்படும் போது விபத்துக்களும், தொல்லைகளும் இல்லாத ஒரு இடத்திற்கு நாம் செல்லுவோம். நமக்கு அப்படிப்பட்ட இடம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு தெரியுமா, அதைப் போன்ற ஒரு இடத்திற்காக, அதைக் காணத்தக்கதாக நாம் ஏங்குகிறோம். அதற்குரிய சிந்தனையே அதைப் போன்ற ஒரு இடம் இருக்கின்றது என்று காண்பிக்கின்றது. பாருங்கள்? எல்லா நிழற்படப் படிவங்களும் (Negative), எல்லா நிழல்களும், ஒரு நிழலை உருவாக்க ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று நாம் அறிவோம். நிழல் ஒரு பிரதிபலிப்பாகும். ஆகவே இதைப் போன்ற ஒரு நிழல் என்பதே பிரதிபிம்பமாகும். ஆகவே நாம் வாழும் வாழ்க்கை ஒரு உண்மையான வாழ்க்கையின் பிரதிபிம்பமான நிழல் என்பதை காண்பிக்கிறது. ஒரு மரத்தை உற்றுப் பாருங்கள். அது எவ்வளவு அழகாயிருக்கிறது. அது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது பரலோகத்தில் இருக்கும் ஜீவ விருட்சத்தின் பிரதிபிம்பமான நிழலாகும். 6இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா, தேவன் பூமிக்கு வந்த போது, அவர் ஆதியிலே பூமியின் மீது அணைத்து நின்றிருந்த போது, விஞ்ஞானிகள் வலியுறுத்த நினைக்கின்றது போல, முதலாவதாக ஒரு வேளை தலைப்பிரட்டை (தவளை தேரை போன்றவற்றின் ஆரம்ப நிலையான ஒரு பூச்சி - தமிழாக்கியோன்) (polliwag) வந்திருக்கக்கூடும். அடுத்ததாக வேறெதாவதொன்று... நான் உண்மையான கிறிஸ்தவ பரிணாம வளர்ச்சியில் (evolution) நான் விசுவாசிக்கிறேன், ஆனால், அவையெல்லாம் ஒரே உயிர் அணுவிலிருந்து வந்தவை என்று நான் விசுவாசிப்பதில்லை. நான் நம்புகிறேன்.... தேவன் ஒரு தலைப் பிரட்டையை உண்டாக்கினார், அதன் பிறகு மீனை உண்டாக்கினார், பிறகு வேறெதையோ உண்டாக்கினார். ஒரே உயிரணுவிலிருந்து எல்லாம் தோன்றாமல், ஒவ்வொன்றும் தனித்தனியே, தனி சிருஷ்டிகளாகவே வந்தன என்று நான் விசுவாசிக்கிறேன். ஆகவே, அப்படியாக ஒவ்வொரு உயர்ந்த வகைகளாக (சிருஷ்டிப்புகள் - தமிழாக்கியோன்) வந்து கொண்டேயிருந்தன (சிருஷ்டித்தல் - தமிழாக்கியோன்) பிறகு கடைசியாக வந்த ஒன்று பூமியை அணைத்து நின்று கொண்டிருந்த ஒன்றை பிரதிபலித்தது. அது தேவன் ஆகும். இப்பொழுது, இது உண்மை என்று நிரூபிக்கும் வகையில், தேவன் மாம்சமான போது இயேசு கிறிஸ்துவாக இருந்தார், ஒரு மனிதன். பாருங்கள்? ஆகவே, ஒரு தூதன் அல்ல, ஒரு மனிதன். ஆகவே அது அவரையே பிரதிபலித்தது என்பதை காண்பிக்கின்றது. 7ஆகவே, ஓ, இந்த பழைமையான வேதாகமம் முழுவதுமாய் கனிவார்ந்த சீர் செய்யப்படாத பழைய தங்கக் கட்டிகளால் நிறைந்துள்ளது. நான்... நான் சென்று அதிலிருக்கும் தூசிகளையெல்லாம் தட்டி எடுத்து, அதை ஆராய்ந்து பார்த்து அது என்னவாயிருக்கிறது என்பதைக் காண விரும்புகிறேன். அரிசோனாவில் இருக்கும் மக்களாகிய உங்களுக்கு எப்படி பூமியின் தூளிலிருந்து மகத்தான, விலையுயர்ந்த நகைகள் வருகின்றது என்பதை அறிவீர்கள். அங்கிருந்து தான் அவை வருகின்றன. அதே போன்று தேவனின் அணிகலன்களும் தூசியிலிருந்து எடுக்கப்பட்டவைகளே ஆகும். ஆகவே அவர். அவருடைய மகத்தான தூய்மை செய்கின்ற உலைகளத்திற்குள் சென்று எல்லா உலோகக் கழிவு, களிம்பு, மாசு ஆகியவை அகற்றப்பட நமக்களிக்கப்பட்டுள்ள சிலாக்கியத்திற்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். அது எவ்விதம் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? அரிசோனாவில் உள்ள உங்களுக்கு தெரியும். உருக்கி பிரித்தெடுக்கும் முறை வருவதற்கு முன்பு தங்கக் கட்டியை நன்றாக அடிப்பார்கள் என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. பழைய இந்தியர்கள் அவ்விதம் செய்வார்கள். அதைத் திருப்பி, திருப்பி அடித்து, அதில் இருக்கின்ற உலோகக் கழிவு, மாசு, களிம்பு ஆகியவை வெளியே வரும் வரை நன்றாக அடிப்பார்கள். அடிப்பவன் தன்னுடைய பிரதிபலிப்பை, தன்னையே அவன் அதில் காணும் போது எல்லாக் கழிவுகளும் அகன்றுவிட்டது என்று எவ்வித சந்தேகமும் இன்றி அறிந்து கொள்வான். அது (தங்கம் - தமிழாக்கியோன்) அவனை பிரதிபலிக்கும் போது அது சுத்தமாகின்றது என்று அறிந்து கொள்வான். 8தேவன் தமது சபையையும் அவ்வாறே செய்ய விரும்புகிறார். அதை அடித்து அதிலுள்ள உலகத்தை வெளியேற்றி நம் ஒவ்வொருவரிலும் இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பு ஜீவியம் செய்து நாமும் அவரை பிரதிபலிக்கும் வரையிலும் அவர் அவ்விதம் செய்ய விரும்புகிறார். நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிற பாரங்களையும், பாவங்களையும் விட்டுவிட்டு நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசு கிறிஸ்துவின் எடுத்துக் காட்டை மனதில் கொண்டு நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற பந்தயத்தை நோக்கி பொறுமையோடு ஓடுவோம். ஓடக்கடவோம், அந்நிலைக்கு... அந்நேரத்தில் தன்னைத் தானே நம் மூலமாக பிரதிபலித்துக் காண்பிக்கிறார். அதற்காக நாம் மிகவுமாய் சந்தோஷப்படுகிறோம். 9சகோ. கார்ல் வில்லியமிடம், ''சகோதரனே இரவில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் விழித்திருந்து என்னுடைய பேச்சை கேட்பதை அந்த பள்ளத்தாக்கில் சுற்றுப் புறங்களில் இருக்கிற மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று சொன்னேன். அவரோ வாருங்கள் சகோதரனே என்று அழைத்தார். ஆகவே என்னை மீண்டும் அழைத்திருப்பதற்காக உங்களை பாராட்டுகிறேன். சற்று நேரத்திற்கு முன் நிஸ்ஸானிலிருக்கும் என்னுடைய மனைவியோடு பேசினேன். அங்கு காலநிலை எவ்வாறு உள்ளது என்று வினவினேன். உஷ்ணமாயிருக்கிறது என்று அவள் சொல்லி விட்டு உங்கள் நிகழ்ச்சிகள் சரியாய் நடைபெறுகிறதா? என்று கேட்டாள். ஒவ்வொரு நாளும் பத்து, பதினொரு மணி ஆகிறது என்று சொன்னேன். அரிசோனாவில் நடைபெறும் சிறிய கூட்டத்திற்கு இந்த முறை செல்லும் போது நான் ஓய்வு எடுத்துக் கொள்வேன். அங்குள்ள சபைகளுக்கு சென்று சகோதரர்களை சந்திப்பேன். அந்த மக்களை நான் கஷ்டப்படுத்த போவதில்லை. இந்த விழாவில் அவர்களை பாடல்கள் பாட விட்டு விடுவேன். என்னை கட்டுப்படுத்திக் கொண்டு பத்து பதினைந்து நிமிடங்கள் என்னுடைய குறிப்பிலிருந்து பேசி ஆமென் சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று விடுவேன் என்று நான் சொன்னேன். அதற்கு அவள் அவ்வளவு சரியாகவா நடந்து கொள்ளுகிறீர்கள் என்று கேட்டாள். ஆம் தேனே, மூன்று மணி நேரம் நடைபெறுகிறது. மக்கள் நல்லவர்களும் மிகுந்த பொறுமையுடையவர்களுமாயிருக்கிறார்கள் என்று சொன்னேன். 10நாம் இப்போது அவரை அணுகப் போகிற வேளையிலே சிறிது நேரம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். இப்பொழுது, நான் நிச்சயமாயிருக்கிறேன், விசுவாசிக்கின்ற இந்த அருமையான மக்கள் மத்தியில், அநேகமாக.... நோயுற்று உதவிக்காக காத்திருக்கும் இருவர் படுத்திருக்கும் இரண்டு கட்டில்கள் இங்கிருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் விசேஷ வேண்டுதல்களோடிருப்பார்கள். இங்கு இன்னும் அநேகர் ஜெப விண்ணப்பங்களோடிருப்பீர்கள். அப்படியானால் உங்கள் கைகளை உயர்த்தி உங்களை எங்களுக்கு காண்பியுங்கள். நான் இப்போது கட்டில்களில் இருக்கும் இவர்களுக்காக ஜெபிக்க போகிறேன். விசுவாசிக்கிற மக்கள் மத்தியில் நாம் ஜெபிக்கும் போது நாம் கேட்டுக் கொள்வதை நிச்சயமாக பெற்றுக் கொள்வோம். ஏதாவது நடக்கும் என்றால் அவர்களை இங்கு கொண்டு வந்தவர்கள் நல்ல விசுவாசத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் என்னோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 11எங்கள் பரம தகப்பனே, எங்களிலிருக்கும் எண்ணங்களை அப்புறப்படுத்தி, எங்கள் மனதை சுத்தப்படுத்திக் கொண்டு எங்கள் ஆத்துமா தூய்மை அடைவதற்காக நாங்கள் உமக்கு முன்பாக வந்திருக்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தை எங்களுக்கு முன்பாக வைக்கிறோம். நீர் எங்களுக்குத் தருகிற எந்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தகுதியுடையவர்களல்ல. ஆயினும் நாங்கள் அவற்றை பெற்றுக் கொள்வதற்காக அவர் மரித்தார் என்றும், பாவிகளுக்காக இம்மானுவேலாக இந்த உலகத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால், உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக வரும் வழியை எங்களுக்கு காண்பித்து இவற்றை பெற்றுக் கொள்ளும் படியாக அவர் எங்களை அழைத்திருக்கிறார் என்று அறிக்கையிடுகிறோம். அவர் எங்களைப் போலானார். ஓ, நாங்கள் அவரைப் போல ஆக வேண்டும் என்பதற்காக. எப்படிப்பட்ட ஒரு பரிமாற்றம் தேவனே! நரகத்திற்கே அனுப்பப்பட வேண்டிய பாவம் நிறைந்த வாழ்க்கை உடையவராய் இருந்தோம் நாங்கள். ஒருவர் வந்து அந்த வாழ்க்கையை அவர் மேல் ஏற்றுக் கொண்டு அவருடைய சொந்த ஜீவனின் இரத்தத்தால் எங்கள் பாவங்களை சுத்தப்படுத்தினார். ஆண்டவரே இது எங்கள் இருதய சிந்தனைக்கு மேலானதாக இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் அநீதிகளை அகற்றும் வழியை அவர் உண்டாக்கி அவர் தழும்புகளால் எங்களை குணமாக்குகிறாரே. அவரை சேவிக்கும் பொழுது அவர் எங்களை நலமாக காத்துக் கொள்வார் என்கின்ற அவருடைய வாக்குத்தத்தத்திற்காக நாங்கள் நன்றி செலுத்திக் கொள்ளுகிறோம். 12ஆகவே இப்பொழுது இன்றிரவு, பிதாவே, அநேக விண்ணப்பங்கள் இங்கே இருக்கையில்.... தங்கள் கைகளை உயர்த்தியிருக்கையில். அந்த கைகளுக்கு பின், இருதயத்தில் என்ன உள்ளது என்பதை நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். ஆண்டவரே நாங்கள் வாசிக்கப் போகிற வார்த்தைகளை நீர் நினைவு கூற வேண்டும் என்றும், ஒரு ஞாயிறு பள்ளி பாடத்தைப் போல எங்களுக்கு போதித்து எங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு இங்கு உள்ளே வந்த நேரத்தை விட நாங்கள் வெளியில் செல்லும் போது உம்மோடு அதிகம் நெருங்கினவர்களாக செல்லும் படி எங்களுக்கு உதவி செய்யும்படி கேட்கிறேன். நாங்கள் எங்கள் தேசத்திலே ஒரு எழுச்சியை கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் இங்கிருக்கிறோம். அது எப்போது துவங்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆண்டவரே. ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும், சிறுவனையும், சிறுமியையும் கிறிஸ்துவின் இரட்சிப்பை அறியும் அறிவிற்குள் கொண்டு வருவதற்கான எங்களுக்கு தெரிந்த எல்லா மனித முயற்சிகளையும் உமக்கு முன்பாக படைக்கிறோம். 13இந்த சபைக்காகவும், இந்த சபையின் அருமையான போதகர்க்காகவும், அவருடைய மனைவிக்காகவும் மற்றும் மூப்பர்கள், தர்மகர்த்தாக்கள் அதிலுள்ள மற்றெல்லாருக்காகவும் உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். எங்களோடு அன்பாயிருக்கிற அனைவருக்காகவும் நன்றி செலுத்த விரும்புகிறோம். தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் நிறைந்திருக்கும் படியாய் ஜெபிக்கிறோம். எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதித்தருளும் கர்த்தாவே. இந்த பள்ளத்தாக்கில் இருக்கிறவர்கள் இங்கு வந்து இளைப் பாறுதலை கண்டுக்கொள்ளும் ஒரு இடமாக இது அமையட்டும். நோயாளிகளுக்காக இந்த சபையின் மேய்ப்பன் ஏறெடுக்கிற ஜெபங்களுக்கு பதில் அளித்தருளும் பிதாவே. சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக இரட்சிப்புக்காக அவர் ஏறெடுக்கிற ஜெபங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக. அவர் மேல் உம்முடைய ஆசீர்வாதங்களை தங்கியிருக்க செய்யும். இந்த சபை பரிசுத்தாவியின் எந்த வரத்திலும் குறைவுபட்டு போகாமல் எல்லா சமுதாயத்தாருக்கும் ஒரு எடுத்துக் காட்டு சபையாக காணப்படும்படி அருளிச் செய்தருளும் ஆண்டவரே. 14பிதாவே இப்பொழுது இந்த கூட்டத்தில் உட்கார முடியாமல் கட்டில்களின் மேல் படுத்துக்கிடக்கிறவர்களாய் சிலர் இன்றிரவு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். தேவனே அவர்களுக்காக மனதிரங்கும். இவர்கள் ஒருவேளை என்னுடைய மனைவியாகவோ, என்னுடைய சகோதரனாகவோ அல்லது என்னுடைய உறவினர்களில் யாராவது எனக்கு தெரிந்த ஒருவராக இருக்குமானால் எனக்கு எப்படி இருக்கும். ஆகவே தகப்பனே கர்த்தருடைய கிருபை வல்லமையோடு இறங்கி வந்து இந்த கட்டில்களில் இருப்பவர்களுக்கு இன்றிரவு தெய்வீக விடுதலை அளித்தருள வேண்டுமென்று கெஞ்சி கேட்டு கொள்ளுகிறேன். இன்றிரவு இந்த கூட்டத்தின் பிறகு அவர்கள் எப்போதும் இந்த கட்டில் இல்லாதபடிக்குச் செய்யும். அவர்கள் இங்கிருந்து செல்லும் போது இந்த கட்டில்களை விட்டு எழுந்து செல்வார்களாக. இயேசுவை இறந்தோரில் இருந்து உயிரோடெழுப்பிய அதே வல்லமை இந்த சரீரங்களையும் உயிர்ப்பித்து புதிய சுகத்தையும் பெலத்தையும் அருளிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன் பிதாவே, நீர் இதை செய்வேன் என்று வாக்களித்திருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் போது குணமடைவார்கள்“ என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. பிதாவே, இந்த உம்முடைய பிரமாணத்தின்படி நான் இப்பொழுது மக்கள் மத்தியில் செல்லுகிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது சந்திக்க முடியாதபடி எவரும் இருக்க வேண்டாம். தேவனே, ''நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்லுகிறபடியால் தேவன் எனக்கிதைச் செய்தார்'' என்று கடிதங்கள் எனக்கு வர எதிர் பார்க்கிறேன். 15தேவனே நான் உம்மை நம்பிடுவேன், ஓ தேவனே, நான் நம்பிடுவேன், யாவும் கைக்கூடிடும், தேவனே நான் உம்மை நம்பிடுவேன்; தேவனே நான் உம்மை நம்பிடு வேன், தேவனே நான் உம்மை நம்பிடுவேன். யாவும் கைக்கூடிடும் தேவனே நான் உம்மை நம்பிடுவேன். இரண்டு பெண்களுக்கும் சதை வளர்ச்சி இருந்தது. அதில் ஒருவருக்கு புற்றுநோய். 16நான் என்னுடைய பேச்சைக் குறைக்க வேண்டுமென்றால் இந்த சிறு சாட்சியை நான் சீக்கிரமாக கூற வேண்டும். நான் வீட்டிலிருந்து புறப்படும் முன் எனக்கிருந்த கடைசி காரியம், அது ஒரு மகத்தான காரியமாகும். அங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுடைய பெயர் டையர்; அவள், இப்பொழுது அவளது பெயரை மறந்து விட்டேன். லூயிவில்லில் உள்ள டாக்டர் டையர் ஆவார். ஏ. ஜேம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் டையர், சதை வளர்ச்சி, இன்னும் மற்றைய காரியங்களில் அவர் நிபுணராவார். டாக்டர் கேபிள்ஸ் போதகராக இருக்கும் 'திறந்த வாசல்' சபையில் அவருடைய மகள் பியானோ இசைத்தாள். ஓ, ஒரு மகத்தான யூத ஜெப ஆலயம். அவர் மிகவும் நல்லவர். 'சர்ச் ஆப் கிரைஸ்ட்' ஸ்தாபனத்தை சேர்ந்தவர். பின்பு பூரண சுவிசேஷத்தாரின் சுவிசேஷத்தை கேட்டு மனந்திரும்பினார். அவர் ஒரு அருமையான மனிதன். நான் லூயிவில்லேயில் உள்ள 'மெமோரியல் அரங்கத்தில்' கூட்டம் நடத்தின பொழுது அவள் இசைக் கருவி வாசித்தாள். அவள் அங்கு நிகழ்ந்தவைகளைக் கண்டு வியப்படைந்து தன்னுடைய தந்தையாரிடம் தெரிவிக்க முயன்றாள். அவர், ''இதெல்லாம் உளவியல் சம்பந்தமான ஒன்று, மனதைக் கவர்ந்து ஆட்கொள்ளுகிற ஒரு அறிவுத் துறையாகும் (Psychology). அவர்களெல்லாரும் இன்னமும் நோயாளிகளாகவே இருக்கிறார்கள், என்று சொன்னார். ஆகவே இதை அவர் நம்பாதவர். நம்பவில்லை. 17கடைசியாக தன்னுடைய விசுவாசத்தை வழியை விட்டு விட்டார். பாப்டிஸ்டுகள் செய்கின்ற விதமாக அவர் ஒரு ஊழியக்காரராக இருக்க பயிற்சி பெற்றவர் ஒருவராவார். ஆகவே அவர்கள்... கடைசியல் அவர் விட்டுவிட்டார். பிரசங்கிக்க அவர் விரும்பவில்லை. ஆகவே அவர்கள், தங்கள் ஜனங்கள் இருந்த இல்லி நாயிலுள்ள ராக்போர்ட் என்ற இடத்திற்கு சென்று விட்டனர். அவள் கடைசியாக அந்த சபையை விட்டுவிட்டு பாப்டிஸ்டு வேதாகமக் கல்லூரியை சார்ந்த ஒருவரை மணந்து கொண்டாள். அவர் ஊழியக்காரராக பயிற்சி பெற்றவர். கடைசியாக அவளுக்கு, ஜீன் (Jean) (அப்பெண்ணின் பெயர் - தமிழாக்கியோன்) ஏதோ ஒரு பெண்களுக்குரிய கோளாறு ஆரம்பமானது. தன் தகப்பனாரிடத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்காக அவள் லூயிவில்லிற்கு வந்தாள். ஆகவே, அவர்கள் பரிசோதித்துப் பார்த்த போது 'சாக்லேட் கட்டி' (Chocolatetumour) என்று கண்டறிந்தார். அது பெண்களுக்குரிய சுரப்பியில் இருக்கும். அவளுடைய தந்தை ஒரு பெரிய அறுவை சிகிச்சையின் மூலம் அந்த கட்டிகளை எடுக்கையில், கட்டிகளின் பாகங்கள் சிலவற்றை அவளுக்குள் சிந்திவிட்டிருக்கிலாம். ஆகவே கடைசியாக அவளுக்கு ஊடுகதிர், எக்ஸ்-ரே (X-ray) சிகிச்சையும், நோய் நீக்கல் (Therapy) சிகிச்சையும் அளித்தார்கள். அவள் பின்பு வீடு திரும்பினாள். ஆயினும் அதன் உபத்திரவம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு ஆண்டிற்கு பிறகு மருத்துவ பரிசோதனைக்காக அவளை மீண்டும் கொண்டு வந்து கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்தார்கள். தெற்கில் இருக்கின்ற சிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஹயும்ஸ் என்பவருடன் சேர்ந்து அவளுடைய தந்தை அறுவை சிகிச்சை செய்து பார்க்கையில் அந்த கோளாறு வரம்புக்கு மீறி முற்றிப்போய் இருப்பதைக் கண்டார்கள், புற்று நோயானது ஏற்கனவே குடல் வாலிலிருந்து மலக்குடல் வரையுள்ள பெருங்குடல் பகுதி முழுவதுமாக மூடி பரவியிருந்தது. ஆகவே சிறிது நேரத்திற்கு அவளை அப்படியே விட்டுவிட்டார். பிறகு அவர் மறுபடியுமாக ஊடுகதிர், எக்ஸ்-ரே சிகிச்சை முறையை அளித்துப் பார்த்தார். அது எந்தவித நன்மையையும் அளிக்கவில்லை, ஆகவே அவளை மறுபடியுமாக மருத்துவமனைக் கொண்டு சென்று அவளுக்கு..... அவளுக்கு குடவிளக்க மருந்தை செலுத்தி (Laxative) அவனது குடலை அசைக்க இனியும் முயலக் கூடாமல் ஆனது. ஆகையால் குடலைக் கழுவும் அழுத்தக் குழாய் கருவியின் (Enema) மூலமாக அவளது குடலைக் கழுவ முயன்றனர். ஆனால் குடலைக் கழுவும் அழுத்தக் குழாயின் மூலம் செலுத்தப்பட்ட நீர் குடலுக்குள் செல்லவில்லை. 18அப்பொழுது அவளுடைய கணவன் என்னை குறை சொல்பவர்களின் ஒருவராக இருந்தார். கடைசியாக ஒரு நாள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினார். (என்னுடைய மகனும் மற்றும் எங்கள் பொறுப்பாளர்களில் ஒருவரான சாத்மனும்... சாத்மன் இங்கு எங்கோ இருக்கிறார். அவர் ஆலயத்தின் படிகளில் காத்திருந்தார். ஏன் இரண்டு நாட்கள் அவர் அங்கே இருந்திருக்கிறார். நான் ஒரு கூட்டத்திற்காக வெளியே சென்றிருந்தேன். திரும்பி வந்ததும் அவளைப் பார்க்கச் சென்றேன். அவளுடைய கணவன் என்னிடம் இப்பொழுது புற்றுநோய் இருப்பது அவளுக்கே தெரியாது. நீங்கள் சென்று அவளிடம் பேசி அவளுக்காக ஜெபியுங்கள்'' என்றான். நான் அங்கு சென்ற பொழுது அவள் என்னிடம், ''சகோ. பிரான்ஹாம் என்னுடைய கணவர் இப்பொழுது தெய்வீக சுகமளித்தலை ஏற்றுக் கொள்ள போகிறார். முன்பு ஒரு புத்தகத்தையாகிலும் என்னால் வாசிக்க வைக்க முடியவில்லை. இப்பொழுதோ புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாள்தோறும் என்னிடம் பக்கம் பக்கமாக படிக்கிறார்“ என்று கூறினாள். 19நான் அவளிடம், ''எனக்கு புரிகிறது ஜீன். நாம் இப்போது ஆண்டவரிடம் பேசி அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்“ என்றேன். அப்போது அந்த அறையில் யாருமில்லை, நர்சும் போய் விட்டிருந்தாள். ஆகவே நாங்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு ஒரு தரிசனம் வந்தது. அவளுக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்கும் நரை இன்னமும் தோன்றாத வயது. ஆனால் அவள் மிகவும் நரைத்து வயதானவள் போல் இருந்தாள். நான் அவளிடம், ”ஜீன், நீ பல கூட்டங்களுக்கு வந்திருக்கிறாய்'' என்றேன். ஆம், ''சகோதரன் பிரான்ஹாம்.'' உன்னுடைய தந்தையும் கணவனும் உன்னிடம் சொல்லக் கூடாதென்று என்னை தடை செய்தார்கள். ஆனால் நீ பல கூட்டங்களுக்கு வந்திருக்கிறபடியால் நான் சொல்கிறேன். உனக்கு புற்று நோய் இருக்கிறது. ஒரு தரிசனம் எப்போதுமே தவறினதில்லை. இப்பொழுது ஜீன் நான் உனக்கு கூறப்போகிறேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது! பாருங்கள்? பாருங்கள்? 20இது மனதில் ஏற்பட்ட கருத்தல்ல, இது ஆண்டவரால் ஆகக் கூடியது; ஆகவே உண்மையான நம்பிக்கை கொள்ளுங்கள். பின்பு, ''நீ வாழத்தான் போகிறாய்'' என்று சொன்னேன். அவள் சகோதரன் பிரான்ஹாம், மருத்துவரான என் தந்தையால் வளர்க்கப்பட்ட எனக்கு, என் உடலில் இருந்த நோயைப் பற்றி சந்தேகம் இருக்கத் தான் செய்தது. அது நான் நினைத்தது போலவே ஆகிவிட்டது'' என்றாள். பின்பு ஜெபித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு பெருங்குடலின் கடைசியில் கீறி செயற்கை குதம்... ஏற்படுத்துவதற்கான அறுவை சிகிக்சை (மலம் கழிக்க வைத்தல் தமிழாக்கியோன்) செய்வதற்கென்று அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பெருங்குடலின் கடை முனையில் கீறி பக்கவாட்டில் ஒரு பையை இணைப்பார்கள். நோயாளி புற்று நோயினால் சாகும் வரையிலும் இவ்வழியாகத்தான் கழிவை எடுக்க வேண்டும். அந்த சிகிச்சைக்கென அவர்கள் அவளை ஆயத்தப்படுத்தும் போது அவளுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு உண்டானது அவள் செவிலி (Nurse) அழைத்து கழிவறைக்கு செல்லுவதற்கு தனக்கு உதவும் படி வேண்டினாள். அங்கு சென்ற போது அவளுக்கு வயிற்றிலிருந்து முற்றிலுமாக இயற்கையாகவே வெளியேறி விட்டது. அவளுடைய கணவனால் அதனை எளிதாக ஏற்க முடியவில்லை. மறுநாளும் காலை உணவிற்கு பின்பு இயற்கையாகவே வயிற்றிலுள்ளவை வெளியேறி விட்டன. அவளுடைய மருத்துவர் வந்து பார்த்தார். ஆச்சரியத்தால் நெஞ்சு புடைத்து, ''என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. நோயின் ஒரு அறிகுறியும் அவளிடம் இல்லையே'' என்று கதறி சொன்னார். 21என்னுடைய விலையேறப் பெற்ற சகோதரிகளே, கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இங்கே நின்று தவறான ஒன்றை சொல்லுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது. அப்படி செய்வேனானால், அந்த நாளில் நான் நியாயதீர்க்கப்பட்டு ஒரு மாயமாலக்காரனாக புறக்கணிக்கப்படுவேன். இப்போது தேவனுடைய வார்த்தை திறந்திருக்க நான் சொல்லுகிறேன். உங்களுக்கு ஜெபித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் ஜீனுக்கு ஜெபிக்கவில்லை. பாருங்கள்? விசுவாச ஜெபம் செய்யப்பட்டது என்று கருதி நாங்கள் வந்து விட்டோம். ''விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்'' என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. 22அதே தேவன் தான் மருத்துவர்டையரின் மகள் ஜீனை சுகப்படுத்தினார். இப்போது அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மனிதன் பூரண சுவிசேஷத்தை தழுவியிருக்கின்றார். சென்ற முறை நான் இங்கு சபையில் பிரசங்கம் செய்த போது அவர் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நம்மோடு இராப்போஜனம் எடுத்தார். மற்றுமுள்ள காரியங்களிலும் கலந்து கொண்டார். பாப்டிஸ்ட் சபை வேதாகம கல்லூரியின் மாணவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக கர்த்தரிடத்தில் வந்தார். தேவன் தேவனாக இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. ஒரு மருத்துவர் ஆன அவளுடைய அன்பான தகப்பன் இவ்விதமான ஒரு நிகழ்ச்சியை எப்போதும் பார்த்ததில்லை. இப்பொழுது, ஒவ்வொரு காரியத்திற்கும் தேவன் ஒரு நேரத்தை வைத்திருக்கிறார். நீங்கள் இருவரும் விசுவாசிகள். விசுவாசித்தால் ஆகும். சில வேளைகளில் இவை நன்மைக்கென்றே நடக்கின்றன. ''சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது'' என்று வேதம் கூறுகின்றது. இப்போது யோபுவுக்கு நேரிட்ட சோதனைகளை நினைத்துப் பாருங்கள். தேவன் அவனை தண்டிக்கவில்லை. ஆனால் அது, தேவன் தன்னுடைய ஊழியக்காரனை அங்கீகரித்தல் ஆகும். ஆகவே, அவை எல்லாம் நன்மைக்காகவே நடந்தது. நீங்கள் பாருங்கள்? யோபுவின் புஸ்தகம் எல்லா தலைமுறையினருக்கும் சாட்சியாக இருக்க வேண்டுமென்றே எழுதப்பட்டது. இப்போதும் தேவன் நன்மைக் கேதுவாகவே செய்கின்றார். நான் என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாச ஜெபத்தை ஏறெடுத்தேன் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசித்தால் அது ஆகும். காரியம் அப்படியே ஆகும். முடிவிற்காக மாத்திரம் காத்திருங்கள். 23இப்போது இந்த மாலை வேளையில் நேராக செய்திக்கு போவோம். பலர் நின்று கொண்டிருக்கிறார்கள். ரமாதாவில் நடைபெறப் போகும் கூட்டங்களில் இம்முறை அருமையான பிரசங்கியார்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே ரமாதாவில் வியாபாரிகள் சங்கம் நடத்தும் கூட்டங்கள். ஆகவே இந்த கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அங்கே இரவு விருந்தில் சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் இருக்க போகிறார். நிஸ்ஸானில் ஒரு சிறு பகுதியில் அடுத்த திங்கட்கிழமை இரவு இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறேன். நீங்கள் அப்போது அங்கு வர நேர்ந்தால் அந்தக் கூட்டத்திற்கும் வாருங்கள். அப்படியென்றால் நீங்கள்... சிறிது நேரத்திற்கு என்னுடன் நீங்கள் சற்று அவதியுற வேண்டும். ஏனென்றால் நான் அதை பற்றி பேசித்தான் ஆக வேண்டும். நிஸ்ஸானிலுள்ள ரமாதா பயணிகள் விடுதியில், அடுத்த திங்கள் கிழமை இரவு அக்கூட்டம் நடைபெற உள்ளது. நிஸ்ஸானிலுள்ள வெளிப்புறத்தில் பீனிக்ஸ் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆகவே மலைப் புறங்களில் வாழும் மக்கள் எவ்விதமாய் வாழ்கிறார்கள் என்பதை அங்கு வந்து பாருங்கள். 24இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமங்களுக்கு திருப்புவோம். என்னுடைய செய்திக்கு ஆதாரமாக சகரியா 14:6-7ஆம் வசனங்களை படிக்க விரும்புகிறேன். அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்கு தெரிந்தது. அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். நான் இப்பொழுது ''சாயங்கால தூதன்' என்னும் தலைப்பில் பேச விரும்புகிறேன். நமக்கு செய்தி கொண்டு வருபவர்கள் நாள் முழுவதும் வரலாம். இந்நாளைக் குறித்து அவர் உரைத்தபடியே அநேக செய்தியாளர்கள் உள்ளனர். ஆனால் அங்கே ஒரு சாயங்கால செய்தி என்பது வருகின்றது. இன்றிரவு ஒரு ஞாயிறு பாடசாலை பாடம் போன்று நாம் இதைக் குறித்து சிறிது நேரம் பேசுவோம். 25இப்பொழுது, சகரியா எதைக் குறித்து பேசுகிறான் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏனென்றால் அவன், “ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது, அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'' என்று கூறுகிறான். இப்பொழுது அது பகலுமல்லஅல்லது இரவும் அல்ல என்பதை நாம் அறிந்திருப்போமானால் அது ஒரு இருளார்ந்த நாளாயிருக்கும். தெளிவில்லாத மூடுபனி மிகுந்த நாளாய் இருக்கும். கிழக்கிலிருந்து நாகரீகம் மேற்கு நோக்கி பயணம் செய்தது என்பது நமக்குத் தெரியும். நம்மிடையே இருப்பதில் மிகப் பழைமையான நாகரீகம் சீன நாகரீகம் ஆகும். நாகரீகமானது சூரியனை பின்பற்றி கிழக்கிலிருந்து புறப்பட்டு மேற்காக வந்து இப்பொழுது நம்முடைய மேற்கு கடற்கரை யோரத்தில் இருக்கிறது. இன்னும் நேராகச் செல்வோமானால் நாம் மீண்டும் கிழக்கை அடைவோம். ஆகவே நாம் இப்பொழுது பாதையின் கடைசியில் இருக்கிறோம். 26நாம் சபையாக, சுவிசேஷம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது என்று விசுவாசிக்கிறோம். காலங்கள் தோறும் வந்த தலைசிறந்த செய்தியாளர்கள், இந்த கடைசி நாட்களிலும், கடந்த பல நூறு ஆண்டுகளாகவும் போராடியிருக்கிறார்கள் என்று விசுவாசிக்கிறோம். லூத்தரின் விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதல் மற்றும் வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதல், மற்றும் பெந்தெகோஸ்தே காரர்களின் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்னும் மூல தத்துவங்கள் இயற்கையானதும் ஆவிக்குரியதுமான சரீரத்தை நிறைவுப்படுத்துகிறது என்று விசுவாசிக்கிறோம். எப்பொழுதும் போல ஒரு குழந்தை பிறக்கும் போது முதலாவதாக காரியம் என்ன? முதலில் தண்ணீரும், பின்பு இரத்தமும் அதன் பின்பு ஜீவனும் வெளிப்படுகின்றன. 271 யோவான்; 5:7 கூறுகிறது. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். நீங்கள் குமாரனைக் கொண்டிராமல் பிதாவைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் குமாரனைக் கொண்டிருக்க முடியாது. பாருங்கள். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. ஆவி, ஜலம், இரத்தம். இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 1 யோவான் 5:8. இவைகள் ஒன்றாயிருக்கவில்லை. ஆனால் ஒருமைப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமான்களாக்கப்படலாம்; நீங்கள் பரிசுத்த ஆவியில்லாமல் பரிசுத்தம் பண்ணப்படலாம். ஆவியிலே, கிறிஸ்துவின் வல்லமையின் குடி கொள்ளுதலே பரிசுத்த ஆவியாகும். இப்பொழுது, இயற்கையானது ஆவிக்குரியதை ஒப்புமையாக்குகிறது என்று நாம் காணலாம். ஆகவே, சபையானது இப்பொழுது முழு முதிர்ச்சியுடன் இருக்கின்றது. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். நாம் இப்பொழுது தான் ஏழு சபைக் காலங்களை பார்த்தோம். அது அழகாக ஒப்பிட்டு காட்டுகிறது. 28சபையின் காலங்களைக் குறித்த ஒலி நாடாக்களை யாராவது கேட்டிருக்கிறீர்களா? சென்ற முறை அக்காலங்களைக் குறித்து கரும் பலகையில் வரைந்து காண்பித்தேன். பாலோகப் பிதா அதை உண்மை என்று அறிவார். தேவன் எனக்களிக்கும் ஊக்கத்தின்படி சிறந்த முறையில் என்னால் முடிந்தவரையில் நான் அவைகளை வரைந்து முடித்த போது, நீங்கள் படத்தில் காண்கிறவாறே (அநேகர் அந்த புகைப்படத்தைப் பார்த்துள்ளனர். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, அந்த ஒளி?) கர்த்தருடைய தூதன் சுமார் முந்நூறு அல்லது நானூறு பேர்களுக்கு முன்பாக அறைக்குள் நேராக வந்து சுவற்றின் பக்கத்தில் நேராகச் சென்று (அந்த ஒளியைப் போன்றே) சபையின் காலங்களின் படத்தை வரைந்தான். நாங்கள் எல்லோரும் நின்று கொண்டு, முதலாவது சபையின் காலம், இரண்டாம், மூன்றாவது, நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் சபையின் காலங்களை வரைந்ததை பார்த்தோம். 29அதை பார்த்த சில சாட்சிகள் இப்போது இங்கிருக்கிறீர்கள். அதை பார்த்தவர்கள் தங்கள் கைகளை உயர்த்துங்கள். ''இரண்டு மூன்று பேருடைய சாட்சிகளால்'' என்று வேதம் சொல்லுகிறது. அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் அலறி ஏதேதோ செய்தார்கள். ''நீங்கள் அதை பார்க்க விரும்பினீர்கள், இப்போது ஒவ்வொருவரும் அதை மனநிறைவோடு பார்க்கலாம் என்று நான் சொன்னேன். பகல் பதினொரு மணிக்கு அங்கு நின்று அந்த சுவரில் வரைந்தது. முதலில் ஆவி நிறைந்த காலத்திலிருந்து ஆவி புறக்கணிக்கப்பட்ட இருண்ட காலம் வழியாகச் சென்று பின்பு சரியான வழியில் திரும்பி வந்தது. அது நான் வரைந்திருந்த படம் போலவே இருந்தது. அதை நாங்கள் படம் எடுத்து சுவரில் தொங்கவிட்டிருக்கிறோம். தேவனுடைய ஆவியானவர் அதில் திருப்தி பெற்றவராய் அங்கு வந்து அதை சரி என்று உறுதிபடுத்தியிருக்கிறார்'' என்று நான் கூறினேன். தாங்கள் நிர்வாணிகளாயிருந்தும், தரித்திரர்களாயிருந்தும், குருடர்களாயிருந்தும் அதை அறியாது தாங்கள் எதற்கும் குறைவுபட்டவர்கள் அல்ல என்று கருதும் ஐசுவரிய சபையான லவோதிக்கேயா சபைக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? இப்பொழுது அவை எல்லாம் இணைகின்றது. 30கிழக்கில் உதிக்கிற அதே சூரியன் தான் மேற்கில் மறைகிறது. இப்போது நமது செய்திக்கு ஆதாரம் அமைக்க சிறிது நேரம் நிறுத்திக் கொள்ளுவோம். இந்த சூரிய குடும்பத்தில் இருக்கிற சூரியனை (sun) நமக்குத் தெரியும். தேவனுடைய ஞானத்தின்படியே தேவக்குமாரன் (SON) கிழக்கிலே தேவனுடைய ஒளியாகத் தோன்றினார். நாம் இப்பொழுது இரண்டாயிரம் வருடத்திற்கு பிறகு இருக்கிறோம். தேவனுடைய ஆழ்ந்த அறிவின்படி ஒருநாள் உண்டு. அது பகலும் அல்ல இரவும் அல்ல. அது ஒருவிதமான மந்தகாரமான நாளாயிருக்கும். ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்“ என்று அவர் சொன்னார். 31இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால் பரிசுத்த ஆவியானவர் முதலில் கிழக்கில் உள்ள மக்கள் மேல் இறங்கினார். அதன்பிறகு சபைகள் இணைக்கப்பட்டு விடப்பட்ட சிறு முனைகள் அடைக்கப்பட்டு சிறு சிறு காரியங்கள் சரி செய்யப்பட இருந்தது. அதின் பிறகு உலகத்தின் மேற்குபாகத்தில் சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாக வேண்டும். நாம் இப்பொழுது அந்த வேளைக்குள் இருக்கிறோம். நாகரீகம் கிழக்கில் ஒரு பெரிய நிலப்பிளவைப் போல (rift) தோன்றி காலப்போக்கில் எல்லாப் பாவங்களையும் கொண்டு வந்து மேற்கு கரையை, கடலிடுக்கை வந்து மோதினது. எனக்கு தெரிந்தவரை மேற்கு கரை தான் மிகவும் சீர்கேடான ஓர் இடமாகும். அவள் விழுந்து போனாள். நீ நினைக்கின்ற எந்த காரியமானாலும், பாவம், ஒழுக்கக்கேடு, விவாகம், விவாகரத்து, நரகத்தின் திறப்பிடமான ஹாலிவுட் ஆகியவை அவர்களுக்கு உள்ளன. அது முற்றிலும் சரி. 32நான் வேதத்தின் கலப்பில்லாத பரிசுத்தத்தில் நம்பிக்கை உள்ளவன். நம்முடைய மக்களுக்கு முன்னால் ஒரு உதாரணமாக இருக்கும் ஹாலிவுட் என்று அழைக்கப்படுகின்ற இந்த அழுகிப்போன காரியத்தில், ஒழுக்கக் கேட்டில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. நான் எப்பொழுதுமே அதற்கு எதிராக இருக்கிறேன். தேவனுடைய ஆவியை தன்னில் கொண்டுள்ள ஒரு மனிதன் அதற்கெதிராகவே இருப்பான் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தேவனுடைய ஆவி, “அது தவறு'' என்று அவனிடம் சாட்சியளிக்கும். இப்பொழுது நான் நினைக்கிறேன். அது ஒரு... நம்முடைய பெண்களை நிர்வாணிகளாக்க, முன்பெல்லாம் விளம்பரத்திற்கு வேண்டிய நிர்வாணப் பெண்களுக்காக, நாம் பாரீஸ் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுதோ நம்முடையதைப் பெற்றுக்கொள்ள பாரிஸில் உள்ளவர்கள் இங்கு வருகிறார்கள். ஹாலிவுட் உலகத்திற்கு வழிகாட்டியாக நிற்கிறது. பிரான்ஸ் நாட்டை மிஞ்சத்தக்கதாக இன்றைக்கு நம்மிடையே உள்ள நிர்வாண நாகரீகம் (அதைக் குறித்து நினைத்துப் பாருங்கள்!) அந்த குடிவெறி, சண்டயிடுதல், சீர்கேடான ஒரு இடம். ஆனால் இருந்தாலும் அவை எல்லாவற்றையுமே ஹாலிவுட் தோற்று போக செய்கிறது. நம்முடைய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படுகிற எல்லா காரியங்களும் தணிக்கை செய்யப்படாத கீழ்த்தரமான நகைச்சுவைகள் அழுகிப்போன ஒழுக்கக்கேடான காட்சிகள் தான். அது எல்லாவற்றிற்குள்ளும் புகுந்து கொண்டிருக்கிறது. ஆகவே மக்கள், அந்த பிசாசு... ஆதி பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம் அநேக வருடங்களுக்கு முன் நம்முடைய பிள்ளைகளை திரைப்படத்திற்கு செல்வதற்கு கூட நாம் அனுமதிக்க மாட்டோம். ஆனால் இப்பொழுதோ பிசாசு அழகாக நம் வீடுகளுக்குள் கொண்டு வந்து வைத்து விட்டான். நீங்கள் பாருங்கள்? ஆகவே திரைப்படக் காட்சிகளை நேராக வீடுகளுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டான். 33இப்பொழுது, உலகமானது இத்தகைய சீர்கேட்டிற்குள் சென்று விட்டதை நினைக்கும் போது மிக பயங்கரமான ஒரு காரியமாகஇருக்கிறது. ஏனென்றால் எல்லாவித குப்பைக் கூளங்களும் நாகரீகத்தோடு சேர்ந்து இவ்வழியாக மிதந்து வந்துவிட்டன. கர்த்தருக்கு சித்தமானால் இந்நாட்களில், “இறங்கு வரிசையில் எண்ணுதல்'' (Count Down) என்னும் தலைப்பில் நான் ஒரு செய்தி கொடுக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் வரம்பு மீறிவிட்டீர்கள் என்பதை நான் அறிவேன். இவ்விதமான காரியங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எல்லா காலங்களிலும் தேவன் தன் சபையில் ஏதாவதொன்றை செய்கிறார். நாம் இப்போது கடைசி காலத்தில் இருக்கிறோம். கர்த்தருக்கு நன்றி. 34ஒவ்வொரு காலமும் தன்னுடைய செய்தியையும், செய்தியாளனையும் பெற்றிருந்தது. அவ்வாறு இருக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தார். ஒவ்வொரு... சபை காலங்களிலும் கூட, ஒவ்வொரு சபையும் ஒரு செய்தியாளனை, தூதனை பெற்றிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காலத்திலே ஜீவித்தனர்; ஆகவே வேறொருவன் (தூதன் - தமிழாக்கியோன்) உள்ளே வந்த போது; இவன் (தூதன்) வெளியே சென்றான்; பிறகு வேறொருவன் உள்ளே வந்தான்; அப்படியே ஏழாம் சபையின் காலம்வரை தொடர்ந்து வந்தது; ஒவ்வொரு நட்சத்திரம், ஒவ்வொரு சபையின் தூதன், ஒவ்வொரு செய்தியாளனும் வந்தான். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தில் கடைசி சபையின் காலத்தில் ஒரு எக்காள முழக்கமும், சத்தமிடுகிற ஏழு சத்தங்களும் முழங்கினது என்பதை நாம் காண்கிறோம். அவைகள் எழுதப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏழு முத்திரைகள் புத்தகத்தின் பின்புறத்தில் இருந்தன. புத்தகத்தின் பின்புறத்தில் இருந்த அது முத்தரிக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகமானது எழுதப்பட்ட பின் அங்கே அது புத்தகத்தின் பின்புறத்தில் முத்தரிக்கப்பட்டது. அவைகள் என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ''ஏழாம் தூதன் தன்னுடைய செய்தியாகிய எக்காளத்தை தொனிக்கும் நாளிலே'' என்று கூறுகிறது. இப்பொழுதுள்ள பூமிக்குரிய தூதன். ஏனெனில் இந்த தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்தான். இது பூமியில் நடந்தது. தூதன் என்பவன் ''ஒரு செய்தியாளன்'' அந்த காலத்திற்குரிய செய்தியாளன். 35அந்த தூதனின் தலைக்கு மேல் வானவில்லிருந்தது என்பதை கவனிக்கிறோம். அந்த தூதன் தன் கைகளை உயர்த்தி, ''இனி காலம் செல்லாது'' என்று சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டு கூறினான். (இந்த ஏழு சத்தங்களும் ஒலித்த போது ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினர். அப்போது அவர் “இவைகளை எழுதாதே, முத்திரை போட்டுவை'' என்று சொன்னார். நாம் அதை புத்தகத்தின் பின்புறத்தில் பார்த்தோம். ஆனால் ஏழாம் தூதன் தன்னுடைய செய்தியை அந்த நாளிற்குரிய தன் தீர்க்கதரிசனத்தை கூறி முடிக்கையில், ''தேவ இரகசியம் யாவும் நிறைவேற வேண்டும்“ வேதம் அவ்வாறு கூறுவதை எல்லோரும் அறிவார்கள். ''தேவ ரகசியம். தேவன் என்றால் என்ன, தேவன் எனப்படுவது யார்? மற்றும் ஞானஸ்நானத்தைக் குறித்த காரியங்களும் மற்ற காரியங்களும் அந்த நாளிலே ஒரு தெளிவாக முடிவிற்கு வர வேண்டியதாயிருக்கிறது. (வெளிப்படும் - தமிழாக்கியோன்) 36ஒவ்வொரு செய்தியாளனும் தன்னுடைய செய்தியை கொண்டிருந்தான். அந்தந்த காலத்திற்குரிய செய்தியும் செய்தியாளனும் மிகச் சிறந்த ஒரு காரியம் என்னவென்றால் ஒவ்வொரு செய்தியாளனும்... தேவன் அந்தந்த காலத்திற்குரிய செய்தியாளனை அந்த காலத்தின் கடைசி நேரத்திலே தான் அனுப்பினார் என்பதை நாம் சபையின் காலங்களின் மூலமாக பார்த்தோம். காலத்தின் துவக்கத்தில் அல்ல, முடிவில். (இன்றிரவு நாம் பழைய ஏற்பாட்டிற்குச் சென்று, அதே காரியம் தான் அங்கும் இருப்பதை நாம் காண்போம்.) இப்பொழுது, லூத்தரின் காலம் மறைந்து கொண்டிருக்கையில், அப்பொழுது வெஸ்லி உள்ளே வந்தார். வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதல் மறைந்த பின்பு பெந்தெகோஸ்தேயின் காலம் வந்தது. பாருங்கள்? கடந்து போகப்போகிற காலத்தின் கடைசியில் தான் எப்பொழுது ஒரு செய்தியாளன் வந்து ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்துகிறான் என்பதை கவனியுங்கள். ஒவ்வொரு காலத்திலும் அவ்விதமாகவே நடந்தது. அது உண்மை என்பதை நாம் அறிவோம். 37வேதாகமம் முழுவதும், ஒவ்வொரு சமயத்திலும் இது தான் திரும்பத் திரும்ப சம்வித்தது. பழைய காலம் மறைகின்ற வேளையில் முடிவுறுகின்ற நேரத்தில் புதியதான ஒன்று தோன்றுவதையும், தேவன் செய்தியாளனை அனுப்புவதையும், இந்த பரிசுத்த வேத வசனங்கள் முழுவதிலும் நாம் காணலாம். ஆகவே, எப்பொழுதுமே, ஒவ்வொரு சமயத்திலும் ஒரு செய்தியாளன் வரும் போது எப்பொழுதுமே தவறாத வார்த்தைக்கு திரும்பவும் வரும்படிக்கு அழைக்கிறான். இது இயேசு கிறிஸ்துவினுடைய முழு வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதிலிருந்து ஒன்றைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. இது இயேசு கிறிஸ்துவினுடைய முழு வெளிப்பாடு ஆகும். இதைக் குறித்து எப்பொழுதுமே நாம் நிச்சயமாக இருப்பதற்கான ஒரே வழி என்னவென்றால், இந்த வெளிப்பாட்டைக் குறித்ததான முரண்பாடான ஒரு காரியம் நம்மிடையே ஒன்றாய் இருக்கும். பாருங்கள்? அது, ''வார்த்தைக்கு திரும்புங்கள்'' என்று எப்பொழுதுமே அழைப்பதாகும். 38வேதத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்திலும், ஒவ்வொரு காரியத்திலும், அந்தந்த காலத்தை திரும்பவுமாக அழைக்க எப்பொழுதுமே தேவன் ஒரு தீர்க்கதரிசியை உபயோகிக்கின்றார். அவர் எந்த ஒரு சமயத்திலும் தவறினதேயில்லை. அவர் எப்பொழுதுமே ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். ஆகையால், இப்பொழுது ஏன் அவ்வாறே செய்கின்றார்? ஏனென்றால் வேதம் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகின்றது'' என்று கூறுகிறது. அந்த வார்த்தையை வெளிப்படுத்துபவனிடத்தில் வருகின்றது. என்னை யாரும் தவறாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பாருங்கள்? நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் நான் விழையவில்லை. ஆனால் நான் அழைப்புக்கு நான் உண்மையும் உத்தமுமாயிருக்க விரும்புகிறேன். நாம் அவ்விதம் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். 39இப்பொழுது, தேவன் எப்பொழுதுமே ஒரு தீர்க்கதரிசியை, ஒரு மனிதனை உபயோகிக்கின்றார். நீங்கள் ஒரு கூட்டம் மனிதரை பயன்படுத்துவீர்களானால் பலவிதமான தெளிவற்ற கொள்கைகளைப் பெறுவீர்கள் (பாருங்கள்?). ஒவ்வொரு மனிதன், இரண்டு மனிதன். எப்பொழுதுமே பூமியில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகளை ஒரே சமயத்திலே அவர் கொண்டிருந்ததே கிடையாது. அவர் ஒருவனை எடுத்துவிடுகிறார். ஆகையால் அடுத்த நாளிற்குரிய, வேறொரு செய்தியுடன் அந்த ஸ்தானத்தை அடுத்தவன் (அடுத்த தீர்க்கதரிசி - தமிழாக்கியோன்) எடுத்து கொள்ள இயலும். எப்பொழுதுமே அவர் இரண்டு பேரை கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு சமயத்திலும், ஒவ்வொருவரைத் தான் அவர் கொண்டிருப்பார். ஆகையால் முடிவில்லாத தேவன் தமது திட்டங்களை எப்போதுமே மாற்றுவது கிடையாது. அவர் எதைக் கொண்டு தொடங்கினாரோ எப்பொழுதுமே அதில் தான் கண்டிப்பாக அவர் நிலைத்திருக்க வேண்டும். அதன் காரணத்தால் தான் அவர் என்ன கூறுகின்றாரோ அதன் பேரில் நாம் நம்பிக்கை வைக்க முடிகின்றது. அவர் மாற முடியாது. தேவனில் கொண்டிருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் அவர் ஒரு மனிதனை இரட்சித்தார் என்றால், அடுத்த மனிதனும் அவ்விதமாகவே இரட்சிக்கப்பட வேண்டும். 40தேவன் தன்னுடைய படைப்புகளாகிய உயிரினங்களிடம் ஐக்கியம் கொள்வதற்காக ஒரு நிலையை அமைத்த போது, ஆதாம் தனக்குத்தானே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள முனைந்தான். தனக்கும் தன் மனைவிக்கும் அத்தி இலைகளால் இடைக் கச்சைகளை செய்தான். தேவன் அதை நிராகரித்தார். ஆகவே, எந்த அடிப்படையில், அல்லது எந்த செயல் முறையில் மனிதனை சந்தித்து அவனுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தார். அது சிந்தப்பட்ட இரத்தமே ஆகும். அதை அவர் மாற்றவேயில்லை. இப்போது மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும் ஒருவர் ஒருவர் குலுக்கி கொள்ளலாம். ஆனால் அடிப்படையாக மெதோடிஸ்டாக இருப்பதாலும், பாப்டிஸ்டாக இருப்பதாலும் நமக்கு பொதுவானது ஒன்றும் கிடையாது. நான் பாப்டிஸ்டுகளுக்காகவும், நீங்கள் மெத்தோடிஸ்டுகளுக்காகவும் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. ஆனால் எல்லா விசுவாசிகளும் தான் சந்திக்கத்தக்கதான் ஒரே ஒரு அடிப்படை தான் உண்டு. அது சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே ஆகும். அங்கே தான் நாம் சந்தித்து இவ்வெல்லாக் காரியங்களையும் அப்புறப்படுத்துகிறோம். ஆகையால், நாம் எல்லாரும் ஒரு அமைப்பாக வர முடியாது. நாம் அதை செய்ய முடியாது. 41ஆனால், இந்த சிறு அமைப்புகளில் தேவன் இருக்கின்றார் என்று நான் நினைக்கிறேன். முழு காரியத்திலும். ஆனால் மக்கள். ஏனெனில் நாம் வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் பலவித கோணங்களில் பார்க்கிறான். இரண்டு மனங்கள் சரியாக ஒன்றுபட்டிருக்காது. இரண்டு நபர்கள் தாங்கள் பரிபூரணமாக ஒன்றுபட்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் அவ்விதமாக இருப்பதில்லை. இரண்டு மூக்குகள் ஒன்றாக இருப்பதில்லை. இரண்டு பெருவிரல் சுவடுகள் ஒன்றாய் இருப்பதில்லை. பாருங்கள்? நாம் வித்தியாசப்பட்டவர்களாய் உண்டாக்கப்பட்டிருக்கின்றபடியால், நம்மிடையே வித்தியாசப்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இருந்தாக வேண்டும். ஆனால், தேவன் எப்பொழுதுமே ஒரு தனிப்பட்ட நபருடன் கிரியை செய்கின்றார். நீங்கள் மெதோடிஸ்டு ஆக இருப்பதினால் தேவன் உங்களை இரட்சிக்கவில்லை, நீங்கள் பாப்டிஸ்டாக இருப்பதினால் தேவன் உங்களை இரட்சிக்கவில்லை; நீங்கள் பெந்தெகொஸ்தேயினராக இருப்பதினால் உங்களை இரட்சிக்கவில்லை. அவர் உங்களோடு தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதினால் உங்களை இரட்சிக்கிறார். நீங்கள் அதை ஏற்று கொண்டீர்கள் என்கின்ற அடிப்படையில் நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஆதலால் தேவனால் உங்களுடன் ஈடுபாடு கொள்ள இயலும். தன்னுடைய சபையின் கட்டளையின்படி அவர் உன்னுடன் ஈடுபடுவதில்லை. ஒரு தனிப்பட்ட நபராகவே அவர் உன்னுடன் ஈடுபடுகின்றார். ஆதலால் தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிகளை, பழைய, புதிய ஏற்பாட்டு செய்தியாளர்களை அனுப்புகையில், அவர் ஒரு மனிதனுடன் பேசுவார். அந்த மனிதன் செய்தியை கொண்டு வர வேண்டும். மற்றவர்கள் அவனிடமிருந்து அதே செய்தியை எல்லாவிடங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால் தலைமை அலுவலகம் (headquarters) ஒன்று இருந்தாக வேண்டும். தேவன் அதை எப்பொழுதும் வைத்திருக்கிறார். இன்றிரவு அவர் அதை கொண்டிருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். அவர்தான் பரிசுத்த ஆவியானவர் நாம் அதை உண்மையாகவே அறிந்திருக்கிறோம். அது பரிசுத்த ஆவி ஆகும். இப்பொழுது சில குழுக்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய தலைமை அலுவலகம் ஆகும். அந்த மணி நேரத்திற்குரிய தேவனுடைய செய்தியாளன் அவரே ஆகும். 42இப்பொழுது, தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியினிடத்தில் தான் வரும். வார்த்தைக்குரிய உண்மையான தீர்க்கதரிசியாக அவர்கள் இருப்பார்கள் என்றால், தேவன் அந்த தீர்க்கதரிசியை கொண்டு தன்னுடைய வார்த்தையை உறுதிபடுத்துகிறார். இப்பொழுது, காலங்கள் தோறும் அநேக பொய்யான கள்ளத் தீர்க்கதரிசிகளை நாம் கொண்டிருந்தோம். நாம் பழைய ஏற்பாட்டிற்கு செல்வோமேயானால், அவர்கள் எழும்பி கர்த்தருடைய நாமத்தில் பேசினார்கள், உரைத்தார்கள் என்று நாம் காணலாம். அது சரியானதாய் இருக்கவில்லை. அதனிடம் செய்வதற்கென்று தேவனிடம் ஒன்றும் இருக்கவில்லை. தம்முடைய சொந்த வார்த்தையைத் தவிரவேறெதையும் அவர் உறுதிபடுத்துவதில்லை. எப்படியாயினும் அவர் அவ்விதமாக தன்னுடைய வேலையை காரியங்களை செய்யமாட்டார். பாருங்கள்? தேவன் தன்னுடைய வார்த்தையை மாத்திரமே உறுதிப்படுத்துகிறார் என்பதை சற்று நினைவில் கொள்ளுங்கள். ஒரு உண்மையான தீர்க்கதரிசி மாத்திரமே.... நீங்கள் ஒரே ஒரு வழியைக் கொண்டுதான் அவன் உண்மையான தீர்க்கதரிசியா இல்லையா என்று கூற முடியும். அது வார்த்தையினால் மாத்திரமே. அவனை மதிப்பீடு செய்து நிதானிக்கும் வழி அதுவேயாகும். 43இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், மிகாயாவின் நாட்களில், அங்கே ஆகாபிற்கும், யோசபாத்திற்கும் முன்பாக நானூறு எபிரேய தீர்க்கதரிசிகளும் நின்று, கர்த்தர் உரைக்கிறதாவது, புறப்பட்டு சென்று வெற்றி பெறுங்கள்'' என்று கூறினார்கள். அடிப்படையான விதத்தில் அவர் சரியாகத்தான் இருந்தனர். அப்பொழுது அவர்களால் வெறுக்கப்பட்ட மிகாயா காட்சியில் அழைக்கப்பட்டான். இப்பொழுது அது காணப்பட்ட விதம்... நானூறு (பிலேயாமின் தீர்க்கதரிசிகளை நான் குறிப்பிடவில்லை. எபிரேய தீர்க்கதரிசிகளும் எழுந்து நின்று ''கிலேயாத்திலுள்ள ராமோத்திற்கு செல்லுங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வெற்றி செழிப்படைவீர்கள்'' என்று ஒருமனதுடன் கூறினார்கள். அகவே அந்த மனிதர்கள் மாய்மாலக்காரர் அல்லவே அல்ல, அவர்கள் முற்றிலுமாக ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய...... 44அப்படியானால் இம்லாவின் குமாரனான மிகாயா அங்கு வந்து அவர்களுக்கு எதிர்மறையாக ஏன் தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். இப்பொழுது, அதை கூறுவதற்கு அவனுக்கு தைரியம் தேவையாயிருந்திருக்கும். அது அவர்களை குற்றப்படுத்தியிருக்கக் கூடும். பாருங்கள்? அவன் சொன்னது சரிதான் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அங்கு நின்றிருந்தால் அவன் கூறியது சரி என்று எப்படி அறிந்திருக்க முடியும்? அதைச் செய்வதற்கான உங்களுக்குள்ள ஒரே ஒரு வழி, அந்த மனிதன் என்ன கூறுகிறான் என்பதை எடுத்து வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும். பாருங்கள்? இப்பொழுது மிகாயா சரியாக வார்த்தையின் பேரில் நின்றிருந்தான். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையை பெற்றிருந்த அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியா, ஆகாபையும் யேசபேலையும் எல்லோரையும் சபித்திருந்தான். பாருங்கள்? சபிக்கப்பட்டவர்களை மீண்டும் தேவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? பாருங்கள்? அதனால் தான் அது அவ்வாறு கிரியை செய்யாதிருந்தது. 45இப்பொழுது தேவன் தன்னுடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறவராக இருக்கிறார் என்று நாம் கண்டு கொண்டோம். அந்த தீர்க்கதரிசியினுடைய வார்த்தை, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், அது... அவன் வார்த்தையின்படியே பேசுகின்றான். ''அவர்கள் பிரமாணத்தின்படியும் தீர்க்கதரிசிகளைப் பின்பற்றியும் பேசாவிட்டால் அவர்களிடத்தில் வெளிச்சம் இல்லை'' என்று வேதத்தில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பொழுது கூப்பிடுவான்... இந்த செய்தியாளன் வெளியே அழைக்கப்பட்டவர்களை வெளியே அழைக்கின்றான். தேவனுடைய வார்த்தையின்படி அவன் சரியாக இருக்கிறான். தான் சரியானவன் என்பதை நிரூபிக்கிறான். கவனியுங்கள், இப்பொழுது நாம் சில சாட்சிகளை அழைத்து கேட்போம். 46உலகம் பெருவெள்ளத்தால் அழிக்கப்படுவதற்கு முன்பிருந்த கடைசி காலத்திற்கு தேவனுடைய சாட்சியாக நோவா இருந்தான். பெருவெள்ளத்தால் அழிக்கப்படும் முன் இருந்த முழு உலகத்திற்குமே (Antediluvian World) அவனுடைய செய்தியானது எவ்வளவு முரண்பாடாயிருந்தது என்பதை இப்பொழுது பாருங்கள். என்ன அவன் ஏன் ஒரு பைத்தியம் பிடித்தவனாகக் கருதப்பட்டான். ஏன? அவன்... ஆனால், இன்னுமாய் கர்த்தருடைய வார்த்தையை அவன் சரியாகக் கொண்டிருந்தான். இப்பொழுது தேவன் நோவாவிடம், ''பாவங்களை பொறுக்க முடியவில்லை'' என்று கூறினார். ஜனங்கள் பாவம் செய்ய ஆரம்பித்த போது, தேவன் கீழே இறங்கி வந்தார். நோவா கடைசி கால செய்தியை பிரசங்கித்தான். எப்பொழுது அது நிகழ்ந்தது? கடைசி நேரத்திற்கு சற்றுமுன்பதாக இந்த செய்தியாளன், தூதன் எழும்பினான். கடைசிக் காலத்திற்கான செய்தியோடு தேவன் இந்த தீர்க்கதரிசியை அனுப்பினார். அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர். கேலிக்குரிய நிலைக்கு ஆளானான். பரிகாசம் செய்யப்பட்டான். அவனால் தன்னுடைய வீட்டாரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அது சரி. அவனை யாரும் நம்பவில்லை. ஆனால் அவன் கடைசிகாலச் செய்தியை உடையவனாயிருந்தான். இப்பொழுது, விசுவாசியாதவர்கள் எல்லோரும் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டனர். செய்தியை விசுவாசித்தவர்களோ இரட்சிக்கப்பட்டனர். தேவன் அவர்களுக்கு ஜீவனை அளித்தார். அவர்கள் இரட்சிக்கப்பட்டனர். ஆனால் அதை விசுவாசிக்காதவர்கள் இழந்து போகப்பட்டனர். 47இப்பொழுது சிலவற்றை நான் ஒப்பிடுகிறேன். தேவன் எப்படி இதை மூன்று முறை செய்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். மூன்று தேவனுடைய பரிபூரண எண்ணாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, ''நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆகிய மூன்றில் தேவன் பரிபூரணப்படுகிறார். அவர் பரிபூரணமானவர். ஏனெனில் மூன்று என்பது அவருடைய பரிபூரணமாகும். ஐந்து என்பது கிருபையின் எண்ணாகும். ஏழு... தொழுகைக்குரிய ஆராதனைக்குரிய எண் பன்னிரண்டு ஆகும். ''உபத்திரவத்தின் எண் நாற்பது ஆகும். “யூபிலி (விடுதலை) ஆராதனை ஐம்பது ஆகும். ''பெந்தெகொஸ்தே'' என்றால் ஐம்பது என்று அர்த்தம். மோசே நாற்பது நாள் சோதிக்கப்பட்டான். கிறிஸ்து நாற்பது நாள் சோதிக்கப்பட்டார். நீங்கள் பாருங்கள்? இவை எல்லாம் நிழலாய் இருக்கின்றன. இப்பொழுது, தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். 48மூன்று அழிவுகளிருக்கின்றன. முதலாவது அழிவு நோவா பேழைக்குள் சென்ற போதும், இரண்டாவது அழிவு சோதோமை விட்டு லோத்து வெளியேறின போதும் நிகழ்ந்தன. கவனியுங்கள். இயேசு அவைகளை குறிப்பிட்டார். ''நோவாவின் நாட்களில் நடந்தது போலவும், லோத்துவின் நாட்களில் நடந்தது போலவும், மனுஷகுமாரனின் வருகையின் நாட்களிலும் நடக்கும்'' என்று இயேசு இவைகளைக் குறிப்பிட்டார். கவனியுங்கள், ஒருவன் உள்ளே சென்றான், மற்றொருவன் வெளியே வந்தான். அடுத்தது மேலே செல்வது? ஊ... பாருங்கள்? ஊ. ஊ... உள்ளே செல்லுதலும், வெளியே வருதலும், மேலே செல்லுதலும். இப்பொழுது, இதுதான் கர்த்தருடைய விதிமுறையாய் இருக்கிறது. பாருங்கள் இயேசுவும் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளை குறிப்பிட்டுள்ளார். ''நோவாவின் நாட்களில் நடந்தது போல'' பாருங்கள், ''லோத்தின் நாட்களில் நடந்தது போல, என்று இந்த இரண்டு தீர்க்கதரிசிகளை குறித்து இயேசு குறிப்பிட்டுள்ளார். ஆபிரகாம் தீர்க்கதரிசியாயிருந்ததால், ''அன்று இருந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் அவ்விதமாய் இருக்கும்'' பாருங்கள், இவ்விதமாக முன்பு இருந்தவைகளை குறிப்பிடுகிறார். 49எகிப்து காலத்தின் கடைசி நாட்களில் மோசே என்னும் இன்னொரு தீர்க்கதரிசி இருந்தான். தேவன் தன்னுடைய ஜனங்களை விடுவிக்கப் போகும் நேரத்தில் எகிப்தியர்கள் அவர்கள் மேல் வேலை ஏவுகிறவர்களாகவும், எஜமான்களாகவும் இருந்து அவர்களை மிகவும் மோசமாக துன்புறுத்தினார்கள். தேவன் எப்பொழுதும் போல் அவர்களுடைய அழிவுக்கு முன் ஒரு தீர்க்கதரிசியை கர்த்தருடைய வார்த்தையோடு அனுப்பினார். ஞாபகங் கொள்ளுங்கள், ஆபிரகாமிற்கு தேவன் (நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னால், நானூறு அல்லது அநேக வருடங்களுக்கு முன்பும் அவனுடைய சந்ததி (வித்து) அந்நிய தேசத்தில் அலைந்து திரிவார்கள். ஆனால் அவர்களை பலத்தகரத்தைக் கொண்டு வெளியே கொண்டு வருவேன் என்று செய்திருந்த வாக்குத்தத்தத்துடன், இந்த தீர்க்கதரிசி (மோசே - தமிழாக்கியோன்) சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான். மோசே எரிகிற முட்செடியில் தேவனை சந்தித்த போது அவர், ''என்னுடைய ஜனத்தின் கூக்குரலை கேட்டேன். அவர்களுடைய வேதனைகளைப் பார்த்தேன். என்னுடைய உடன்படிக்கையை நினைவு கொள்ளுகிறேன்'' என்று அவனிடம் சொன்னார். தன்னுடைய வார்த்தையை நினைவில் கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுதும் தன்னுடைய வார்த்தையை நினைவில் கொண்டுள்ளார். அவர் தவறுவதே கிடையாது. ஒவ்வொரு நேரமும் அவர் அதையே செய்தாக வேண்டும். நீங்கள் மனதில் வைத்து சிந்திக்க வேண்டுமென்பதற்காக இதை உங்களுக்கு சொல்லுகிறேன். வியாதியாய் இருந்த மக்களாகிய நீங்கள், வியாதியாய் இருந்த'' என்று நான் கூறினதை நீங்கள் கவனித்தீர்களா? 50இப்பொழுது, இதை கவனியுங்கள். தேவனால் மாறவே முடியாது என்பதை ஜனங்களாகிய நீங்கள் எல்லோரும் நினைவில் கொள்ளத்தான் வேண்டும். அவர் மாறாத தேவனாயிருக்கிறார். காலங்கள் மாறும் மக்கள் மாறுவார்கள். தேவன் நித்தியமானவர். அவரால் மாற முடியாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் அவ்விதமாகவே இருக்க வேண்டும். இதை நாம் தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிப்போமானால், அவர் கூறின எல்லாவற்றின் மேலும் நாம் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும். பாருங்கள்? இப்பொழுது அங்கே எவ்விதமாக அவருடைய செய்தி வருகிறது என்றும், எவ்வாறு தன்னுடைய செய்தியை அனுப்புகிறார் என்பதையும் நீங்கள் பாருங்கள். அவர் அதை மாற்ற முடியாது. அவ்விதமாகவே எப்பொழுதும் அவர் செய்திருக்கிறார். அவர் அவ்விதமாக எப்பொழுதுமே இருந்தாக வேண்டும். அந்த வழியாகவே அவர் எப்பொழுதும் செய்வார். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். எப்பொழுது அதைச் செய்வார்? அழிவிற்கு முன்னால், காலத்தின் கடைசியில் தான் அவர் தன்னுடைய ஜனங்களை அழைப்பதற்காக தன்னுடைய செய்தியை அனுப்புகிறார். (அவர்கள் எப்பொழுதுமே அதை குழப்பிக் கொள்கிறார்கள்) ஆகையால் இங்கே அவர்கள் வருகின்றனர். 51இப்பொழுது மோசேயின் நாட்களில் விசுவாசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அவிசுவாசிகள் அழிந்து போனார்கள். இப்பொழுது, மோசேயின் செய்தி தேவனிடத்திலிருந்து வந்தது என்று விசுவாசித்தவர்கள், மோசே தேவனால் உறுதிபடுத்தப்பட்டு, தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலொழிய அவர்கள் விசுவாசித்திருக்கவே மாட்டார்கள். அது அவனை ஒரு தீர்க்கதரிசி ஆக்கிற்று. அவன் அங்கே சென்று, “நாளை, சுமார் இந்நேரத்தில் நீங்கள் இந்த - இந்த காரியம் நடைபெறுவதை காண்பீர்கள்'' என்று அவன் கூறினான். அடுத்த நாளிலே அது நடந்தது. அவ்வளவுதான். கர்த்தருடைய நாமத்தில் பேசுகின்ற எந்த ஒரு தேவனுடைய உண்மையாக தீர்க்கதரிசியும் அதைச் செய்வான். ”நான் பார்வோனிடத்திற்கு செல்கிறேன், ஆனால் அவன் கடினப்படுவான். கடினப்பட்ட இருதயத்தை கொண்டிருப்பான். நான் உங்களை போக விடுவேன் என்று சொல்லுவான். ஆனால் போகவிட மாட்டான் என்று மோசே சொன்னான். அது அவ்விதமாகவே நடந்தது. அதை கண்ட மக்கள் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவன் என்று அறிந்து கொண்டு அவனை கனம் பண்ணினார்கள். அவ்விதமாக அவர்கள் செய்த போது மகத்தான காரியங்கள் சம்பவித்தன. 52ஆகவே கேலி பரியாசம் செய்து சிரித்து அவனுடைய செய்தியை ஏற்றுக் கொள்ளாத ஜனங்கள், மற்ற அவிசுவாசிகளுடன் சேர்ந்து அழிந்து போனார்கள். ஆனால் விசுவாசிகளோ வெளியே சென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர். அவர்கள் செய்தியாளனுடைய, தூதனுடைய செய்தியின் அபிஷேகத்தின் கீழ் சென்றனர். தன்னுடைய ஜனங்களை பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் கொண்டு வருவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணின மீட்பின் செய்தியாய் இருந்தது அது. அது அப்படியே நடந்தேறியது. ஏனெனில் தேவன் ஏற்கனவே அவ்வாறே கூறியிருந்தார். ஆகவே மோசே வந்தான். அந்நாளிற்குரிய உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாளனாக, தூதனாக அவன் இருந்தான். இப்பொழுது அது நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 53மோசே சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான் என்பதை நாம் பார்த்தோம். அது சரியே. காலம் மாறின போது பிரமாணத்திற்கும் கிருபைக்கும் இடையேயான வேளை வந்தது. அங்கே இந்த உரைக்கப்பட்ட மேசியா வர வேண்டிய வேளையும் வந்தது. அப்பொழுது ஜனங்கள் ஏதோ ஒரு மகத்தான குழுவை அமைத்து அதனுள் வித்தியாசப்பட்ட மனித பாரம்பரியங்களை உட்புகுத்தி, நியாயப்பிரமாணத்தை புரட்டிப் போட்டிருந்தார்கள். காலமானது மாறுகின்ற வேளையில் இயேசு வந்தார். வேறொரு தீர்க்கதரிசி தேவன் - தீர்க்கதரிசி. இப்பொழுது நீங்கள் ''அவர் தீர்க்கதரிசி அல்ல'' என்று சொல்லலாம். 'உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார்'' என்று அவரைத்தான் வேதம் குறிப்பிடுகிறது. நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு மாறும் இடைப்பட்ட கால நேரத்தில் அவர் தேவன் - தீர்க்கதரிசியாக இருந்தார். காலங்கள் முழுவதிலும் அவரைக் குறித்துதான் உரைக்கப்பட்டிருந்தது. மோசேயிடம் நியாயப்பிரமாணத்தை அளித்த பிறகு அது நடப்பிக்கப்படும் என்று அவர் கூறின போது, காலமானது மாறின போது, அவர் கிருபைக்கு திரும்பி வந்தார். அந்த வேளைக்குரிய தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசியை அவர் அனுப்பினார். இப்பொழுது, விசுவாசிகளை அவர் ஒன்று சேர்த்தார்; விசுவாசியாதவர்களை அவருடைய நாஸியிலே அழிந்து போனார்கள். அவர் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்பட்டனர்; விசுவாசிக்காதவர்கள் எல்லோரும் இழக்கப்பட்டுப் போனார்கள். 54நோவாவின் நாட்களில் சரியாக அதுதான் சம்பவித்தது. லோத்தின் நாட்களிலும் அது தான் சம்பவித்தது. மோசேயின் நாட்களிலும், இயேசு கிறிஸ்துவின் நாட்களிலும் இன்னும் மற்ற பிற நாட்களிலும் அதுவே சம்பவித்து. அவர்கள் செய்தியை இழிவாக கருதி அழிந்து போனார்கள். செய்தியை விசுவாசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இப்பொழுது, சபையின் காலம் வருகின்றது. ஜலப்பிரளயத்திற்கு முன்பு இருந்த நோவாவின் காலத்தில் நாம் வாழ்ந்தோம். நியாயப்பிரமாண காலத்திற்குள் நம் வந்தோம். பிறகு கிருபையின் காலமாகிய சபையின் காலத்திற்குள் வந்திருக்கிறோம். ஆகவே இப்பொழுது சபையின் காலாமானது முடிவடைந்து கொண்டிருக்கிறது. நாம் எல்லோரும் அதை அறிவோம். இப்பொழுது, தேவன் அந்த காலத்தில், அந்த இரண்டு காலங்களில் அவைகளைச் செய்தாரானால், அதேவிதமாகவே அவர் இருந்து, இந்த காலத்திற்கும் அதே போன்று செய்ய வேண்டியவராய் இருக்கிறார். ஏனெனில் அதைச் செய்வேன் என்று அவர் கூறியிருக்கின்றார். அவர் செய்வேன் என்று கூறியிருக்கிற வார்த்தையைக் கொண்டு இன்னும் சில நிமிடங்களில் அதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன் அவர் தன்னுடைய திட்டங்களை மாற்ற முடியாது. அவர் தேவனாயிருக்கிறார். அந்தக் காலங்களில் அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். 55இப்பொழுது நாம் சபைக் காலத்தின் முடிவில் வருகிறோம். அதைதான் இன்றிரவு நான் படித்து காண்பித்தேன். ''........சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்.'' இருள் சூழ்ந்த காலம் ஏராளமானவற்றை நாம் கொண்டிருந்தோம், ஆனால் வெளிச்சமானது வரும். முற்காலத்திலே வந்து காலங்களை மாற்றின அதே குமாரன் (Son) மறுபடியுமாக வருகின்றார்! அது பூமியிலிருந்து மகிமைக்கு செல்கின்றதாய் இருக்கும். நாம் அதில் செல்வோம். இந்த காலத்திலோ நாம் மேலே செல்கிறோம்! பாருங்கள்? அது சரி. உள்ளே, வெளியே, மேலே. நாம் கடைசிக் காலத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். நாம் வந்து கொண்டிருக்கிறோம் என்றல்ல, நாம் ஏற்கனவே கடைசி காலத்திற்கு வந்து விட்டோம். இந்தக் கடைசி காலத்தில் தேவன் எதைக் காண்கிறார்? ஏனைய கடைசி காலங்களில் சரியாக அவர் கண்ட அதே காரியத்தை தேவன் இந்த கடைசி காலத்திலும் காண்கிறார், அது விசுவாசம்! எப்பொழுதுமே அவர் வரும் போதெல்லாம் அவிசுவாசத்தை தான் காண்கிறார். அவர் காண்கிறார், தான் ஜனங்களுக்கென்று வகுத்த திட்டமானது.... 56அவருடைய கட்டளையின்படி அவர்கள் வாழ்ந்து பலிகளை செலுத்தியிருப்பார்களானால், அவர்கள் அதை விட்டு புறம்பாக சென்று விட்டனர். அவர் வந்த போது, அந்த காரியம் தவறாக நடை பெறுகிறதைக் கண்டார். அவர் பூமியின் மீது வந்த போது அதே காரியத்தைத் தான் அவர் செய்தார். ஜனங்களும், பரிசேயர்களும் இன்னும் மற்றவர்களும் நியாயப்பிராமணத்தின் பின்னால் இருப்பதைக் கண்டார். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? சிறிதளவும் கூட அதில் உத்தமமாயிராமல், அதை சேற்றைப் போல அழுக்காக்கி (Slop) ஏதோ ஒரு பழைய முறையை கைக்கொண்டனர், ''சபையின் காலாகாலமாக சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு அது மாத்திரமே தேவையாயிருந்தது“ ஆகவே இக்காரியங்களைத்தான் அவர் கண்டார். ஆகவே மீண்டுமாக அதைத்தான் அவர் காண்கிறார்! அதே காரியங்களையும், ஜனங்கள் மாறாமல் இருப்பதையும் அவர் காண்கிறார். ஆகவே அவர் தனது திட்டத்தையும் அனுப்புகையில் மக்கள் அதை விசுவாசிக்காமல் அழிந்து போனார்கள், அதை விசுவாசித்தவர்கள் ஜீவித்தனர். (இப்பொழுது அந்த இருவரைக் குறித்து, அது அதேவிதமாக இந்த நேரத்திலும் இருக்க வேண்டும். அதேவிதமாக இருக்க வேண்டும் இல்லை..... தூதனுக்கு, செய்தியாளனுக்கு பழையதிலிருந்து புதியதான ஒன்றை வேறுபிரித்தல் எப்பொழுதுமே ஒரு போராட்டமாக இருந்தது. வருகின்ற தூதனுக்கு, செய்தியாளனுக்கு எப்பொழுதுமே, அது ஒரு போராட்டமாக இருந்தது. செய்தியானது வேதப்பூர்வமாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் வரக்கூடியவரைப் பற்றியே முன்னுரைத்தனர். 57இப்பொழுது, இயேசுவை எடுத்துக்காட்டாக பார்ப்போம். நியாயப்பிரமாணத்தினின்று கிருபைக்கு மாறத்தக்கதான செய்தியை கொண்டு வர அவருக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆனாலும் அவ்விதமாக சம்பவிக்கும் என்று வேதம் கூறுகின்றது, ''மேசியா வந்து அன்றாட பலியை நீக்கிப் போடுவார்“ அது தீர்க்கதரிசிகளின் மூலமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் என்பதை நாம் அறிவோம். அவ்விதம் செய்வது அவருக்கு அது எவ்வளவு பெரிய காரியமாக இருந்திருக்கும். ஆனால் அவர் அதைச் செய்தார். வேதாகமத்தில் அவ்வாறு உரைக்கப்பட்டிருந்தால் அவர் அதைச் செய்தார். ஆனால் அன்றைய விசுவாசிகள் (விசுவாசிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் முற்றிலுமாக அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த பரிசேரையும், சதுசேயரையும் பாருங்கள், அவர்கள் தங்கள் சொந்த கற்பனைகளையும், முறைமைகளையும் உடையவர்களாய் இருந்தனர் ஆகவே அதை விட்டு அவர்களை யாருமே அசைக்கப் போவதில்லை. அதைத் தான் அவர்கள் விசுவாசித்தனர். அவர்களுடைய தாய், தந்தை, முப்பாட்டன், முப்பாட்டி அதை விசுவாசித்தனர். “மோசே இவ்விதமாகக் கூறியுள்ளானே!'' ஆனால் நியாயப்பிரமாணத்தை அளித்த அதே மோசே தான் இந்த நபர் (இயேசு - தமிழாக்கியோன்) வருவார் என்று கூறியிருந்தான். ஆனால் அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளத் தவறினார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையான தேவனுடைய வார்த்தையை பாரம்பரியங்களுள் வைத்து அதன் மூலக் கோட்பாட்டை, அடிப்படை சத்தியத்தை விட்டுவிட்டார்கள். அது அவ்விதமாகவே இருக்க வேண்டியதாயிருந்தது. 58ஒவ்வொருவரும் இன்னொருவர்வருவார் என்று முன்னுரைத்திருக்கிறதை கவனியுங்கள். ஒவ்வொரு தூதர்களும் (செய்தியாளர்களும்), செய்திக்கு பிறகு, அது சம்பவிக்கும் என்று முன்னறிவித்தனர். ஆனால் இப்பொழுதோ மக்கள் தாங்கள் பெற்ற அந்நாளிற்குரிய செய்தியை ஏற்றுக் கொண்டு அதோடு நின்றுவிட்டார்கள். நாம் புரிந்து கொள்ளும் வகையில் இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். லூத்தரை நாம் பார்ப்போம். லூத்தர் விசுவாசத்தால் நீதி மானாக்கப்படுதலை பிரசங்கித்தப் போது, அவர் அந்தக் காலத்திற்குரிய செய்தியாளனாகவும், சர்தை சபையின் தூதனாகவும் இருந்தார். அது சரி. இப்பொழுது கவனியுங்கள், அவர் செய்தியை பிரசங்கித்த போது லூத்தரன்களை அவர் ஒழுங்குபடுத்தினார் (அமைத்தார்). இப்பொழுது, லூத்தர் செய்தி பரப்பிக் கொண்டு சென்றார். பிலதெல்பியா சபையின் காலத்தில் வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்ற செய்தியோடு வந்த போது அதைக் காண லூத்தருக்கு சற்று கடினமாக இருந்தது. லூத்தரன்களால் அதை விசுவாசிக்கக்கூடாமல் போயிற்று. 59யாத்ரீகப் பரிசுத்தர்கள் (Pilgrim Holiness) மற்றும் சுதந்திர மெத்தோடிஸ்டுகள் மற்றும் இன்னும் பிற மக்களை பரிசுத்தமாக்கப்படுதலின் மீது வெஸ்லி நிலை கொள்ளச் செய்த போது, பேந்தேகோஸ்தே செய்தியானது வந்தது. என்ன, அதை விசுவாசிக்க ஒரு மெத்தோடிஸ்டுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அஹ், அஹ், நிச்சயமாக அவ்வாறே இருந்தது. பாருங்கள், அது ஒரு.... இன்னுமாய், ஒருவர் மற்றொருவரைக் குறித்து உரைக்கிறார், வேத பூர்வமாக உரைக்கிறார். வரப்போகின்ற அழிவைக் குறித்து ஏனோக்கு தன்னுடைய எடுத்துக் கொள்ளப்படுதல் மூலம் அறிவித்தான். தேவன் அவனை வீட்டிற்கு எடுத்துக் கொண்டார். அவன் ஒரு சாட்சியாக இருந்தான். ஆபிரகாம் அவர்களிடம் மோசேயைக் குறித்து கூறினான். மோசே மேசியாவைக் குறித்து கூறினான். இவ்விதமாக அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கூறினார்கள். மேசியா இந்தவேளை எப்படியாயிருக்கும் என்பதைப் பற்றி கூறினார். நீங்கள் கூறலாம், ''அஹ், சகோ. பிரான்ஹாம்!'' 60ஓ, ஆம், அவர் கூறினார்! நாம்... நிறைய வேத வாக்கியங்களை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். அவைகளில் இரண்டு அல்லது மூன்றை நான் குறிப்பிடுகிறேன். இப்பொழுது மத்தேயு 24-ஆம் அதிகாரத்தை எடுத்து என்ன சம்பவிக்கும் என்று அவர் கூறியுள்ளதை நாம் படிப்போம். எவ்வாறு ராஜ்ஜியங்களுக்கு விரோதமாக ராஜ்ஜியம் எழும்பும். ஆனால் அங்கே அவர், ''நோவாவின் நாட்களில் நடந்தது போலவும், லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் மனுஷகுமாரனுடைய வரும் நாட்களிலும் நடக்கும்'' என்று கூறியுள்ளதை நினைவு கூறுங்கள். அவர் அதை முன்னறிவித்தார். இக்காரியங்கள் சம்பவிக்கும் என்று அவர் முன்னுரைத்திருக்கிறார். “இப்பொழுது, இவையாவும் சம்பவிக்கையில், அந்த வேளையானது வரவில்லை'' இன்னும் மற்றவைகளை அவர் கூறினார். ஆனால், ”அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதிலும், மற்ற மரங்களிலும், இளங்கிளை தோன்றி துளிர்விடும் போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும் போது, அந்த நேரமானது சமீபமாய் இருக்கிறது, வாசல் அருகே வந்திருக்கிறது'' என்று அவர் கூறினார். இப்பொழுது, நீங்கள் இதைக் காணும் போது? அத்திமரம் துளிர்விடுவதும் மற்ற மரங்கள் துளிர்விடுவதும் ஒரு அடையாளமாக இருக்கிறது. ஆகவே அத்திமரம் எப்பொழுதுமே இஸ்ரவேலாக இருக்கின்றது. 61யோவேலும் அதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றான். பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சிதின்றது, இன்னும் மற்ற காரியங்களை தின்று போட்டது“ ஆனால் தேவன், ''கர்த்தர் சொல்லுகிறதாவது நான் திரும்ப அளிப்பேன்'' என்று வாக்குரைத் திருக்கின்றார். ஆனால் அதனுடைய ஆவிக்குரிய நிலைக்கு அதை திருப்புவதற்கு முன்னர், புறஜாதி சபையானது வெளியே எடுக்கப்பட வேண்டும். அவைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் கொண்டிருக்க மாட்டார். இப்பொழுது, வேத வாக்கியங்களை உங்களால் சிக்கலாக்கி முடிச்சிபோட முடியாது, பாருங்கள்? ஒரே நேரத்தில் இரண்டு சாட்சிகளை, பெரிய சாட்சிகளை அவர் வைத்திருந்தது கிடையாது. அவர். அதுபோல ஒரே நேரத்தில் அவர் இரண்டு சபைகளை கொண்டிருப்பதில்லை. 62முதலில் புறஜாதி சபை எடுக்கப்பட்டாக வேண்டும். பின்பு யூதர்களுக்கு தானியேலின் எழுபது வாரத்தின் கடைசிபாகம் நிறைவேறும். தீர்க்கத்தரிசனத்தின்படி எழுபது வாரங்களின் முடிவில் அதாவது மூன்றரை வருட முடிவில் மேசியா கொல்லப்பட்டார். இன்னமும் மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. பின்பு வெளிப்படுத்தல் புத்தகம் 11-ஆம் அதிகாரத்தில் இருக்கின்ற இரண்டு தீர்க்கதரிசிகள் பூமிக்கு வந்து யூதர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அப்பொழுது சபை எடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரவேல் ஒரு நாடாக ஆகியிருப்பதை நாம் காண்கிறோம்; அவள் (இஸ்ரவேல் நாட்டிற்கு - தமிழாக்கியோன்) சொந்த இராணுவம், பணம், கொடி, சொந்த தேசம் ஆகிவற்றை கொண்டவளாய் இருக்கின்றாள். அவள் ஐக்கிய நாடுகளின் அமைப்பில் (U.N) இருக்கின்றாள். அவள் ஒரு நாடாயிருக்கின்றாள்! என்ன, இஸ்ரவேல் தன்னுடைய சொந்த நாட்டில் இருப்பது, சரியாக இப்பொழுது நாம் நினைத்துப் பார்க்கின்ற அடையாளங்களில் இது ஒரு மகத்தான அடையாளம் ஆகும். ஆகவே, இயேசு கூறினார், “இஸ்ரவேல் தன் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்வதை காணும் இந்த சந்ததி, எல்லாம் நிறைவேறும் வரைக்கும் ஒழிந்து போகாது'' பாருங்கள், அவர் இந்த நாளைக் குறித்து பேசினார். 63இன்னும் ஒரு எடுத்துக்காட்டை உங்களுக்குத் தர விரும்புகிறேன். II.தீமோத்தேயு 3-ஆம் அதிகாரத்தில் கடைசி காலத்தில் உள்ள சபையைக் குறித்து, ''துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும் தேவ பிரியராயிராமல், சுகபோகப் பிரியராயும் இருப்பார்கள்'' என்று அவர் உரைத்திருக்கிறார். சபை உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், “தேவப் பிரியராயிராமல், சுகபோகப் பிரியராய் இருக்கிறார்கள், புதன்கிழமை இரவு ஜெப ஆராதனையில் பங்கு கொள்வதற்கு பதிலாக வீட்டிலேயே தங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண்கிறார்கள். ''அது பாப்டிஸ்ட் தான்'' என்று நீங்கள் கூறலாம். அது பெந்தேகோஸ்தேயினர்! நிச்சயமாக! ஆம் ஐயா. ஓ! ''துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், சுகபோகப் பிரியர்களாயும்'' அவர்கள் மூக்கிற்கு கீழாக வார்த்தை வைத்துப் பாருங்கள், அதை அவர்கள் காணவே மாட்டார்கள். அஹ்-அஹ். ''தேவப் பிரியராயிராமல், சுகபோகப் பிரியராயும்,'' தங்கள் மயிரைக் கத்தரிக்கக் கூடாது என்று ஸ்திரிகளிடம் கூறிப் பாருங்கள், எப்படியாயினும் கத்தரித்து விடுவார்கள். அஹ்-அஹ். ''தேவப் பிரியராயிராமல், சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள்.'' நீங்கள், “அது, தேவ நம்பிக்கையற்ற நாத்திகர்கள் தானே'' என்று கூறலாம். இல்லை! “தேவ பக்தியின், வேஷத்தைதரித்து அதின் பெலனே மறுதலிக்கிறவர்களாயும்,'' இப்போதைய உலக ஒழுங்கு முறைமைகளின் பயிலிடமாகிய, பேய் வகையான இந்த உலகத்திலிருந்து உங்களை விடுவிக்க கூடிய அந்த பெலன்...'' பெலனை மறுதலிக்கிறவர்களாய்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு” மற்ற ஜனங்கள் என்ன கூறினாலும் அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள். தேவனுக்கு முன்பாக தனிப்பட்ட மனிதனாக நீங்களே பதிலளிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். இந்த பெண் என்ன செய்கிறாள்? அல்லது அந்தப் பெண் என்ன செய்கிறாள்? இந்த மனிதன் என்ன செய்கிறான்? அல்லது அந்த மனிதன் என்ன செய்கிறான்? இந்த போதகர் என்ன சொல்லுகிறார்? அல்லது அந்தப் போதகர் என்ன சொல்லுகிறார் என்று கவலை கொள்ளாதீர்கள். அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள ஒன்று. ''வேஷத்தைத் தரித்து'', பாரம்பரியங்களின் பின்னால் சென்று, ''அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு'' அந்த நாளிலே நாம் ஜீவிக்கின்றோமா? நிச்சயமாக நாம் ஜீவிக்கின்றோம்! 64கடைசி சபையின் காலத்தில் உள்ளதை மறுபடியுமாக கவனித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர், இயேசு கிறிஸ்து தாமே, ''இவைகளை சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்.“ என்று கூறினார். ஆகவே வெளிப்படுத்தின விசேஷம் 3-ஆம் அதிகாரத்தில், இயேசு, இந்த சபைக் காலத்தைக் குறித்து பேசுகிறார். கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்து சாட்சி அளிக்கின்றார். அவர் கூறினார், ''சபையானது ஐசுவரியம் பொருந்தியதாகவும், வெதுவெதுப்பாகவும் ஆகிவிடும், லவோதிக்கேயா,'' இசையானது இசைக்கப்படும் போது சுற்றும் முற்றும் குதித்து கூச்சலிடும். பாருங்கள்? அது சரி. ஆனால் பரிசுத்தப்படுகின்ற ஜீவியம், சாட்சியின்லிருந்து அது வெகுதூரம் அகன்றிருக்கின்றது. 65நான்... தேவையில்லாமல் நான் உங்களை புண்படுத்த மாட்டேன். ஆனால் அண்மையில் தேவனுடைய பரதீசில் நான் இருந்த ஒரு தரிசனத்தை கண்டேன். உங்களிடம் உண்மையைத் தவிர வேறு எதையும் என்னால் கூற முடியாது. ஊழியக்காரர்களாகிய நாங்கள் இக்காரியங்களில் உண்மையுள்ளவர்களாய் இருந்து சத்தியத்தை பேசத்தக்கதாக எங்களுக்கு உதவி செய்யும் தேவனே! பாருங்கள்? குளிருமின்றி, அவ்வாறு இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஆகவே அவ்விதமாகவே அவர்கள் இருக்கப்போகின்றார்கள். லூத்தருடன் அது சரியாக இணைந்தது என்றால், அது பிலதெல்பியா காலத்தில் வெஸ்லியுடன் இணைந்தது. அது உரைக்கப்பட்டவாரே பூரணமாக இருக்க வேண்டும். அது அவ்வாறே உரைத்துள்ளது. ஆகவே லவோதிக்கேயாவிலும் சரியாக அவ்விதமாகவே இருக்கும். ''ஐசுவரியவான்கள், தேவைகள் ஒன்றும் இல்லை!'' நூற்றுக் கணக்கான டாலர்களை வைத்து நாம் கட்டிடங்களை எழுப்பலாம், எல்லா உலகக் காரியங்களையும், கேளிக்கைகளையும் வைக்கலாம், அருமையான சபைகளை நாம் கட்டலாம். அதெல்லாம் சரிதான், அதில் ஒன்றும் இல்லை, அது முற்றிலும் சரி தான். 66ஆனால் நான் கூற முயற்சிப்பது, அப்பொழுது செய்தியானது அவர்கள் பக்கமாக செல்ல ஆரம்பிக்கும் போது, நீங்கள் அவர்களுக்கு தேவையில்லை, ''நீ ஒரு முட்டாள், நீ ஒரு மதவெறி பிடித்தவன்! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ வேண்டிய ஒருவன்'' பாருங்கள்? ஓ, ஒருவேளை நீங்கள் ''இப்படிப்பட்ட ஒருவரை நான் போதகராக கொண்டிருக்க மாட்டேன்'' என்று நினைக்கலாம். எப்படியாயினும் அவர் உங்கள் போதகர் தான்! எலியா தன்னுடைய போதகர் என்று யேசபேல் ஒப்புக் கொள்ளவேமாட்டாள். ஆனால் நிச்சயமாக அவன் அவளுடைய போதகன் தான். அவன் இஸ்ரவேல் தேசத்திற்கு ஒரு உதாரணமாக, ஒரு செய்தியாளனாக அனுப்பப்பட்டான். ஆகவே, விலைமதிக்க முடியாத பரிசுத்த ஆவி, தேவனுடைய வார்த்தை தான் சபையை சீர்படுத்தி வார்த்தைக்கு திருப்பும் சபைக்கான செய்தியாளன், தூதன் ஆகும். நாம் அதைக் குறித்து பேசுகின்றோம், ஆனால் நீங்கள் ஒரு அசைவையும் காண்பதில்லை. அஹ்-அஹ், பாருங்கள், அக்காரியங்களை நாம் மிகவுமாக குழப்பிவிட்டுள்ளோம். 67''அவனைத் தூக்குங்கள், எப்படி நீங்கள் அவனை தூக்கிவிடுவீர்கள்?'' என்று யாரோ ஒருவர் சாட்சியில் கூறினதை நான் கேட்டேன். ஆகவே, ஓ, அந்த சிறிய கோட்பாடுகளை (isms) பெற்றுக் கொள்கிறார்கள்! யாரோ ஒருவர் ''விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். அப்படி என்றால் ஜெபிக்கும் பொழுது ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டு மற்றொரு கண்ணால் பார்க்க வேண்டும்'' என்று கூறினார். ''விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்'' (என்ன, விழித்திருங்கள் என்றால், ''கர்த்தருடைய வருகைக்காக விழித்திருங்கள்'' ஆகவே ஜெபம் பண்ணுங்கள் என்று அர்த்தம்) பாருங்கள், அது காரியத்தை புரட்டிப்போடுதல் ஆகும். ஆகவே, எந்த விதத்தில் நாம் அதைச் செய்கிறோம்? அது தேவனால் அமைக்கப்பட்டதோ, இல்லையோ. (ஆகவே பிறகு...) நம் யோசனையின் படி நாம் ஒரு சிறிய பாரம்பரியத்தை உருவாக்குகிறோம். ஆகவே முதலாவதாக காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நாம் வெளியே சென்று, நம்மைப் பின்பற்றத்தக்கதாக ஒரு சிறு குழுவை ஏற்படுத்தி, முக்கியத்துவம் கொண்டதாக சபையின் சரீரத்திலிருந்து அவர்களை இழுத்துவிடுகிறோம். அது சரி. சபையில் வந்து ஜெபித்து பிரச்சனையை தீர்த்து, சரீரத்தை அசையச் செய்வதற்கு பதிலாக, நாம் அக்காரியங்களைச் செய்கின்றோம். அது அமைக்கப்பட்ட ஒன்றோ இல்லையோ. நீங்கள் சத்தியத்தைப் பெற்றிருந்தால், சத்தியத்திலேயே நிலைத்து நில்லுங்கள். அது முற்றிலும் சரியானதே. ஆனால் சத்திய வேதமானது முதலாவதாக இருக்கட்டும்! கவனியுங்கள், இந்த... இந்த லவோதிக்கேயா காலம். 68ஆகவே, அந்த தீர்க்கதரிசிகள், அல்லது பரிசுத்த ஆவியானவர் பவுலின் மூலமாக பேசுகின்றார், அது மேசியா ஆகும். அது பவுல் அல்ல, அது கிறிஸ்து ஆகும்! ''பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாளில் இயேசு கிறிஸ்து மூலமாய்,'' எபிரேயர் 1-யை கவனியுங்கள், பரிசுத்த ஆவி, கிறிஸ்து, கிறிஸ்துவை மையமாக கொண்டுள்ள வார்த்தை. ஆகவே, அது கிறிஸ்துவை மையமாக கொண்டிருக்குமானால் அது... அது உண்மை, சத்தியம் என்று தேவன் உறுதிபடுத்துவார். அதன் காரணத்தால் தான் பெந்தெகோஸ்தே மக்களாகிய நீங்கள் மெதோடிஸ்டுகளின் பரிசுத்தமாகுதல் என்னும் விசுவாசத்தின்படி பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சரியாக வார்த்தையின் மேல் இருந்தீர்கள். லூத்தரன்கள் அதில் விசுவாசம் கொள்ளாமல் போனதன் காரணத்தால் தான் மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். நீங்கள் வார்த்தையின் மேல் நிலைத்திருந்தீர்கள். அவ்விதமாகத்தான் லூத்தரன்களாகிய நீங்கள் இரட்சிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டீர்கள். ஏனென்றால் உங்கள் செய்தியாளன் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்து, எல்லாவற்றிற்கும் சின்னமாக, அடையாளமாக இருந்த கத்தோலிக்க சபையை எதிர்த்தார். அவர்கள் (கத்தோலிக்கர் - தமிழாக்கியோன்) சபையில் மாத்திரமே விசுவாசம் கொண்டிருந்தனர்; நீங்களோ வேதாகமத்திற்கு திரும்பி வந்து, அந்த வேத சத்தியத்தை எடுத்து அதிலே நிலைகொண்டீர்கள். ஆகவே, பிறகு வெஸ்லி வேறொரு சத்தியத்துடன் வந்து அதிலே நிலை கொண்டார்; பெந்தெகோஸ்தேயும் வேறொரு சத்தியத்துடன் வந்து அதிலே நிலை கொண்டது. ஆகவே அது உண்மையென்று கண்டு அதை உங்களால் பிடித்துக்கொள்ள முடிகின்றது என்றால், முழுமையாக உண்மை என நிருபிக்கப்பட்ட காரியத்தை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது? எல்லாவற்றையும் விசுவாசியுங்கள்! 69இப்பொழுது, நாம் இந்த செய்தியாளர்களை, தூதர்களை பார்க்கையில், நாம் அறிந்து கொள்கிறோம். அந்த மகத்தான தேவன் - தீர்க்கதரிசி, கிறிஸ்து இந்த கடைசி நாட்களில் நடைபெறப் போகின்ற இவைகளை முன்னுரைக்கின்றதை நாம் பார்க்கின்றோம். அது எதைச் செய்கின்றது? அது பயிரின் காலத்தை (crop time) அறிமுகப்படுத்துகின்றது. இந்த கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கப் போகின்றது என்றும், பயிர் அறுவடை செய்யப்படப் போகின்ற காலத்தையும், நேரத்தையும் அது அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் அதைப் பார்க்கின்றீர்களா? இப்பொழுது, கடைசி நாட்களிலே இக்காரியங்கள் சம்பவிக்கும். எந்தவிதமான பயிருக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஒரு காலத்தில் வெளிச்சத்தைக் கொண்டிருந்த சபையை நாம் காண எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். (அவர்கள், சபை - தமிழக்கியோன்) அதிலிருந்து (வெளிச்சம் - தமிழாக்கியோன்) புறம்பே சென்று, உலக கவர்ச்சிக்குள் சென்று, முழுவதுமாக மெருகேற்றப்பட்டு (அது சரியல்லவா?) புறம்பே சென்று, ஏதாவது ஒரு தன்மையை உடைய ஒருவரை அங்கத்தினராக சேர்த்து, ஏதோ ஒன்றை ஞானஸ்நானம் பண்ணுவித்து பெந்தெகோஸ்தேயினர் என்று அழைத்துக் கொள்கின்றனர். தண்ணீர் ஒரு மனிதனை இரட்சிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தமே அதைச் செய்கிறது. தண்ணீரில் ஜீவன் இல்லை. இரத்தத்தில் உள்ள உயிர் அணுக்களில் இருந்து தான் ஜீவன் வருகின்றது. பரிசுத்தமாக்கப்படுதல் (sanctification) அந்த ஜீவனைக் கழுவி, பாவம் செய்ய வேண்டும் என்கிற இச்சையை ஒழிக்கின்றது. பிறகு பரிசுத்த ஆவி அந்த தூய்மையான பாத்திரங்களுக்குள் வந்து ஊழியத்திற்கென்று அதை வேறு பிரிக்கின்றது. பலிபீடம் அந்த பாத்திரத்தை தூய்மையாக்கிற்று. ஆனால் அந்த... அதன் நிறைவு தான் ஊழியத்திற்கென்று அதை (பாத்திரத்தை - தமிழாக்கியோன்) அமர்த்துகின்றது. அது ஊழியத்திற்கென்று வேறு பிரிக்கப்பட்டது. இப்போது அது ஊழியத்திற்குட்படுத்தப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் சபையை ஊழியப் பாதையில் நடத்திச் செல்லுகிறார். நான் மிகவும் விரும்புகிற ஒரு சிறிய பாடல். அவர்களெல்லாரும் மேலறையில் கூடியிருந்தார்கள். அவர்களெல்லாரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர். ஊழியத்திற்கான வல்லமை வந்தது (ஆம்). பாடலின் மீதியான பாகம் கூறுகிறது; அந்நாளில் அவர்களுக்கு அவர் ஆற்றிய செயலை, இந்நாளில் உங்களுக்கு அவரால் செய்திட முடியும். 70பயிரைப் பற்றியும், தீர்க்கதரிசிகளை பற்றியும் பேசி நாம் கிறிஸ்துவோடு நிறுத்தினோம். இப்பொழுது சற்று பின்னோக்கி செல்வோம். தீர்க்கதரிசியான ஏசாயா கடைசி காலத்தை குறித்து, எப்பேற்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தை அவன் உரைத்திருக்கின்றான். அவன், ''சரீரம் முழுவதும் புண்ணாகி நொதிக்கிற இரணமும் உள்ளதாய் இருக்கின்றது பந்தியெல்லாம் வாந்தியால் நிறைந்திருக்கிறது'' என்று கூறினான். என்ன, இன்றைக்கு ஆண்களும் பெண்களும் இரண்டு மூன்று மனைவிகளுடனும் அல்லது இரண்டு அல்லது மூன்று கணவன்களுடனும் வாழ்கின்றனர். (சரியல்லவா?) எல்லாவிதமான... சிகரெட்டுகளை புகைத்துக் கொண்டும், இன்னும் மற்ற காரியங்களை செய்துக் கொண்டும் சபைக்கு வந்து இராப்போஜனத்தில் பங்கு கொள்கின்றனர்! இப்பொழுது, இதை விட கீழ்த்தரமான காரியங்களை என்னால் கூற முடியும். ஆனால் நான் சிறிது காத்திருக்கிறேன், ஒருவேளை அது சரியாய் இருந்திருக்காது. ஆனால் நான் கூற நினைத்ததை கூறாதபடிக்கு தடை செய்யப்படுகிறதை நான் உணர்ந்தேன். ஆனால் நான்... ஆனால் வழக்கமானதும், வழக்கமில்லாததுமானவற்றை குறித்து வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவைகளைப் படித்து அறியலாம். நீங்கள் அவைகளைப் படித்து அறியலாம். 71இப்பொழுது நடைபெறும் இக்காரியங்களை நாம் காண்கின்றோம், ஆகவே அந்த தேசம்... விஞ்ஞானம் கூறுகிறது. அது... நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னால், அது நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள். (''இஸ்ரவேலைக் குறித்த ஒரு படக்காட்சியை தீர்க்கதரிசி குறிப்பிடுகின்றார்'' - தமிழாக்கியோன்) இஸ்ரவேல் தனது தாய் நாட்டில் உள்ளது. சபையானது லவோதிக்கேயாவில் உள்ளது. ஓ, என்னே. நாம் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்? காரணம் என்ன? நாம் சாயங்கால வெளிச்சத்தை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறோம். ஓ, அது வருமென்றால், நாம் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? அல்லது கடந்த காலங்களில் நடந்தது போல நம் தலைகளுக்கு மேலே கடந்து சென்றுவிடுமா? அது வெகுதூரம் செல்லும் வரை அவர்கள் அதை அறியாதிருந்தார்கள். தங்களிடத்தில் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை கொன்றது, அந்த மதப்பற்றுள்ள மக்கள் தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். இயேசுவும் அவ்விதமாகவே கூறியுள்ளார். அவர், ''மாயக்காரரே! உங்கள் பிதாக்கள் அவர்களை (தீர்க்கதரிசிகள் - தமிழாக்கியோன்) உள்ளே போட்டு பிறகு, அவர்கள் கட்டின கல்லறையை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள்“ என்று கூறினார். 72ரோமன் கத்தோலிக்கச் சபையைப் பாருங்கள், அவர்கள் பரிசுத்த பாட்ரீக்கின் கல்லறையை அலங்கரித்தனர். ஜோன் ஆப் ஆர்க்கின் (Joan of Arc) கல்லறையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த ஸ்திரியைக் கொன்று போட்டு, அவள் ஒரு சூனியக்காரி, மந்திரம் செய்பவள் எனக் கருதி அவளை உயிருடன் எரித்தனர். ஏனெனில் அவள் ஆவிக்குரியவளாய் இருந்து தரிசனங்களைக் கண்டாள். அவள் ஒரு சூனியக்காரி என்று அவளை தொழு மரத்தில் எரித்தனர். 200 ஆண்டுகளுக்கு பிறகு அவள் கிறிஸ்துவின் ஊழியக்காரி என்று அறிந்து அவர்கள் அதற்கு பிராயச்சித்தமாக அந்த மதகுருக்களின் (அவளை எரித்த குருக்கள் - தமிழாக்கியோன்)பிணங்களை தோண்டியெடுத்து ஆற்றிலே வீசியெறிந்து விட்டார்கள். ஆனால் அந்த நாளிலோ, சபையானது கடந்து செல்கையில், அவள் யார் என்பதை அறியாதிருந்தார்கள். அது மக்களுக்கு மேலாக கடந்து செல்லும். ஆகவே மக்கள் அதை அறிந்து கொள்ளவே மாட்டார்கள். இயேசு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்த வரை அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்கள் அறியவில்லை. ''மனிதர்களே அக்கிரமக்காரருடைய கைகளினாலே ஜீவாதிபதியை கொலை செய்தீர்களே!'' என்று பெந்தெகோஸ்தே நாளிலே பேதுரு அவர்களை குற்றஞ் சாட்டினான் அல்லவா? 73ஓ, அந்த பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு, அவர் கீழே வந்து கொண்டிருக்கின்றார் என்பதை அறிவிக்கின்றது! ஆமென்! நாம் முடிவில் இருக்கின்றோம். (கடைசி காலத்தில் - தமிழாக்கியோன்) ஆமென்! ''இக்கபோத்'' என்று எழுதப்பட்டுள்ள அந்த பிரகாசிக்கும் சிகப்பு அடையாள விளக்கு எல்லாவிடங்களிலும், எல்லாவிடங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. காலமானது முடிந்துவிட்டது. நேரம் கடந்துவிட்டது! விஞ்ஞானம் தனது முடிவை அடைந்துவிட்டது. அது சரி. இப்பொழுது முழு உலகத்தையே வெடிக்கச் செய்யும் ஏதோ ஒன்றை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஒருவரையொருவர் பார்த்து பயப்படுகின்றனர், அவர்கள் கடைசி காலத்தில், மணி நேரத்தில் இருக்கின்றார்கள். நாகரீகமானது மக்களை ஒருநிலைக்கு... அதன் உச்சநிலை பின் நோக்கி வீசிகின்றது, ஊஞ்சலாடுகின்றது. ஜனங்கள் நாகரீகம் பொருந்திய ஒழுக்க நெறியுள்ள ஜனங்களாக நடந்து கொள்வதில்லை. ஒரு நவீன இசைக் குழுவில் அங்கம் வகித்து, பூனை மீசை மயிரைப் போன்று இப்படி தொங்கி கொண்டிருக்கும் மீசையை வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவிற்கு மேலாக, முன்னே உந்தித்தள்ளி விரைத்துக் கொண்டு இடுப்பிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்ற பெரிய அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு தான் காணப்பட வேண்டும் என்று கற்பனைச் செய்து கொண்டிருக்கிற ஒரு மனிதனைப் பாருங்கள். அவன் ஒரு பள்ளிக் கூட மைதானத்தில் பதினான்கு வயது சிறுமிகளை அழைத்துச் சென்று திரிகிறான். அங்கே தெருவில் வெளியே செல்கிறார்கள்? (இதற்கு பிறகு உலக ஞானமானது தொடர்ந்து வருகின்றதாய் இருக்கின்றது, இதை விட அதிகம் இருக்குமாயின்.) 74இன்று நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் ஒரு தாயும் அவளுடைய கணவனும் உடலில் போதிய அளவு துணியில்லாமல் ஒரு சிறு கை துப்பாக்கியை சுற்றுகிற அளவுக்கு உள்ள துணியை தங்கள் உடலில் சுற்றி கொண்டு, இந்த குளிர்ந்த காற்றில் வெளியில் படுத்திருந்தனர். அவர்கள் தங்கள் சரீரம் பிறருக்கு காண்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு அழகு வாய்ந்தது என்று எண்ணுகிறார்கள். அது பிசாசு என்பதை நீங்கள் உணருவதில்லையா? அது சரியே. ஒரு பைத்தியக்காரன், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தான் தங்கள் ஆடைகளைக் களைவார்கள். லேகியோன் அவ்விதமாக செய்தான். ஏனென்றால் அவன் பைத்தியக்காரனாய், வெறி கொண்டவனாய் இருந்தான். கவனியுங்கள்! ஆகவே அதை நாம் கொண்டுள்ளோம். ஆனால், அது ''நாகரீகம், ஸ்டைல்'' (Style) என்றும் “நவீன நாகரீகப் பண்பாடு'' என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் அதை, ''பிசாசு'' என்று அழைக்கின்றோம். அது பிசாசு தான் என்பதை நிரூபிக்க என்னிடம் வேதாகமம் இருக்கின்றது. அது பிசாசு பிடித்துக் கொண்டிருத்தல், பேய் பிடித்துக் கொண்டிருத்தல் ஆகும் (அது அட்டுழியம் (oppression) அல்ல). உடைமையாகக் கொண்டிருத்தல் (possession), அவன் உங்களை பிடித்து ஆட்கொண்டிருக்கின்றான்! அது சரியே. அவர்களிடம் இதைப் பற்றி கூறிப்பாருங்கள்? அவர்கள் சீறி எழுவார்கள். அதைப் பற்றிய (சத்தியத்தைப் பற்றி - தமிழாக்கியோன்) எதுவும் அவர்களுக்கு தேவையில்லாதிருந்தது! இல்லை, ஐயா. அவர்களுக்கு தங்கள் சொந்த கருத்துக்கள் உள்ளன. ஏனென்றால் அவர்கள் ஆணவம் கொண்டு நடக்கின்றனர் அதை அவர்கள் கடிந்து கொள்வதில்லை. பால்வேறு பாட்டுக்கவர்ச்சி, பெண்பாலாரின் கவர்ச்சி (Sex Appeal) இப்பொழுது பள்ளிக்கூடங்களிலும், சபைகளிலும் கையாளப்படுகின்றது. மேய்ப்பர்கள் அதைக் கடிந்து கொள்ளபயப்படுகிறார்கள். ஏதாவது ஒரு காரியத்தை கடிந்து கொள்வதென்பது மிகவும் அபூர்வமான செயலாகிவிட்டது. 75முந்தைய நாளில் ஒரு ஊழியக்காரன், ''கண்களுக்கான இந்த நீல நிற மையையும், உதடுகளுக்கான சிகப்பு சாயத்தையும் அவர்கள் கண்டு பிடித்த போது அவர்கள் ஒரு அழகு மிகுந்த உலகத்தை அவர்கள் உண்டாக்கினர்“ என்று கூறினதை நான் கேட்டேன். சுவிசேஷத்தில் உள்ள ஒரு ஊழியக்காரன், பிரசங்க பீடத்தில் நிற்கும் ஒருவன் இப்படிப் பட்ட ஒரு கருத்தைக் கூறுவானானால், கல்வாரிப் பிரயாணம் அவனுக்கு தேவையாய் இருக்கின்றது. வேதாகமம் அதைக் கடிந்து கொள்ளும் போது, அது முற்றிலும் சரியான ஒன்றாகும்! நீண்ட தலை மயிரை உடையவளாய் இருந்து நீண்ட தலை மயிரை தன் தலையின் பின்னால் கொண்டை போட்டுக் கொண்டிருந்த சகோதரியிடம் ஒரு பெந்தெகோஸ்தே குழு (அந்த இடத்தில் அவள் அழுது கொண்டே வந்திருந்தாள்) ''நீ உன் நீண்ட மயிரை வெட்டிவிட வேண்டும். உன்னுடைய உதிரி தலையாடை பாழாகப்போகிறது'' ஏனென்றால், வேதாகமம் கூறுகிறது அவளுக்கு... ஏசாயா 5ஆம் அதிகாரத்தில், பிறைச் சிந்தாக்குகளையும் கொண்டிருந்தாள்“ (ஏசாயா 3ஆம் அதிகாரம் - தமிழாக்கியோன்.) இப்பொழுது, ''ஒரு ஸ்திரீ வழக்கத்திற்கு மாறான காரியத்தைச் செய்கின்றாள்,'' அவள் தன் மயிரை வெட்டிக் கொண்டதால் தன் தலையைக் கனவீனப்படுத்துகின்றாள், வாழத் தகுதியற்றவள் என்று வேதாகமம் எப்படி கூற முடியும், அப்படியானால் நீண்ட மயிர்...? அதைப் போன்ற ஏதோ ஒன்றை வேதம் கூறத்தக்கதாக உன்னால் எப்படி செய்ய முடியும்? நல்லது நம்முடைய பெந்தெகோஸ்தே ஸ்திரீகளுக்கு என்ன நேர்ந்தது? அதிகமான தொலைகாட்சி (T.V) நிகழ்ச்சிகளை பார்த்து விட்டீர்கள்! நீங்கள் உலகத்தின் காரியங்களை மிகவுமாக கண்டுவிட்டீர்கள். ஆதலால் தேவனுடைய வார்த்தையில் உங்களுக்கு போதுமான அக்கறை உண்டாவதில்லை. இப்பொழுது, அதைத்தான் வேதாகமம் கூறுகின்றது. அது நானல்ல, இப்பொழுது, அது தான் வேதாகமம்! 76ஓ, பெண் பாலாரின் கவர்ச்சி! சிறிது காலத்திற்கு முன்பு குட்டைக் கால் சட்டைகள் (shorts) அணிவதைக் குறித்து நான் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்திரீ என்னிடம் வந்து, ''நான் - நான் தளர்காற் சட்டைகளை (Slacks) அணிகின்றேன்'' என்று கூறினாள். ''அது மிகவும் மோசமானது'' என்று நான் கூறினேன். நீ..... வேதம் அவ்வாறு கூறுகின்றது. அவர் மாற்ற முடியாது. ''அது பாப்டிஸ்ட்'' என்று நீங்கள் கூறலாம். அது பெந்தெகொஸ்தேயும் ஆகும். நான் உங்களிடம் பேசுகின்றேன். அது சரியே. அது உண்மை. ஆனால் காரணம் என்ன? காரணம் என்ன? கம்பித் தடுப்புகளை யாரோ எங்கேயோ எடுத்து விட்டார்கள் என்று வயதான பிரசங்கியாகிய என்னுடைய நண்பர் ஒருவர் கூறுவது வழக்கம். நாம் வாயிலின் குறுக்கு கம்பிகளை எடுத்து விட்டோம். பாவத்தோடு உடன்பாடு செய்து கொண்டோம். குறுக்கு கம்பிகளை நாம் எடுத்து விட்டோம் செம்மறியாடுகள் வெளியே சென்றன இந்த வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தன? காரணம் என்ன? தடுப்புக் கம்பிகளை, தேவனுடைய வார்த்தையாகிய தடுப்புக் கம்பிகளை நீங்கள் தளர்த்திவிடும் போது, எடுத்து விடும் போது, ஞாபகங் கொள்ளுங்கள். தன்னுடைய சபைக்கு அரணாக அவருடைய வார்த்தையை அமைப்பதே ஆதியிலே இருந்த அவருடைய திட்டமாயிருந்தது. 77ஆகவே, ஏவாள் ''நல்லது இப்பொழுது, இது நியாயமாகத் தோன்றுகிறதல்லவா? நான் சுகமாக வாழ்வேன்'' என்று தன் சுயபுத்தியிலே சிந்தித்து கூறின போது, அது (விழுந்து போகுதல் - தமிழாக்கியோன்) நடந்தது. ஆகவே எப்பொழுதுமே அதைச் செய்தது. அதன் காரணமாகத் தான் ஒரு பிரசங்கியார் இருப்பதற்கு அவள் தடை செய்யப்பட்டாள். பாருங்கள், அது தடுப்புக் கம்பிகளை அகற்றி விட்டது. அங்கு தான் (சபையானது) பெந்தெகொஸ்தேயில் அடி வேர்கள் முளைத்தன. அது தான் அடி வேர்களாகும். அதற்கான வேத வாக்கியங்கள் இல்லை. பாருங்கள்? இப்பொழுது, அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அங்கே முன்பு ஏதேனில் இருந்த அதே பலதரப்பட்ட குழப்பமான காரியங்களைத் தான் நீங்கள் பெறுவீர்கள். கவனியுங்கள், இப்பொழுது ஆகவே நாம் வார்த்தைக்கு வருவோமானால், நீங்கள் அதைக் குறித்து..... யாராலும் அதை எதிர்த்து நிற்க முடியாது. அதைக் குறித்து யாராயினும் பேச நான் சவால் விடுகிறேன். சர்ப்பத்தின் வித்தைக் குறித்து நான் பிரசங்கித்த போது, அநேகர் அதை எதிர்த்தனர், கோபங் கொண்டனர். அதைக் குறித்து என்னிடம் நேரிடையாக பேச சில நபர்களை நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்களை என்னால் காண இயலவில்லை. 78சில காலத்திற்கு முன்பு சிக்காகோவில், ஏதோ ஒன்றில் எனக்கு கண்ணிவைத்து, சிக்கவைத்து விட்டதாக நினைத்திருந்தனர். அந்த ஒலிநாடாக்களை (அந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் - தமிழாக்கியோன்) நீங்கள் வைத்திருக்கிறீர்கள். சிக்காகோ ஊழியக்காரர்கள் கூட்டமைப்பு முழுவதையும் அங்கே அவர்கள் கொண்டிருந்தனர். சகோதரன்... என்ன... டாமிஹிக்ஸ், சகோதரன் கார்ல்ஸன் அங்கே இருந்தனர். ஆகவே அந்த சம்பவம் நடப்பதற்கான இரண்டு இரவுகளுக்கு முன்னர், இரவில் கர்த்தர் என்னை எழுப்பி, “சென்று அந்த ஜன்னல் அருகே நில்'' என்றார். நான் சென்றேன், அப்பொழுது புயல் காற்று அடித்துக் கொண்டிருந்தது. அவர் இப்பொழுது இந்த காலை உணவு கூட்டத்தில் அவர்கள் உனக்கு ஒரு கண்ணியை வைத்திருக்கின்றனர். நீ பயப்படாதே, அங்கே செல், நான் உன்னுடனே கூட இருப்பேன்” என்று கூறினார். இப்பொழுது இதை நான் கர்த்தருடைய நாமத்திலே சொல்லுகிறேன். நீங்கள் இதை அவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேவனால் முன்னதாகவே உரைக்கப்பட்ட இந்த காரியம் ஒலி நாடாவிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் என்னிடம், ''அங்கு போவதற்கு நீ பயப்பட வேண்டாம். தைரியமாக போய் நில். நான் உன்னோடே கூட இருப்பேன்'' என்று கூறினார். 79அடுத்த நாள் அங்கிருக்கும் அந்த அமைப்பின் கிளைக்கு தலைவரான சகோ. கார்ல்ஸ்னையும், சகோ. டாமி ஹிக்ஸ் அவர்களையும் நான் சந்தித்தேன். அவர் என்னிடம், “டவுன் அன்ட் கன்ட்ரி'' என்னும் இடத்திற்கு சென்று காலை ஆகார வேளையில் நான் அவர்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொன்னார். சரியாக நான் அங்கு சென்றேன். நான், ”சகோ. ஹிக்ஸ் நீங்கள் வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். நாம் அங்கிருக்கும் மகத்தான ஊழியக்காரர்களின் கூட்டத்தையும், அவர்களுடைய சிக்காகோ அமைப்பையும் சந்திக்கப் போகிறோம். நீங்கள் சென்று எனக்காக பேசினால் என்ன? நான் உங்களுக்கு அநேக காரியங்களை செய்திருக்கிறேனே என்று கூறினேன். நான் அவரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர், “ஓ, சகோதரன். பிரான்ஹாம் என்னால் அதைச் செய்ய முடியாது'' என்று கூறினார். ''நல்லது, ஏன் நீங்கள் இதை செய்தால் என்ன? நான் உங்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன், இப்பொழுது நீங்கள் ஏன் அதை எனக்காக செய்யக் கூடாது?'' என்று நான் கூறினேன். அவர், ''ஓ, சகோ. பிரான்ஹாம் என்னால் அதைச் செய்ய முடியாது. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள்'' என்று கூறினார். ''அவர்கள் கேட்க மாட்டார்கள், இல்லை'' என்று சகோ. கார்ல்ஸனும் கூறினார். நான் கூறினேன், ''ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு நான் இதைக் கூறட்டும். ஏனென்றால் கேள்விக் கணைகளால் என்னை சிக்க வைக்கத்தக்கதாக ஒரு கண்ணியை, அவர்கள் ஆயத்தப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை நீங்கள் இருவரும் அறிவீர்கள். அதை ஏற்பாடும் செய்திருக்கின்றீர்கள்.'' இப்பொழுது, இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிநாடா உங்களுக்கு தேவையாய் இருக்குமானால் அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். இம்மனிதர்களை நீங்கள் அறிவீர்கள். ஆகவே நான், ''நாம் இக்காலை இங்கு உட்காருவோம் என்பதையும் டாமி செய்ய (சகோ. பிரான்ஹாமிற்கு பதிலாக பேச - தமிழாக்கியோன்) மறுத்துவிடுவார் என்பதையும் கடந்த இரவில் நான் தரிசனத்தில் கண்டேன். இப்பொழுது கவனியுங்கள், அந்த உணவு விடுதி அறையை நீங்கள் வாடகைக்கு எடுத்துள்ளீர்கள்'' என்று கூறினேன். “ஆம்.'' ''அதற்குரிய வாடகை தொகை செலுத்தப்பட்டது'' சகோதரன. கார்ல்ஸன், “ஆம்'' ''ஆனால் அந்த அறையை நீங்கள் பெறப்போவதில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது!“ ''ஏன்?'' ''அந்த இடத்தில் அது நடைபெறாது. நீங்கள் வேறொரு இடத்திற்கு செல்லப் போகிறீர்கள். இப்பொழுது ஆயத்தம் செய்திருக்கிற இடம் பச்சை நிறம் கொண்டது. நாம் கூடப் போகும் அறை காவி நிறமுடையதாயிருக்கும். அங்கு நான் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பேன். டாக்டர் மேட் என்னுடைய வலது புறத்தில் உட்காருவார்; அந்த வயதாக கறுப்புநிற ஊழியக்காரரும் அவருடைய மனைவியும் இங்கே இடது புறமாக உட்காருவார்கள். அது அவ்விதமாகவே அமைந்திருக்கும். ஆகவே நான்... தேவன் நோயாளிகளை சுகப்படுத்தினதை கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, அவர் யுத்தத்தில் இருப்பதையும் ஒருமுறை பாருங்கள். அவர் மகத்தானவர், அற்புதமானவர். என்னிடம் கேட்கப்படப் போகும் கேள்விகளையும் எவ்வாறு அவை சந்தடியின்றி அமைதலாய் காணப்படும் என்பதையும் கவனியுங்கள்'' என்று கூறினேன். அன்று காலை நாங்கள் அங்கு வந்ததும்.... 80உங்களுக்கு அந்த ஒலிநாடா தேவையாய் இருக்குமானால்... ஜிம், நீ அதை வைத்திருக்கிறாய், அதை நீ கொடண்டு வந்துள்ளாயா? சரியாக இங்கே, உங்களுக்கு ஒலிநாடா தேவையாயிருப்பின் அதை கூட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம். ''எனக்கெதிராக உங்களிடம் என்ன இருக்கின்றது? மனிதர்களே, நீங்கள் இவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன?'' என்று நான் கூறினேன். அந்த இடம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆதலால் அதை ரத்து செய்து விட்டார்கள். ஏனென்றால் ஒரு இசை குழு அந்த இடத்திற்கான முன் பணத்தை செலுத்தி இருப்பதை அவர்கள் அறியாதிருந்தனர். ஆகவே இந்த வியாபாரிகள் சங்க மக்கள் அந்த இடத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. அதை குறித்ததான செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கேயிருக்கும் சகோ. வில்லியம்ஸ். ஆகவே சகோதரன் கார்ல்ஸ்ன் , ''நல்லது, சகோ. பிரான்ஹாம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே என்னிடம் கூறினார், நாம் அதை..... ஒவ்வொரு நபரும் எங்கெங்கு அமைந்திருப்பார்கள் என்றும், சரியாக என்ன சம்பவிக்கும் என்பதை சகோ. பிரான்ஹாம் என்னிடம் கூறியுள்ளார். காரியம் என்னவென்றால், நான்... ஏறக்குறைய நாம் எல்லோருமே சகோ. பிரான்ஹாமுடனும் அவர் கொண்டுள்ள செய்தியின் பேரிலும் நாம் இணங்காதிருக்கலாம். ஆனால் ஒரு காரியத்தை மாத்திரம் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதை உரைக்க அவர் பயம் கொள்வதில்லை, பயமே அடையவதில்லை'' என்று கூறி, “இப்பொழுது வாருங்கள் சகோதரன். பிரான்ஹாம்” என்று அழைத்தார். நான், “இப்பொழுது, நாம் துவங்குவதற்கு முன்னர், நான் கூறின காரியங்களின் பேரில் அந்த வேதத்தை எடுத்துக் கொண்டு யாராவது ஒரு மனிதன் என் பக்கத்தில் வந்து நின்று பேச வேண்டும் என விரும்புகிறேன்'' என்று கூறினேன். நீங்கள் கேள்விப்பட்டதிலேயே மிகவும் அமைதியான குழுவாக அது இருந்தது. நான், ''உங்களால் அதற்கு ஆதாரம் அளிக்க முடியாவிட்டால், என்னை விட்டு அகன்று விடுங்கள்! ஆம், சகோதரர்களே, நான் உங்களுடன் தோளோடு தோள் கொடுக்க வந்துள்ளேன். ஆனால் வேத சத்தியங்களுக்கு நாம் வர வேண்டியவர்களாய் இருக்கின்றோம்'' என்று கூறினேன். ''ஏன் நீங்கள்... நீங்கள் பெண்களை கடிந்து கொள்வதை விட்டுவிடலாம் அல்லவா? ஓ, ஆம் நீங்கள் ஒரு... நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசி என்று மக்கள் விசுவாசிக்கின்றனரே'' என்று கூறினர். அவ்விதமாக நான் கூறினதில்லையே. அவர், ''ஆனாலும் மக்கள் அதை விசுவாசிக்கின்றனர். ஏன் நீங்கள் பெண்களைக் கடிந்து கொள்வதை விட்டுவிடக் கூடாது?பெண்கள் ஆடை அணிகிற விதத்தையும், தலை முடி வெட்டிக் கொள்வதையும், அவர்களுக்கிருக்கிற மற்ற பழக்கங்களையும் குறித்து பேசுவதை விட்டுவிடலாம் அல்லவா?அவர்கள் எப்படி வரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தேவனுடைய மகிமைக்கென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்கு போதித்தால் என்ன? என்று கேட்டார். ''ஏ.பி.சி. (A,B,C) (அ, ஆ, இ, ஈ - தமிழாக்கியோன்) கூட கற்றுக் கொள்ளாதவர்களுக்கு எப்படி நான் அல்ஜீப்ரா (அல்ஜீப்ரா கணக்கு - தமிழாக்கியோன்) சொல்லிக் கொடுக்க முடியும்?'' என்று நான் கூறினேன். அது சரி. நீங்கள் அடித்தளத்திற்கு திரும்பி வந்து அங்கிருந்து தொடங்க வேண்டும் தேவனே எங்கள் மீது இரக்கமாயிரும். ஆம், ஐயா. 81இப்பொழுது நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். சிகப்பு விளக்கு பிரகாசித்து மின்னுகிறது. கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கின்றது. ஆம், ஐயா. கவனியுங்கள். கடைசி கால செய்தி கடைசி கால நிலைமைகளை சந்தித்தாக வேண்டும். எந்த இடத்திலிருந்து அவர்கள் விட்டு விலகினார்களோ அவ்விடத்திற்கு செய்தியானது திரும்பக் கொண்டுவர வேண்டும். எப்பொழுதுமே கடைசி - காலச் செய்தி கடைசி கால நிலைமைகளைச் சந்தித்து தான் ஆக வேண்டும். வேத வாக்கியங்கள் முழுவதுமாக அவ்வாறே தான் உள்ளது. இந்த காலத்திலும் அவ்விதமாகவே அது நடப்பிக்க வேண்டும். அதாவது மூல வார்த்தைக்கு திரும்ப அழைத்தல் ஆகும். ஓ, என்னே! மற்றைய நாளிலே முந்தின செய்தியாளர்கள் செய்தவிதமாக, இந்த செய்தியும் அவ்விதமாகவே இருந்தாக வேண்டும். நமக்கு அவ்விதமாகவே வாக்களிக்கப்பட்டுள்ளது. தேவன் தம்முடைய வார்த்தையில் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். ''பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கு திருப்புவான்'' என்கின்ற காரியம் சம்பவிக்கும் என்று மல்கியா;4 கூறுகின்றது. அதை வாக்குத்தத்தம் செய்கின்றது. ஆகவே அந்த நாளிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு சமயத்திலும் ஜனங்களை வழி நடத்தும் ஒரு கூட்ட நபர்கள் தான் அவர்களை (ஜனங்கள் - தமிழாக்கியோன்) மிகவுமாக குழப்பத்திற்குள்ளாக்கி விடுகிறார்கள். ஓ, எப்பொழுதும் அவ்வாறே தான் இருந்து வருகின்றது. அதிக பட்சமாக ஜனங்கள் குழம்பிவிடுவதில்லை. வழி நடத்துபவர்கள் அவர்களை குழப்பிவிடுகிறார்கள். இப்பொழுது... ''ஓ, சகோ. பிரான்ஹாமே!'' என்று நீங்கள் கூறலாம். 82நல்லது, இப்பொழுது ஒருநிமிடம், இதை வேதாகமப்பூர்வமாக நாம் பார்த்ததாக வேண்டும். அது வேதாகமப் பூர்வமாக இல்லையெனில் அது சரியாக இருக்காது. ஊக்குவிக்கப்படாத (பரிசுத்த ஆவியினால் - தமிழாக்கியோன்) வழி நடத்துதலினாலும், தங்கள் ஞானமாக, சொல் வன்மையுள்ள வார்த்தைகளாலும், உலகப் பிரகாரமான ஞானமுள்ள வார்த்தைகளாலும் அவர்கள்..... என்ன, அறிவாளிகளான அவர்களில் சிலர் அதை செய்யக் கூடும். ஆனால் சாத்தானும் அவைகளைச் செய்யத்தக்கதான ஞானத்தைக் கொண்டிருப்பவன் எனன்பதை நீங்கள் யோசிப்பதில்லையா? அவன் இயேசு கிறிஸ்துவை அணுகி அவருக்கு ஒரு காரணத்தை அளித்து வேத வாக்கியங்களையும் அவருக்கு மேற்கோள் காட்டினான் அல்லவா, அப்படித்தானே? அவன் அதைச் செய்தான். அதில் அவன் திறமைமிக்கவன், அறிவாற்றல் கொண்டவன். ஆனால் இயேசு அவனிடம் தர்க்கம் செய்யவில்லை என்று கூறினார். ஆம் ஊக்குவிக்கப்படாத (பரிசுத்த ஆவியினால் - தமிழாக்கியோன்) வழி நடத்தும் தன்மை. 83கோராகை கவனியுங்கள், தேவன் மோசேயை செய்தியுடன் அனுப்பின நாட்களில், கோராகும் தாத்தானும் யோசனை செய்து, மோசேயிடம் வந்து, “இப்பொழுது, ஒரு நிமிடம், நீ உன் மீது அளவிற்கதிகமாக காரியங்களை வைத்துக் கொண்டிருக்கின்றாய். கடற்கரையில் உள்ள ஒரே குழாங்கல் நீ தான் என்றும்; சேற்றில் உள்ள வாத்து என்றும், நீ ஒருவன் மாத்திரமே என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். பரிசுத்தமுள்ள மற்ற ஜனங்களும் உள்ளனர் என்றும் நான் உனக்கு தெரியப்படுத்துவேன்!'' என்று கூறினர். அவர்கள் பரிசுத்துமுள்ளவர்கள் அல்ல என்று மோசே கூறவில்லை. ஆனால் அவன் ஒரு கட்டளையை உடையவனாய் இருந்து அதை செய்ய வேண்டியனாய் இருந்தான். ஆகவே அவர்கள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு மோசேக்கு எதிராக வந்து கொண்டிருந்தனர். ஆகவே தேவன் அவனிடம், “போய் அந்த வாசலில் நில்'' என்று கூறினார். அந்த மனிதர்களிடத்தில் தூப கலசம் இருந்தது. அந்த தூப கலசம் என்ன செய்திருக்கும் என்று நீங்கள் அறிவீர்களா? அதனுள் பலிபீடத்திலிருந்து எடுத்த நெருப்பு இருந்தது. நெருப்பு நிறைந்திருந்த தூப கலசத்தை அவர்கள் கையில் வைத்திருந்தாலும், மிகவும் அடிப்படையானதாக அமைந்திருந்த அந்த செய்தியை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளத் தவறினர். தேவன் பூமியை திறந்தார்; பூமி அவர்களை விழுங்கிப் போட்டது. தேவன், “மோசே, நான் இதை செய்வதற்கென்றே உன்னை அனுப்புகிறேன். அவர்களை இங்கே அழைத்து வா'' என்று சொன்னார். பாருங்கள், அவர்கள் அதை அடையாளங் காண தவறினார்கள். எலியா அந்த பயில்வித்த, பழக்கப்படுத்தப்பட்ட அந்த தீர்க்கதரிசிகளின் குழுவிற்கு எப்படி, “வளைந்து கொடுக்காதவனாக,'' வார்த்தையோடு நிற்பவனாகக் காணப்பட்டானோ அதேவிதமாக மோசேயும் அவர்களிடம்; ''வளைந்து கொடுக்காதவனாக,'' காணப்பட்டான். அவ்வாறேதான், பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்களும் உலகத்தின் போக்கிலிருந்து உங்களை வேறு பிரித்து வார்த்தையுடன் சரியாக இருக்க வேண்டும். நீங்கள் விட்டு வெளியே வந்த அதே காரியத்திற்குள் நீங்கள் சென்று மறைந்து போகாதீர்கள். நீங்கள் நெறி தவறி அடித்துச் செல்லப்படுகிறீர்கள். கல்வாரியிலிருந்து உங்கள் நங்கூரத்தை அறுத்து விடாதீர்கள். தேவனுடைய வார்த்தையை பற்றிப் பிடித்துக் கொண்டிருங்கள். ஏனெனில், ''இந்த கல்லின் மீது என் சபையை கட்டுவேன்'', அதனோடே தரித்திருங்கள். 84இப்பொழுது தாத்தானும் மற்றவர்களும் அவர்கள் ஒரு வேறொரு மனிதன் இருக்கக் கூடும் என்று நினைத்தனர். பாருங்கள். அது தேவனுடைய திட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை புகுத்த முனையும் மனித அறிவுத் திறனாகும். அது அருமையான ஒன்று தான். தேவனுடைய வார்த்தைக்குள் தங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை புகுத்த முனையும் மனித அறிவுத்திறமை. அது கிரியை செய்யாது! அதனால் கிரியை செய்ய முடியாது. அது கிரியை செய்ததுமில்லை. அது கிரியை நடப்பிக்கப் போவதும் இல்லை. இப்பொழுது இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் யூதர்களின் நடுவில் நின்று கொண்டு, “என்னில் பாவம் உண்டென்று, உங்களில் எவன் என்னை குற்றம் சாட்ட முடியும்? நான் செய்வேன் என்று வேதம் என்னைக் குறித்து சொல்லியிருக்கிறதின்படி நான் செய்யவில்லை என்று உங்களில் யாரால் காண்பிக்க முடியும்? நான்தான் மேசியா என்று வலியுறுத்தி கூறுகிறேன். என் பிதாவின் காரியங்களை நான் செய்யாவிட்டால், என்னை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம். ஆனால், என் பிதாவின் காரியங்களை செய்யும் பொழுது, நீங்கள் ஏன் என்னை விசுவாசியாமல் போகிறீர்கள். நான் செய்கிறவற்றை விசுவாசியுங்கள். அவைகள் எனக்கு சாட்சியாயிருக்கின்றன'' என்று சொன்னார். அவர்களால் அவற்றை விசுவாசிக்க முடியவில்லை. அவர்களுடைய விருப்பப்படி அவர் கிரியை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். 85இதைச் செய்ய முனைந்து தவறாய் போகும்படியாக அவர்கள் எண்ணவேயில்லை. அவர்கள் அவ்வாறு... மனிதன் அவ்வாறு செய்தாக வேண்டும் என்று எண்ணுவதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே புறம்பேயுள்ள அந்த பெரிய ஸ்தாபன சபைகளில் அருமையான மக்களை நான் கண்டிருக்கின்றேன். அருமையான மக்கள் இருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு வழக்கறிஞர் இங்கு ஒலிபாப்பப்படுகின்ற வானொலியில் இவ்வாறு கூறினார், ''ஊழியக்காரர்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இப்படிப்பட்டதான வேளைகள் வருவதைப் பார்த்து, உலகத்தின் பாவங்களைக் குறித்த நீதிமான்களுடைய நேர்மையான சீற்றத்தை, உளக்கொதிப்பை (indignation) எப்படி கிளப்பிவிடாதிருக்கிறார்கள் என்பது விந்தையாயிருக்கின்றதே!'' ஆகவே ஒரு வழக்கறிஞர் எழும்பி அதை கூற வேண்டியதாயுள்ளது! ''ஆகவே, எப்படி சபை - மக்கள் உலகத்திற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்வதற்கான ஊழியக்காரர்களின் திட்டத்திற்கு நிதியுதவி அளித்து தாங்காமல் எல்லாவிதமான விலங்கியல் பூங்காக்களிலும், மற்ற பூங்காக்களிலும் தங்கள் பணத்தை எப்படி செலவு செய்ய முடிகின்றது.'' பட்டினியால் வாடும் ஊழியக்காரர்கள் தங்கள் கால்களில் காலணிகள் இல்லாமல்... அல்லேலூயா. ஏனென்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தைக்காக நிற்கின்ற காரணத்தால், (அவர்களை ஆதரிக்க எந்த ஸ்தாபனமும் இல்லை) அங்கிருக்கும் அவர்களை (ஊழியக்காரர்கள் தமிழாக்கியோன்) நீங்கள் (ஸ்தாபனங்கள் - தமிழாக்கியோன்) ஏதோ ஒன்றைக் கொண்டு ஆதரிக்கின்றீர்கள், அப்படியானால் அவர்கள் எதைக் கொண்டவர்களாய் இருப்பார்கள்? ஸ்தாபன கொள்கை கருத்துக்கள் கொண்ட ஒரு பெரிய கூட்டமாயிருப்பார்கள். ஒரு உண்மையாக, உத்தமமான, அடையாளங்கள் பின் தொடருகின்ற ஒரு ஊழியக்காரன் தங்களுக்கென (ஊழியக்காரர்கள் - தமிழாக்கியோன்) சில காசுகள் சேமித்து வைக்கும் ஏதோ ஒரு சலவை தொழில் செய்யும் ஒரு பெண்ணைத் தான் சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கும். கவனியுங்கள், அதுதான். அவ்விதமாகவே நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் (ஸ்தாபனத்தார் - தமிழாக்கியோன்) எண்ணங் கொள்வதில்லை.... நல்லது, ஆனால் அவர்களுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் குருடாயிருக்கின்றார்கள். இயேசுவும் அவ்வண்ணமாகவே கூறியிருக்கின்றார். அதே காரியத்தை தான் இயேசு கூறியிருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே அதே போன்று தான் இன்றைக்கும் இருக்கின்றது... 86இப்பொழுது கவனியுங்கள், அதிகமாக கடிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்கின்ற வேளையும், நான் கடிந்து கொள்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நான் முயற்சிப்பது என்னவென்றால். நான் - நான் நேசிக்கின்றேன். ஆகவே நீங்கள்... நான் - நான் சபையைக் குறித்து ஆர்வம் மிகுந்த பற்றுக் கொண்டவனாய் இருக்கிறேன். இது, அது அநேகமாக அசெம்ப்ளி ஆப் காட் (Assembly of God) சபையாகவோ அல்லது எதுவாயிருந்தாலும், அது என்னவென்பது எனக்குத் தெரியாது. என்ன... அது எனக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. அது தேவனுடைய சபை ஆகும். அதுதான், அது தேவனுடைய சபை என்று நான் விசுவாசிக்கின்றேன். நல்லது இப்பொழுது நாம் ஸ்தாபன தேவனுடைய சபையாய் இராமல் (denomination Church of God) இருதயத்திலே கிறிஸ்தவர்களாக காணப்பட்டாக வேண்டும். நாம் அவ்வாறே தான் இருந்தாக வேண்டும். தேவனுடைய சபையானது சுவறுகளுக்குள் வாசமாயிருக்கின்றது (dwells within the walls) பெயரளவில் இன்னும் மற்றவைகளில் அல்ல. 87இப்பொழுது, இன்றைக்கு இதைக் குறித்து மிகவுமாகக் காணப்படுகின்றது. அதாவது உறுப்பினர், அங்கத்தினர் ஆவதுதான் மக்கள் முக்கியமான ஒன்றாகக் கருதுகின்றனர். இப்பொழுது, பாப்டிஸ்டுகள் கொண்டுள்ள எழுப்புதலைப் பாருங்கள். ஓ, அவர்கள் ஏற்கனவே ஒன்றைக் கொண்டிருந்தனர். 1944ல் அவர்கள் ஒரு கொள்கைக் குரலை (slogan) கொண்டிருந்தனர். அது 1944-ல் பத்துலட்சத்திற்கு மேல், ''பில்லி கிரஹாமின் செய்தி சென்று கொண்டிருக்கின்றது. என்ன, நிச்சயமாக அது மகத்தான் ஒரு காரியத்தை செய்திருக்கின்றது. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பெடேரியன்கள், அது மகத்தான ஒரு காரியமாய் இருக்கின்றது. ஆனால், நாம் எதைக் கொண்டிருக்கிறோம். இயேசு, பரிசேயர்களைப் பார்த்து, “குருடர்களுக்கு வழி காட்டுகிற குருடர்களே, ஒருவனை உங்கள் மார்க்கத்திற்குள் கொண்டு வர சமுத்திரங்களைச் சுற்றி சுற்றி வருகிறீர்கள். பிறகு அவன் துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேலாக நாகத்தின் பிள்ளையாக ஆகிவிடுகிறான்'' என்று கூறினார். ஆகவே அதைத்தான், இன்றைக்கு நாம் கொண்டிருக்கின்றோம். 88கெண்டக்கியிலுள்ள லூயிவில்லில் பில்லி கிரஹாமின் காலை உணவு கூட்டத்தில் நான் இருந்த போது, ஒரு கண்டிப்பு மிகுந்த சுவிசேஷகனாக அவர் (பில்லி கிரஹாம் - தமிழாக்கியோன்) நான் செல்கின்ற... பவுல் கூறினான்... இதோ ஒரு உதாரணம். பவுல் ஒரு பட்டினத்திற்கு சென்று ஒருவனை மனந்திரும்பச் செய்தான். பிறகு ஒரு வருடம் கழித்து அவன் திரும்பி வந்தபோது அந்த ஒருவனின் மூலம் முப்பது பேர்களைக் கொண்டான். நான் ஒரு பட்டினத்திற்கு சென்று முப்பதாயிரம் பேர்களை மனம்மாறும்படிச் செய்கின்றேன். ஆனால் ஒரு வருடம் கழித்து திரும்பவும் வந்தால் அங்கே முப்பது பேர்களைக் கூட என்னால் காண முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்று கூறினார். அந்த சுவிசேஷகனுடைய அணுகுமுறையை நான் பாராட்டினேன், மெச்சினேன். அங்கு உட்கார்ந்திருந்த சுமார் முன்னூறு பேர்களுக்கு நேராக தன் கை விரலை நீட்டி, சோம்பேறி பிரசங்கிகளாகிய உங்களால் தான் அப்படி ஆகின்றது. ''நீங்கள் உங்கள் அலுவலகங்களில் மேசைக்கு மேல் கால்களை போட்டுக் கொண்டு உட்கார்ந்து தொலைபேசி மூலமாக ஒருவனை அழைத்து அவனை உங்கள் சபையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறுகின்றீர்கள். நீங்கள் தான் அவனைப் போய் சந்தித்தாக வேண்டும்'' என்று கூறினார். 89நான் அங்கு உட்கார்ந்து கொண்டு, (ஓ தேவனே!) உங்களுக்குத் தெரியுமா, சுவிசேஷகர் பில்லி நீர் ஒரு மகத்தான மனிதன். நான் ஒரு செயலற்றை பேதை. டம்மி (dummy). ஆனால், நான் உங்களை ஒன்று கேட்க வேண்டும்“ என்று எண்ணினேன். இதை கூறியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான்-நான்-நான் அந்த சகோதரனை மெச்சுகிறேன். அவர், தேவனுடைய ஊழியக்காரர் என்று நான் கருதுகிறேன். ஆனால், நான் அப்படியானால், பில்லி தன்னைப் பின்பற்றத்தக்கதாக பவுல் எப்படிப்பட்ட ஒரு பிரசங்கியை உடையவனாய் இருந்திருப்பான்?'' என்று நான் கூற விரும்பினேன். என்ன நடந்தது? அவன் தன் கையை தூக்கி ஒரு முடிவு எடுக்க மாத்திரம் பவுல் விடவில்லை. அவனை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு கொண்டு சென்று, அவனுடைய ஆத்துமாவை கொழுந்து விட்டெரியச் செய்தான், பிறகு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. 90அதுதான் இன்றைக்கு நடைபெறும் காரியமாய் இருக்கின்றது. அது அங்கத்தினர் ஆகுதல். ஆம் (ஒலிநாடாவின் காலியிடம்- ஆசி) அங்கத்தினர்கள், பெரிய அங்கத்தினர்கள், பெரிய ஞாயிறு பள்ளி வகுப்புகள் மனம் மாறச் செய்கிறவர்களுக்கும் மற்ற சபைகளிலிருந்து யாராவது சிலரைக் கொண்டு வருபவர்களுக்கும் பரிசுகள் வழங்குதல், யார் நிறைய பேர்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை பார்த்தல். உங்களுக்குத் தெரியுமா? அது பரிசேய முறைமைகள் தான். அதன்பிறகு, “கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களை மிஞ்சி விட்டோம்'' என்று அதைக் குறித்து மிகவுமாக ஜம்பப் பேச்சு, வீண் பெருமை பேசுவது. தேவனுடைய சபையை ஒரு போட்டியில் கொண்டு சென்று வைக்க வேண்டிய நிலைமைக்கு, போட்டி போட்டுக் கொண்டு ஆள் சேர்க்கும் நிலைக்கு நீ வந்துவிட்டால், கதவுகளை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் இதுவேயாகும். தேவனுடைய சபையானது பூமியிலே தேவனுடைய ஜீவிக்கின்ற பொருளாய் இருந்து இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் ஒன்றாய் இருக்கும். அது பிரபலமான ஒன்றாய் இருக்காது என்பதை நான் அறிவேன். அது அவ்வாறு இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாம் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம். 91அதைக் குறித்து மிகவுமாக ஜம்பப் பேச்சு பேசுகின்றனர். ஆனால் உங்களுக்கு தெரியுமா? அந்த பெரிய சத்தங்கள் தீர்க்கதரிசியாகிய எலியாவை பாதிப்படையச் செய்யவில்லை. அவன் நெருப்பும், புகையும் செல்வதையும், இடியும், மின்னலையும் அவன் கேட்டான். இரத்தம் எண்ணெய் மற்ற எதுவும் அவனுக்கு பாதிப்பை உண்டு பண்ணவில்லை. உங்களுக்குத் தெரியுமா, அதிக சத்தத்தை உடைய ஏதோ ஒரு பெரிய காரியத்தைத் தான் அமெரிக்கா எப்பொழுதுமே எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் தீர்க்கதரிசியை கவருகின்ற ஒரு அமர்ந்த மெல்லிய சத்தமாய் இருக்கின்றார். 92உங்களுக்குத் தெரியுமா, ஒரு மோட்டார் வாகனம் வெளியே உள்ள வயல் வெளிக்குள் சென்றது. அது குலுங்கிக் கொண்டும், தடாலென்ற ஒலி எழுப்பிக் கொண்டும் (bumping) அதிக சத்தம் எழுப்பிக் கொண்டு வயலில் சென்றது. ஆனால், அது திரும்பவுமாக வந்த போது அதே விதமாகத்தான் மேடு பள்ளங்களின் மேல் குலுங்கிக் கொண்டு வந்தது. ஆனால் ஒரு சிறு சத்தத்தைக்கூட அது உண்டு பண்ணவில்லை, ஏனெனில் அதில் நல்ல பொருட்கள் ஏற்றப்பட்டு நிரப்பப்பட்டிருந்தது. பாருங்கள்? ஆம். ஆனால் நாம் நம்முடைய ஆவிகளை இரைச்சல் கூட்டத்தின் மேல் இளைப்பாற வைக்கிறோம். எப்படி நம்மால் அதைச் செய்ய முடியும். அதைப் போன்ற காரியங்களை எப்படி நம்மால் செய்ய முடியும்? ஓ, என்னே. ஆகவே, பிறகு ஹாலிவுட்டின் கவர்ச்சியை உள்ளே கொண்டு வந்து மிகவுமாக இறுக்கமான ஆடைகள் அணிந்து கவர்ச்சியாகக் காணப்படுகின்ற பெண்களை பிரசங்க பீடத்தின் மேல் ஏற்றி ஆவியிலே நடனமாடுதல். அது எப்படிப்பட்ட எந்தவிதமான ஆவி என்று எனக்கு தெரியவில்லை. இப்பொழுது கடிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவேயில்லை. நான் நான்... நான் உங்களை நேசிக்கின்றேன். அப்படி நேசிக்கவில்லையெனில், அதைவிட வேறொரு நோக்கத்தை நான் கொண்டிருப் பேனானால் தேவன் என்னை நியாயந்தீர்ப்பார். பாருங்கள்? ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்களா. பாருங்கள்? அங்கு தான் பெந்தெகொஸ்தேயினர் அடித்துச் செல்லப்படுகின்றனர். ''அந்த மூலையில் உள்ள சகோதரன் கொண்டிருப்பதைக் காட்டிலும் நாம் அதிகமாகக் கொண்டிருக்கிறோம். அசெம்பிளிஸ் (Assemblies) கொண்டிருப்பதைக் காட்டிலும் நாம் அதிகம் உடையவர்களாய் இருக்கிறோம்.'' ஏனெனில் நாம் ஒருத்துவக்காரர் அல்லது நாம் அந்த திரித்துவக்காரர், நாம் தான்... ''ஓ! இது அது அல்லது வேறொன்று எல்லாம் அவர்கள் கொண்டிருக்கின்ற வித்தியாசப்பட்ட வகைகள் ஆகும். நீங்கள் கவனிக்கிறீர்களா? ஓ, சகோதரனே, அது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் ஒரு தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகின்றார். அது சரி. 93கவனியுங்கள். பெரிய சத்தங்கள், ஆனால் அவை அந்த தீர்க்கதரிசியின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தீர்க்கதரிசி அந்த பெரிய சத்தங்களைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அவன் அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை கேட்ட போது, அது வார்த்தை என்று அவன் அறிந்திருந்தான். ஆகவே தன் முகத்தை மூடிக் கொண்டு வெளியே நடந்து வந்தான். உங்களுக்குத் தெரியுமா? சூரியனானது சிறு சத்தம் கூட இல்லாமல் அதிகமான தண்ணீரை ஈர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாய் உள்ளது. மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் சூரியனானது பத்து லட்சம் பீப்பாய்கள் அளவு தண்ணீரை ஈர்ந்திழுக்கும் போது இருப்பதைக் காட்டிலும் (ஒரு 'காலன்' (gallon) அளவு தண்ணீரை இழுக்க நாம் அதிக சத்தத்தை உண்டு பண்ணுகிறோம். அது சரி. ஏதோ பெரியதாக ஒன்றையும், 'ஓ... ஹரா.' (hurrah) என்கின்ற ஆதரவான ஆரவார மகிழ்ச்சிக் குரல்களையும் இன்னும் அதிகமான ஆரவார பேரொலிகளையும் உடைய ஒன்றை நாம் எப்பொழுதுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தேவனுடைய வார்த்தையை எடுக்க வேண்டும் என்கின்ற நிலை வரும் போது, அப்பொழுது காரியமானது வருகின்றதாயிருக்கின்றது. பாருங்கள்? அவர்கள் வந்து கூறுவர். ''நல்லது, தேவனுக்கு துதியுண்டாவதாக, நான் கூறுகிறேன், உனக்கு... 94சில காலத்திற்கு முன்பாக இங்கே ஒரு மனிதனை சந்தித்தேன்... புனிதத்துவத்தை பாழாக்குகிற ஒன்றாய் இருக்கத்தக்கதாக நான் இதை கூறவில்லை, அப்படி புனிதத்துவத்தை, பாழாக்குகிற ஒன்றாய் இருக்குமென்றால், தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். நான் ஒரு கூடார கூட்டத்தில் (tent meeting) இருந்தேன். ஒரு பெந்தெகொஸ்தே ஊழியக்காரர். தன்னுடைய மனைவியை பியானோ இசைக்கருவியை இசைப்பதற்காக அழைத்து வந்தார். அவர் தன் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தும் போது, உண்மையாகவே சொல்லுகிறேன், நான் அநேகமாக மயக்கமடைந்து விட்டேன். அந்த ஸ்திரீ மயிரை குட்டையாக கத்தரித்திருந்தாள். அது சுருள் சுருளாக ஆக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய மகத்தான காதணிகளை அவள் அணிந்திருந்தாள். அவள் உதடுகளில் போதுமான அளவிற்கு சாயம் அல்லது என்னவாயிருந்தாலும் பூசப்பட்டிருந்தது. கை நகங்களும் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. அவள் ஒரு பெரிய விலங்கின் நீளமான நகத்தைப் போல, பயங்கரமாய் காட்சியளித்தது. அவள் பாலுணர்ச்சியை தூண்டும் விதத்தில் கவர்ச்சியாகக் காணப்பட்டாள். சிறிய துணியை அணிந்து கொண்டு, உட்காரும் போது தன் கால் முட்டுகளை மறைக்க கூடாமல் இருந்தது, அவளுடைய உடை. நல்லது. நான் ஒரு கணப்பொழுது அங்கே நின்று விட்டேன். பிறகு நான், ''சகோதரனே, நான் ஏதாவதொன்றைக் கூறுவேனானால் உமக்கு வருத்தத்தை உண்டாக்குமா?'' என்று கூறினேன். அவர், ''நிச்சயமாக இல்லை'' என்றார். அருமையான மனிதன், அவளும் ஒரு அருமையான ஸ்திரீயாக காணப்பட்டாள். “உம்முடைய மனைவி பரிசுத்தமானவள் (saint) என்று நீர் கூறுகிறீரா?'' என்றேன். அவர், “ஆம்” என்றார். நான், ''நான் கூறும் கருத்துக்காக பொறுத்துக் கொள்ளவும். அவள் எனக்கு பரிசுத்தமில்லாதவளாகக் காணப்படுகிறாள். அல்லது, அதைப் போன்ற ஏதாவதொன்று அது உண்மை'' என்றேன். நான் கூறினேன். அவர், நீர் என்ன கூறமுற்படுகிறீர் சகோதரன். பிரான்ஹாம்? நீர் பழைய நடைமுறைப் பாணியைப் பின்பற்றுகிற கூட்டத்தை சார்ந்தவராய் இருக்கிறீர்'' என்று கூறினார். ''ஓ'' ''வேதவசன நடைமுறை பாணியை பின்பற்றுகிற பிரிவைச் சேர்ந்தவன் நான். அது சரி. வேதவசன நடைமுறை பாணியை பின்பற்றுகிற கூட்டம், பிரிவு'' என்று நான் கூறினேன். பரிசுத்தமான ஒருவள் அவ்வாறே நடந்து கொள்ளமாட்டாள். வேதாகமம் அதை கடிந்து கொள்ளும் போது என்னால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? 95அது சரி. ஒவ்வொரு சமயமும், நாம் கேள்விப்படுகின்ற காரியம், ''அவர்கள் நாற்பது தீர்மானங்கள் எடுத்தார்கள்'', ''நாற்பத்து நான்கு தீர்மானங்கள்'', “மூன்னூறு தீர்மானங்கள் நாங்கள் எடுத்தோம்'' என்பதே. நல்லது. அதுதான் அறிக்கை . அறிக்கைகள் என்பது ''கற்களாகும். அது சரி. ஏனெனில் பேதுரு தன்னுடைய அறிக்கையின் பேரிலே, ''கல், சிறிய பாறை'' என்று அழைக்கப்பட்டான். பேதுரு, அவனுடைய அறிக்கை. இப்பொழுது கற்கள் என்பது சரியே. ஆனால் வார்த்தை என்னும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அவைகளை (கற்களை - தமிழாக்கியோன்) செதுக்கி அவைகளை தேவனுடைய குமாரர்களாக்கும் ஒரு உண்மையாக கல் வெட்டுபவன், (கொற்றன்) இல்லையெனில் அந்த கல்லினால் ஒரு கட்டிடத்திற்கு என்ன மதிப்பு, அல்லது என்ன பயன்? பாருங்கள்? ஒரு நல்ல அறிக்கை என்பது என்ன ? அதன் காரணமாகத் தான் நீங்கள் திரும்பி வந்து பார்க்கும் பொழுது முப்பதாயிரத்தில் முப்பது பேரைக்கூட காண முடியவதில்லை. நீங்கள் புழுதியிலிருந்து கற்களை அங்கே வெளியே உருட்டிவிடுகிறீர்கள். ஆகவே அவை இன்னுமாக ஆலயத்திற்கென்று ஏற்றதாக அமைந்திருக்கவில்லை. அவைகள் செதுக்கப்பட்டாக வேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றவாறு அளக்கப்பட்டு, அங்கே பொருத்தப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டு அப்போஸ்தலர்களுடைய உபதேசமாகிய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட வேண்டும். மூலைக்கல் இயேசு கிறிஸ்துவே யாவார். ஆகவேதான் அவர், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்'' என்று கூறினார். அது சரி. 96நாம் ஒருவரையொருவர் இழிவாக கருதும் போது நாம் எல்லாரும் ஒரே சபையாக எப்படி இருக்க முடியும்? ''நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கும் பொழுது நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லா மனிதர்களும் அறிந்து கொள்வார்கள்'' என்று அவர் கூறினார். நாம் கொள்கை மாற்றம் செய்து கொண்டு, வேறு பிரிந்து ஸ்தாபன வேறுபாடுகளால்... நான் அதை மக்கள் மீது பழிபோடவில்லை. அதை நான் ஸ்தாபனத்தின் மீது சுமத்துகிறேன். அது சரி. மக்களால் அது நேரிடுவதில்லை. பாருங்கள்? ஓ, அது மிகவும் கேடானது, இன்னுமாய் நான்....... அவர்களை (ஜனங்களை - தமிழாக்கியோன்) கட்டிடத்தின் பிள்ளைகளாக (sons of the buildings) செதுக்கி வடிவமைக்க தேவனுடைய வார்த்தையாகிய கூர்மையான ஆயுதத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஓ, என்னே, ''தேவனே, மல்கியா 4வுடன் துரிதப்படும். இந்த கடைசி நாட்களில் செய்தியை எங்களுக்குத் தாரும். யாரையாவது எங்களுக்குத் தாரும், இந்த பெந்தெகொஸ்தே சபையைக் காக்க ஏதாவதொன்றை அனுப்பும்“ என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 97இந்த கடைசி நாட்களுக்கென எப்படிப்பட்ட ஒரு செய்தியாளனை தேவன் நமக்கு அனுப்புவார்? அந்த சமயம் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரனாக, உடன் ஊழியக்காரனாக நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். என்னுடைய சகோதரனே, சகோதரியே முந்தைய காலங்களில் வந்த செய்தியாளனைப் போலவே இவனும் அதே விதமாகவே இருப்பான். அதே போன்று! அவன் சபையை வார்த்தைக்கு திரும்பக் கொண்டு வருவான். தேவனே, அது இங்கே நடந்தேறுவதற்கு முன்னர் அதற்கான அஸ்திபாரத்தை நாங்கள் போடட்டும். அவன் வருவதற்கு மன்னர் ஒரு அஸ்திபாரத்தை அமைத்து, செதுக்கப்பட்ட கற்களாக, தேவன் அவனை (செய்தியாளனை - தமிழாக்கியோன்) அனுப்பும் போது நாங்கள் அவனுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்க தயாராயிருக்கும்படி செய்யும். ஏனெனில் அதைச் செய்வதாக அவர் வாக்குரைத்திருக்கின்றார். 98இப்பொழுது நான் அறிகிறேன். அது திரும்பவுமாக வருகிறதை நான் உணர்கிறேன். இப்பொழுது, நான் மல்கியா: 4 என்று கூறின போது நீங்கள் அதைக் குறித்து மனக்கசப்பு கொள்கிறீர்கள். ஆகவே, ஒரு சிறியவரத்தைக் கொண்டு ஆவியை என்னால் பகுத்தறிய முடியும் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு நான் ஒன்றைக் கூறட்டும். நீங்கள் கூறுகிறீர்கள் ''இயேசு கூறினார், நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், உரைக்கப்பட்ட எலியா இவன் தான்.'' ஆனால் பரிசுத்த மத்தேயு; 11-ஆம் அதிகாரம் 6வது வசனத்தில் அவர் கூறுவதை நீங்கள் பார்ப்பீர்களானால், ''நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், உரைக்கப்பட்டவன் இவன்தான், நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன்'' அது மல்கியா 3 ஆகும். மல்கியா 4 அல்ல. ஏனெனில் மல்கியா 4-ல், அவர், “இந்த நாள் வருவதற்கு முன் பூமியானது எரிக்கப்படும். ஜனங்கள் அதன் மேல் நடந்து துரும்பைப் போல சுட்டெரிக்கப்படுவார்கள்'' என்று கூறினார். அது சரி. தனக்கு முன்பாக வரப்போகின்ற செய்தியாளன், தூதனைக் குறித்து அவர் அப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறார். அது எலிசா ஆகும். 99எலியாவின் சால்வையைக்குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் இங்கு காணப்படுகின்ற காரியங்களில் நாங்கள்நம்பிக்கை கொள் வதில்லை. நான்... உண்மையான காரியம் ஒன்று வருவதற்கு முன்னர், அதைச்சீர்குலைக்க நிச்சயமாக, அதைப் போன்ற கட்டுக் கதைகள் வந்தாக வேண்டும். ஆனால், இதைநான் உங்களுக்கு கூறட்டும், இந்த பெந்தெகொஸ்தே காலத்தின் முடிவில் ஒரு செய்தியாளன்எழும்புவான், அந்த காரியங்களை முடிவுக்கு கொண்டு வருவான். அது ஒரு மனிதனாகஇருக்கும். ஒரு குழு அல்ல, ஒரு ஸ்தாபனம் அல்ல; ஆனால் ஒரு மனிதன். அது எப்பொழுதும்அவ்வாறே தான் இருந்தது. ஆகவே தேவன் தன்னுடைய திட்டத்தை மாற்ற முடியாது. அவர் நித்தியமான தேவன். 100நினைவில் கொள்ளுங்கள். அப்படியானால் அந்த செய்தியான் (யோவான்) மல்கியா 4யைச் சேர்ந்த செய்தியாளனான் இருந்தால், அப்படியானால் வேத வாக்கியங்கள் பொய்யாகிவிடும். ஏனெனில் அது கூறினது அது..... பூமியானது துரும்பைப் போல சுட்டெரிக்கப்படும். துன்மார்க்கரின் சாம்பலின் மீது நீதிமான் நடப்பார்கள்'' பாருங்கள்? ஆனால் இயேசு அதைக் கூறவில்லை. அவர் மல்கியா 3யைக் குறிப்பிடுகின்றார். ''எனக்கு வழியை ஆயத்தம் பண்ணத்தக்கதாக என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன்'' அது முற்றிலும் சரியாகும். இப்பொழுது, ஆனால் இந்த மற்றொருவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கு திருப்ப வேண்டியவனாய் இருக்கின்றான். பிள்ளைகளுடைய விசுவாசத்தை மூல வேதமாகிய பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திருப்புவான். மோசேயும் சரியாக அதைத்தான் செய்தான். இயேசுவும் சரியாக அதைத்தான் செய்தார். வேதத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு செய்தியாளனும் சரியாக அதைத் தான் செய்தார்கள். அந்தந்த காலத்தின் முடிவிலே, அவர்கள் செய்தியை திரும்பக் கொண்டு வந்தனர். அந்தந்த நாட்களிலே, மக்கள் ஸ்தாபனங்களின் மூலமாகவும் மற்றைய காரியங்களின் மூலமாகவும் அவை எல்லாவற்றையும் தாறுமாறாக்கி இருந்தனர். 101அதே காரியத்தைத் தான் இன்றும் அவர்கள் செய்திருக்கின்றனர். ஆதலால் நாம் ஒரு செய்தியாளனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் (தேவனே, அவனை அனுப்பும்!) நாம் அவனை வரவேற்போம், ஏற்றுக் கொள்வோம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லை ஐயா! அவன் முட்டாளாக, பைத்தியக்காரனாக இருப்பான். நிச்சயமாக. ஆனால் தேவன் அவனை நிரூபிப்பார். அந்த மெய்யான விசுவாசி, நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள், இயேசு கூறினார், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால்... என் பிதா எனக்கு கொடுத்த'' (இறந்த காலம்) ''என்னிடத்தில் வரும்'' அது சரி, அவர்கள்... இங்கிருக்கும் பாப்டிஸ்ட் போதகமாகிய நித்திய பாதுகாப்பு என்பதில் நான் விசுவாசம் கொள்வதில்லை. ஒருவகையில் நான் அதை நம்புகிறேன். ஆனால் நீ சபையில் இருக்கும் வரை நீ பாதுகாப்பாக இருப்பாய் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீ வெளியே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழிலிருந்து நீ வெளியே செல்வாயானால் உனக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நான் இந்தக் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் வரைக்கும் மழையினிடத்திலிருந்து எனக்கு பாதுகாப்பு உண்டு. ஆகையால் நீ பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் என்று கூறிபின்னர் எப்படி நீ தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க முடியும்? விசுவாசித்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன் என்று நீ கூறி பிறகு வார்த்தையானது சத்தியம் என்பதை மறுதலிக்கின்றாய்? வேதாகமத்தை எழுதியது பரிசுத்த ஆவியானவராய் இருக்கையில் எப்படி அது (மறுதலிப்பது - தமிழாக்கியோன்) பரிசுத்த ஆவியாய் இருக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய சொந்த வார்த்தையை மறுதலித்து, ''நான் - நான் தவறாகிவிட்டேன், நீ தான் சரி என்று கூற முடியுமா? இல்லை, அது தேவன் அல்ல. இல்லை ஐயா. 102கருக்குள்ள பட்டயம்! (கர்த்தாவே, ஒரு மகத்தான செய்தியை எங்களுக்கு அனுப்பும்) அதைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால், பிறகு, அவன் அந்த கற்களை நிர்ணயித்து அந்த கட்டிடத்திற்காக அவைகளை செதுக்கி எடுக்க வரும் போது என்ன நிகழும்?அவர்களில் அநேகர் வார்த்தைப் பரிசோதனையில் நிற்க மாட்டார்கள். அந்த வார்த்தையானது அந்த மனிதனால் எவ்வளவுதான் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், தேவனுடைய வார்த்தையை நேசிப்பதைக் காட்டிலும் தங்கள் ஸ்தாபனங்களைத் தான் அவர்கள் நேசிப்பார்கள். அவன் கர்த்தருடைய நாமத்தில் வருகின்ற ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பான், பூமியில் வருகிற ஒருவனாய் அவன் இருப்பான் நான் அதை விசுவாசிக்கிறேன். ஓ, ''அது ஒரு கூட்டம்மக்களாய் இருக்கும்'' என்று எல்லோரும் கூறிகின்றார்களே. அது ஒரு கூட்டம் மக்களாயிருக்கும் என்று வேதத்தில் எங்குள்ளது என்பதை யாராவது என்னிடம் காட்ட விரும்புகிறேன்; தேவன் தன்னுடைய வார்த்தையை மீறுவாரா? அவரால் அதைச் செய்ய முடியாது. இல்லை ஐயா. அவர் இதை வாக்குரைத்திருக்கிறார். அது ஒரே ஒரு மனிதனாக இருக்கும். ஆகவே மற்றவர்கள் அவனுடன் இருப்பார்கள். நிச்சயமாக, ஆயிரக்கணக்கில் எல்லாவிடங்களிலும் உள்ள முழு சபை விசுவாசிகள் அவனுடன் இருப்பர். 103நோவாவின் நாட்களில் இருந்தது போல, அவர்களில் அநேகம் பேர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் இயேசு, ''நோவாவின் நாட்களில் நடந்தது போல'' என்று கூறினார். நீங்கள் அதை அறிவீர்களா? “நோவாவின் நாட்களில் நடந்தது போல'' (அவர்களை எண்ணுங்கள்) அப்படியே நடக்கும். ''வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என்னுடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை.'' நான் என்ன கூற விழைகிறேன்? ஓ, சகோதரனே, நாம் பட்டியலிட்டுப் (Inventory) பார்ப்பது நல்லது. (எவ்வாறு இருக்கிறோம் என்று - தமிழாக்கியோன்) நான் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாய் இருக்கும். ஒரு நாளில் நாம் விழித்துக் கொள்வோம். பிறகு ஏதோ ஒன்றை தவற விட்டுவிட்டோம் என்று பார்ப்போம். எச்சரிக்கையாய் இருங்கள்! விழித்திருந்து, ஜெபித்து, ஆராய்ந்து, தேடுங்கள், அது உங்களைக் கடந்து சென்று விடாமல் பார்த்து கொள்ளுங்கள். ஆகவே, நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுமானால், தேவன் அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டவராய் இருந்து அதை உறுதிபடுத்துவார். 104அங்கே அவர் என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லோத்தின் நாட்களில் என்ன சம்பவித்தது? அவர் கூறினார்: ''லோத்தின் நாட்களில் நடந்தது போல'' அக்கினி விழுவதற்கு முன்னர் மறுபடியுமாக என்ன சம்பவிக்கும். எந்த விதமான ஒரு செய்தியை சபையானது பெறும்? இப்பொழுது சோதோம் அல்ல, தெரிந்து கொள்ளப்பட்ட சபை. மூன்று பிரிவுகளாக நாம் வைக்கலாம். அங்கே இருக்கின்ற சோதோமியர்கள், அங்கே லோத்தும் நாகரீக ஒழுங்கு முறையைச் சேர்ந்த சடங்காச்சாரமான சபையாகிய அவனுடைய குழுவும்; அங்கிருந்த தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாம். அந்த எல்லா மூன்று வகையினரும் ஒரு செய்தியை, வெவ்வேறு செய்தியாளர்கள் மூலமாகப் பெற்றனர். ஆம், தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு எப்படிப்பட்ட ஒன்று சென்றது என்பதை கவனியுங்கள். ஆபிரகாமிற்கு அவர் என்ன செய்தார். இயேசு ''மனுஷகுமாரன் வரும் போதும் அப்படியே நடக்கும்'' என்று கூறினார். இப்பொழுது அதை நாம் மறுதலிக்க முடியாது. சரியாக இயேசு அதைத்தான் கூறினார். ஆகவே, நிச்சயமாக அவ்விதமாகவே அது இருக்கும். 105இப்பொழுது, அநேகர்... இயேசு வந்து அந்த பரீட்சையை சோதனையை அவர் கொண்டு வந்த போது, ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்று கூறினார். அந்த பரீட்சையில்,சோதனையில் அவர்களால் நிற்க முடிந்ததா? இல்லை. வார்த்தை என்னும் பரீட்சையில் சோதனையில் நிற்க முடியாத எல்லா அறிக்கைகளாகிய கற்கள் (confessions of rocks) யாவும் கற்குவியலில் போடப்படும். அது வெடிப்புள்ளதாய், தண்ணீரினால் கீறல் ஏற்பட்டதாய் இருப்பதால் அது பரிசோதனையில் நிலைக்காது. ஓ, மனிதனே, பிறகு அது ஓட்டை உடைசல் உள்ள கழிவுக் கற்குவியலில் போடப்படும். தேவன் எண்ணிக்கைகளுக்கு பதிலாக நற்பண்புகள் மிக்க குணாதிசயத்தையே தெரிந்து கொள்கிறார். நான் முடிக்க போகிறேன். இவ்வளவு நேரம் உங்களை வைத்திருந்ததற்காக நான் வருந்துகிறேன். உங்களை காக்க வைக்க வேண்டுமென்பது எனது நோக்கமல்ல. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு இந்த கடைசியான காரியத்தை நான் கூறிவிடுகிறேன். பிறகு ஒரு நிமிடத்தில் நான் முடித்து செல்வேன். உங்களுக்கு உதவும்படியாக நீங்கள் ஆராயத்தக்கதாக நான் சிலவற்றைக் கூறினேன் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? 106தேவன் எப்பொழுதுமே குணாதிசயங்களையே கணக்கில் கொள்கின்றார், அங்கத்தினர்களை அல்ல. ஆனால் இன்றைக்கோ நாம் எதிர்மாறாகச் செய்கின்றோம். நாம் குணாதிசயத்திற்கு பதிலாக அங்கத்தினர்களையும், நல்ல ஆடைகளை உடையவர்களையும், நன்றாகக் காணிக்கை கொடுப்பவர்களையும் நாம் கணக்கில் கொள்கிறோம். உஹ் - உஹ். ஒரு குணாதிசயத்தை, குணசாலியை கண்டுபிடிக்கும் வரை எலியேசர் அரும்பாடுபட்டான். அது சரி. யாரை அவன் தெரிந்தெடுப்பான்? ஆகவே அவன் தேவனை உறுதியாக நம்பியிருந்தான். எதற்கு குணாதிசயம்? ஈசாக்கிற்கு குணாதிசயம், குணசாலி, மணவாட்டி, அது சபைக்கு நிழலாயிருக்கிறது. உங்களுக்கு அது தெரியுமல்லவா. அது ஆபிரகாமின் இயற்கையான, மாம்சீக வித்தாக இருந்தது, இது ஆபிரகாமின் இராஜரீக வித்தாக இருக்கின்றது நல்லது, அந்த செய்தியாளனாகிய எலியேசர் ஒரு மணவாட்டியை, ஒரு குணசாலியை தேடிக் கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் என்றால், அந்த மனிதன் கடைசி நாளிற்குரிய ஒரு செய்தியாளனாக வந்து கிறிஸ்துவிற்காக ஒரு மணவாட்டியை கண்டெடுக்க முயற்சித்தக் கொண்டிருப்பானானால், ஒரு ஸ்தாபன அங்கத்தினர்களுக்காக அவன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். மனமகிழ்வுடன் சம்மதம் தெரிவிக்கின்ற ஒரு குணசாலியைத் தான் அவன் தேடிக் கொண்டிருப்பான். கவனியுங்கள்! முதலாவதாக நல்ல குணாதிசயம், பிறகு ஈசாக்கை சந்திக்கத்தக்கதாக அவளை ஆயத்தப்படுத்துவது, அவன் அந்த குணாதி சயத்தைக் கண்டெடுத்தவுடன் ஈசாக்கைக் குறித்த தன்னுடைய செய்தியில் நிலைத்து நிற்கத்தக்கதாக அவளைப் பக்குவப்படுத்தினான். 107கடைசி நாட்களுக்குரிய, சாயங்கால வெளிச்சத்திற்குரிய அந்த செய்தியாளன் அவன்தான். முதலாவதாக அந்த சபையைதேடி (செய்தியை அவர்கள் எங்ஙனம் விசுவாசிப்பார்கள்). அதைத் தேடி கண்டெடுப்பான். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? உங்களையும் உள்ளே வர அனுமதிக்கின்ற உங்களுக்கு முன்பாக வாசற் கதவை மூடாதிருக்கின்ற அந்த சபை எங்கிருக்கின்றது என்று அவன் தேடுவான். ஆகவே நீ அங்கு செல்வாயானால், அப்படியானால் உன்னுடைய குணாதிசயத்தை கண்டெடுத்தாய். இப்பொழுது அவள் நிலைத்து நின்று மணவாட்டி எவ்விதம் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவாளானால், அவள் ஆடையுடுத்திக் கொள்ளத்தான் வேண்டும் (மணவாட்டியின் வஸ்திரத்தை - தமிழாக்கியோன்) அசையாமல் நிலைத்து நில்! அவள் தானே... 108ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சிறிய ரெபெக்காளைப் பாருங்கள், அவளுடைய சிறிய இருதயமானது துடித்துக் கொண்டிருந்தது. அவள் அவன் அவளிடம் கூறிக் கொண்டிருந்தான். இப்பொழுது நீ அரும்பாடுபட்டுள்ளாய், ''நான் எங்கே போவேன்?'' அந்த குணாதிசயத்தை கண்டெடுக்கும் வரை. நான் அந்த குணாதிசயத்தை, குணசாலியை கண்டெடுத்த பிறகு, அவளை நிலைகொள்ளச் செய்து (செய்தியில் தமிழாக்கியோன்) அவரைச் சென்று சந்திக்கத்தக்கதாக அவளை ஆயத்தம் செய்வேன். ஓ, என்னே, என்ன ஒரு மகத்தான காரியம்! (நமக்கு அந்த கடிகாரத்தில் இன்னும் சிறிது நேரம் இருந்தால் நலமாயிருக்கும்) அவளை ஆயத்தம் செய்து; அவனைக் குறித்த தன்னுடைய செய்தியைக் கேட்கத்தக்கதாக அவளை நிலைகொண்டு நிற்கும்படி செய்தல். எலியேசர் தன்னைக் குறித்து பேசவில்லை. ஆனால் தன்னை அனுப்பின நபரைக் குறித்தே அவன் பேசுகிறான். தன்னை அனுப்பினவர் அவர் தான் என்று நிரூபிக்கத்தக்கதான வெகுமதிகளை (வரங்களை - தமிழாக்கியோன்) (Gifts) அவன் கொண்டிருந்தான். ஆமென்! இக்காரியங்களைக் கொண்டு அவளை உடுத்துவிக்க விரும்பினான். அவளை எப்படி ஆயத்தம் செய்தான் என்பது உங்களுக்கு தெரியும். அவளுடைய முகத்தை கழுவத்தக்கதாக அவளை கொண்டு செல்ல என்னால் முடியுமானால்! பாருங்கள்? உங்களுக்கு தெரியுமா? நான் - நான் அதைக் குறித்து பேச தடை செய்யப்படுகிறதை நான் இப்பொழுது உணர்ந்தேன். ஆதலால் நான் பேசாமல் நிறுத்திக் கொள்வது நல்லது. எப்படியாயினும், நான் போதுமான அளவிற்கு கூறியுள்ளேன். நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். இப்பொழுது, கவனியுங்கள், அப்படியே நிலை கொண்டு நில்லுங்கள். 109கவனியுங்கள், கடைசி கால செய்தியாளன், அவனுடைய வேலையானது மணவாளனுக்கு மணவாட்டியை, பரிசுத்தவான்களை ஆயத்தம் செய்வதாகும். அதுதான் அவனுடைய செய்தியாய் இருக்கும். இப்பொழுது நீங்கள் ஏ.பி.சி (A.B.C.) (அ.ஆ.ஈ - தமிழாக்கியோன்) கற்றுக் கொள்ள வேண்டுமா? ஏனென்றால் பின்னர் நீங்கள் அல்ஜீப்ரா கணிதத்தை (Algebra) கற்க ஏதுவாயிருக்கும் அல்லவா? புறம்பேயுள்ள இந்த முத்திரைகள் உடைக்கப்படும் போது மாத்திரமே அவைகள் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும். அது சரி. முதலாவதாக ஏ.பி.சி.யைக் (A.B.C.) கற்றுக் கொள்ளுங்கள். ஏ.பி.சி. (A.B.C.) என்றால் என்ன? “எப்பொழுதும் விசுவாசியுங்கள் கிறிஸ்துவை.'' (ஆங்கிலத்தில் (A.B.C.) என்கின்ற ஒவ்வொரு பதத்திற்கும் தீர்க்கதரிசி ஒவ்வொரு வார்த்தைகளை கூறுகிறார். 'A' என்பதற்கு, ”Always“ என்கிறார். தமிழில் அதற்குரிய அர்த்தம். ''எப்பொழுதும்” என்பதே. அதே போன்று, 'B' என்பதற்கு “Believe” என்கிறார். அறத்கான தமிழ் அர்த்தம் ''விசுவாசியுங்கள்“ என்பதே. அதே போன்றே 'C' என்பதற்கு, ”Christ“ என்கிறார். அதற்குரிய தமிழ்வார்த்தை ''கிறிஸ்துவே.'' ஆகவே (A.B.C.) ”Always Believe Christ“ என்பதற்குரிய தமிழ் அர்த்தம் எப்பொழுதும் விசுவாசியுங்கள் கிறிஸ்துவை'' என்பதே தமிழாக்கியோன்) உங்களுடைய கோட்பாடுகளை அல்ல) கிறிஸ்துவை பாருங்கள்? யாரோ ஒருவர் கூறினார் என்பதை அல்ல, அவர் என்ன கூறுகின்றார் என்பதை மாத்திரம் விசுவாசியுங்கள். ஒரு மனிதன் உங்களிடம் வந்து, ''ஸ்திரீகளே, நீங்கள் உங்கள் மயிரைக் கத்தரித்துக் கொள்வது சரியானது தான்'' என்று கூறுவானானால், அது முரண்பாடான காரியமல்லவா? அவன் பொய் சொல்கின்றான் என்று அறிந்து கொள்வீர்கள். வேதம் அது தவறு என்கிறது. அவன் வந்து, “நான்கு அல்லது ஐந்து மனைவிகளை நீங்கள் உடையவர்களாயிருந்தாலும் நீங்கள் ஒரு மூப்பராக இருக்கலாம்'' என்பானானால் அவன் பொய் சொல்கின்றான். அது வார்த்தைக்கு முரண்பாடான ஒன்றாகும். பாருங்கள்? நாம் பேசிக் கொண்டிருக்கின்ற மற்றைய காரியங்கள், அதை வார்த்தையுடன் பார்த்து, வார்த்தை சரியாயிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 110சபையை வார்த்தைக்குத் திரும்பக் கொண்டு வாருங்கள். இப்பொழுது, மல்கியா 4-ல் உள்ள செய்தியாளன் என்ன செய்ய வேண்டியனாய் இருக்கிறான்? மூல விசுவாசத்தை, உயிர்த்தெழுதலின் விசுவாசத்தை திரும்ப கொண்டு வருதல். மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு இயேசுவை அவர்கள் கண்டனர். அவர்கள் மத்தியில் அதை அவர் நடப்பித்தத்தை அவர்கள் கண்டனர். சில வார்த்தைகள் மாத்திரமே பேசக்கூடிய மனிதராய் அவர்கள் இருந்தனர். அவர்கள் சென்று வார்த்தையைப் பிரசங்கித்தனர். ஓ, அவர்கள் நீண்ட நேரம் பிரசங்கித்தனர். பவுல் ஒரு சமயம் ஒரு இரவு முழுவதும் பிரசங்கம் செய்தான். பாருங்கள்? ஒரு மனிதன் கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து மரித்துப் போனான். அவன் (பவுல் - தமிழாக்கியோன்) அந்த மனிதனுடைய சரீரத்தின் மேல் படுத்து கொண்டான், அவனை மறுபடியும் உயிர் பெறச் செய்தான். பாருங்கள், பாருங்கள். பிரசங்கித்துக் கொண்டேயிருந்தான். 111இப்பொழுது கவனியுங்கள். Ph., L.L.Q, U.S.T. இன்னும் இன்றைக்கு நீங்கள் அழைத்துக் கொள்ளும் மற்றைய படிப்புகளை உடைய மனிதர்களை விட அவர்கள் வித்தியாசமானவர்களாய் இருந்தனர். என்ன? அது செய்தியாளனை செய்தியாளனைக் காட்டிலும் செய்தியானது அவிசுவாசிகளிலிருந்து விசுவாசிகளை வேறு பிரிக்கின்றது. சிலர் அதற்கு கீழ்படிந்து அதனுடன் நடப்பார்கள். மற்றவர்கள் நடக்க மாட்டார்கள். லூத்தர்களில் சிலர்.... கத்தோலிக்கர்களில் சிலர் லூத்தரின் வழியில் நடந்தனர், சிலர் நடக்கவில்லை. சில லூத்தரன்கள் மெத்தோடிஸ்டுகளின் வழியில் நடந்தனர். சிலர் நடக்கவில்லை. சிலர் பெந்தெகொஸ்தேயுடன் நடப்பர், சிலர் நடப்பதில்லை. சிலர் சாயங்கால வெளிச்சத்துடன் நடப்பர். சிலர் நடவாதிருப்பார்கள். அது சாயங்கால வெளிச்சமா அல்லது இல்லையா என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்ளப் போகிறீர்கள்? அதை வார்த்தையோடு சோதித்துப் பாருங்கள் (ஒரே ஒரு வார்த்தையில் அல்ல, ஒன்று சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையோடும்) அது சரியா, அல்லது தவறா என்று பாருங்கள். ஓ, அதனுள் என்ன இருக்கின்றது? அப்படியானால் இந்த செய்தியானது தேவன் தான் என்ன செய்ய போகின்றார் என்று கூறப்பட்டு, அது தேவனால் நடப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்கின்ற நிருபணமாய், வார்த்தையோடு சரிவர பொருந்தியிருக்கிறதென்றால், முந்தைய தீர்க்கதரிசிகள் செய்த விதமாக, மற்றைய காலங்களில் நிரூபிக்கப்பட்ட விதமாகவே வார்த்தையானது நிரூபிக்கப்படும். 112கவனியுங்கள், செய்தியானது... கவனியுங்கள் செய்தியானது மக்களால் புறக்கணிக்கப்படும் போது செய்தியாளனும் முற்றிலுமாக தோல்வியுள்ளவனாகக் காணப்படுவான். அவனுக்கு வேறே வாசல் கிடைக்காது. வேறு இடம் அவனுக்கு கிடைக்காது. நம்முடைய கர்த்தர் இருந்தது போல: நினைவில் கொள்ளுங்கள், அவர்.. ஓ, அவர் ஒரு இளந் தீர்க்கதரிசியாக வியாதியஸ்தரை சுகப்படுத்தின போது, ஓ, என்னே. அவர் ஒரு மகத்தானவர்! ''ரபி அவர்களே எப்படி இருக்கிறீர்கள்?'' ஆனால் ஒரு நாள் அவர் உட்கார்ந்து அவர்களுக்கு சத்தியத்தை கூற ஆரம்பித்தார். சபை, மக்களின் தயவு அவருக்கு கிடைத்தது. ஆயிரக்கணக்கானோர் அவர் பின்சென்றனர். பன்னிரண்டு பேர்களுக்கு அப்பாற்பட்டு இன்னும் அவரைச் சுற்றி எழுபது ஊழியக்காரர்களை கொண்டவராக இருந்தார். ஒரு நாளிலே அவர் அப்பத்தை அல்லது அந்த... தான் தேவன் என்பதை நிருபிக்கதக்கதாக அவர் அப்பங்களை பெருகும்படிச் செய்தார். ஏனெனில் வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியச் செய்தவர் தேவனே ஆகும். ஆம், பாருங்கள்? அவர் அப்பங்களைப் பெருகும்படி செய்தார். ஆகவே, அதன் பிறகு அவர் தண்ணீரின் மீது நடந்தார். அற்புதங்களைச் செய்தார். இவர்தான் (இயேசு - தமிழாக்கியோன்) அவர், (தேவன் - தமிழாக்கியோன்) என்பதை நிரூபிக்கும்படியாக அவர் செய்த காரியங்களை இவர் செய்தார். ஆகவே, அதன் பிறகு அவைகளையெல்லாம் செய்தபின், அவர் அமர்ந்து மக்களுக்கு கண்டிப்புடன் போதனை செய்ய ஆரம்பித்தார். மக்கள் திரும்பிச் சென்று விட்டனர். அந்த எழுபது பேரும், ''அஹ்! யார் இதை கேட்பார்கள்? இது ஒரு கடினமான காரியம் நாங்கள் நினைத்த பெரிய காரியத்தை எல்லாம் நீ கடிந்து கொண்டு கிழித்தெறிகின்றாய். இப்பொழுது, இக்காரியங்களை எல்லாம் கூறுவதற்கு நீ யார்?'' என்று கூறினர். ஆகவே அவர்கள் கடந்து சென்று விட்டனர். நோவாவின் நாட்களில் இருந்தது போன்றும், சோதோமின் நாட்களில் இருந்தது போன்று இருந்த அந்த, தன்னுடைய சிறு குழுவிடம் இயேசு, ''நீங்களும் போக மனதாயிருக்கிறீர்களோ?'' என்றார். அப்பொழுது, பேதுரு அந்த மகத்தான வார்த்தைகளைக் கூறினான். ''கர்த்தாவே, நாங்கள் எங்கே போவோம்?'' (தேவனே எங்களுக்கு உதவும்). 113கவனியுங்கள், செய்தியானது புறக்கணிக்கப்பட்டு செய்தியாளன் தோல்வியுற்ற நிலையில் காணப்படும் போது, அப்பொழுது தான் தேவன் காட்சியில் இடைபடுகிறார். அவனுடைய செய்தி முற்றுப் பெறுகிறது. நோவா, (இப்பொழுது முடித்துவிடுகிறேன்) நோவா, தன்னுடைய பேழையின் வாசலிலே நின்று நூற்று இருபது வருடங்கள், அவர்கள் முடிவாக அவனை பரியாசம் செய்து நிந்திக்கும் வரை பிரசங்கம் செய்தான். நோவா, பேழைக்குள்... எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணி உள்ளே சென்று விட்டான். தேவன் கதவை அடைத்தார். ஜனங்கள் சுற்றிலும் நின்று கொண்டு என்ன நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஏழு நாட்கள் அவன் உள்ளே இருந்து வேர்வை சிந்தினான். ஆனால் ஏழாம் நாளிலே மழை வந்தது. ஹ-ஹ்-அஹ். மோசே, அவன் எதில் இருந்தான்? கடமை என்னும் பாதையிலே ஜனங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான். செங்கடல் அவனுடைய பாதையில் குறுக்கிட்டது. தன் பாதையின் முடிவில் அவன் இருந்தான். பாதையின் முடிவில் அந்த பொழுதில் தான் தேவன் பலத்த கீழ்க் காற்றுடன் வந்து சமுத்திரத்தை பிரித்தார். 114தானியேல், தன்னுடைய செய்தியில் நிலையாக நின்று கொண்டிருந்தான். ''இந்த ராஜாவினுடைய வழியில், உலகத்தில் என்னை நானே கறைபடுத்திக் கொள்ள மாட்டேன்.'' தேவனுக்கு உண்மையானவனாய் நின்று, சரியாக தன்னுடைய பாதையின் முடிவில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கடைசி வேளை வந்து விட்டது போன்று இருந்தது. சிங்கக் கெபிக்குள் அவனை அவர்கள் தூக்கி போட்டனர். தேவன் காட்சியில் இடைப்பட்டார். ஒரு நாள் காலை, பாபிலோனில்... ஆமென்! மேலே வானத்தை என்னால் காண முடிகிறது, ஒரு - ஒரு சிங்காசனத்தை என்னால் காண முடிகிறது. அதை சுற்றிலும் தூதர்கள் இருந்தனர். இங்கே பாபிலோனை நோக்கிப் பாருங்கள், ஒரு எரிகின்ற அக்கினி சூளையை என்னால் காண முடிகின்றது. அங்கே மூன்று பிள்ளைகள் நின்று கொண்டு, ''எங்களை விடுவிக்க வல்லவராய் இருக்கிறார். உன்னுடைய சொரூபத்தை நாங்கள் வணங்கப் போவதில்லை. ஏனெனில் அது வார்த்தைக்கு முரணாய் உள்ளது'' என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. (பாருங்கள்? ''இங்கு தான் நாம் நிற்கின்றோம்.'') 115''அப்படியானால் சரி, படிகளில் ஏறுங்கள், நீங்கள் சுட்டெரிக்கப்படப் போகிறீர்கள்'' என்று ராஜா கூறினான். தங்கள் குடும்ப ஆண் வழி மரபின் முடிவில் நின்று கொண்டிருந்த அந்த திடமான மனிதர், இங்கே படிப்படியாக மேலே ஏறி வருகின்றனர், மேலும் வெப்பம் அதிகமானது, அதிகரித்தது. சிங்காசனத்தின் பக்கத்தில் இருந்த ஒரு தூதன் நிற்கிறதைக் என்னால் காண முடிகிறது. அவன், பட்டயத்தைப் பிடித்து அதை வெளியே உருவி எடுத்து, ''பிதாவே, கீழே நோக்கி அங்கே பாரும், அங்கே நடந்து கொண்டிருப்பது என்ன. என்னைக் கீழே செல்ல அனுமதியும், நான் காபிரியேல், நான் காட்சியையே மாற்றிவிடுகிறேன்'' என்று கூறினான். ''உன்னுடைய பட்டயத்தை உறையிலே போடு காபிரியேல், நானும் அதை பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.'' இங்கே வேறொருவன் வந்து, “பிதாவே, நான் காஞ்சிரவகை பூண்டு (worm wood), தண்ணீருடன் உள்ள, அழிக்கின்ற வகையைச் சார்ந்தவன். ஜலப்பிரளயத்திற்கு முன்னர், மனிதன் பாவம் செய்து, உம்முடைய ஜனங்களை துன்புறுத்தினான். ஆதலால் நான் - நான் முழு உலகத்தையே, ஒரு தண்ணீர் உருண்டை கோளமாக மாற்றி விட்டேன். இந்த காலை வேளையில் பாபிலோனை உலகவரை படத்திலிருந்தே அழித்து விடுகிறேன். நான் செல்ல அனுமதியும்'' என்று கூறினான். “உன்னால் முடியும் என்பது எனக்குத் தெரியும் காஞ்சிர வகைப்பூண்டே (worm wood) நீ ஒரு உண்மையுள்ள தூதனாவாய். கவனி? ஆனால் நான் உன்னை அனுப்ப முடியாது, இது என்னுடைய பணியாகும். நானே செல்கின்றேன். ''இதோ, நீர் அவர்களைக் கண்டீரோ?'' ''இரவு முழுவதும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுடைய ஜெப ஆராதனையை நான் கேட்டேன். என்னுடைய வார்த்தைக்காக அவர்கள் எடுத்திருக்கும் உறுதியான நிலையை, தீர்மானத்தை நான் கண்டேன். ஆகவே சரியான நேரத்தில் அங்கு நான் இருப்பேன்.'' ஓ, என்னே. அவர் எழுந்திருப்பதை என்னால் காண முடிகிறது. அவருடைய ராஜவஸ்திரங்கள் அதைப் போன்று அவரைச் சுற்றிலும் தொங்குகின்றது, அவர், ''கீழ் காற்றே, வடக்கு, தெற்கு, மேற்கு காற்றுகளே இங்கே வாருங்கள். அந்த இடியின் கீழ் வந்து ஏறி நில்லுங்கள். இந்த காலை வேளையில் உங்களை இரதமாக்கி உங்கள் மீது சவாரி செய்யப் போகிறேன். நான் கீழே பாபிலோனிற்குள் போகப் போகிறேன். காட்சியை நான் மாற்றப் போகிறேன்'' என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. ஓ, சகோதரனே, அவர் சரியான நேரத்தில் அங்கு இருந்தார். அவருடைய கண் சிட்டுக்குருவியின் மேல் நோக்கமாயிருக்கிறது. அவர் என்னையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இன்றிரவு இன்னுமாக என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார், என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அவர் உன்னையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். நாம் நிற்போமோ அல்லது நிற்கமாட்டோமா என்பதையும், என்ன தீர்மானங்களை நாம் எடுப்போம் என்பதையும் நாம் வார்த்தைக்கு உண்மையாய் நிற்போமா அல்லது, அதை விட்டு புறம்பே சென்று விடுவோமா என்பதையும் அவர் கவனித்து விட்டார். நீநினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. 116யாக்கோபு , வீட்டிற்கு செல்ல ஊக்கம் பெற்றவனாய் தன்னுடைய வழியில் சென்று கொண்டிருந்தான். அவனுடைய சகோதரனை அவன் சந்திக்க வேண்டியவனாய் இருந்தான். ஓ, ஆனால் ஒரு இரவு அவன் தேவனோடு போராடினான். தன்னுடைய சகோதரனை சந்திக்க பயந்தான். ஆனால் அடுத்த நாள் காலையில் அவன் ஒரு பயமற்ற, நொண்டுகின்ற இளவரசனாக, ''ஏசாவும் அவனுடைய சேனையும், மற்ற எதுவும் எனக்குத் தேவையில்லை'' என்றான். தேவன் காட்சியில் இறங்கினார். பாருங்கள். ஒரு வினோதமான வழியில் அவர் கிரியை செய்கிறார். 117இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று நிருபிக்கப்பட்ட பிறகு புறக்கணிக்கப்பட்டு, அந்த நாளிற்குரிய வெளிச்சமாக அவர் இருந்தார். (இன்னுமாக அவர் வெளிச்சமாக இருக்கிறார்) காட்சியில் வந்தார். ஆகவே அந்த மக்கள், அவர் எவ்வளவு காலமாக அப்பம், மீன்கள் மற்றும் அப்பத்துண்டுகள் அவர்கள் அவரைப் பின்பற்றினர். ஆனால் வார்த்தைக்குரிய சத்தியத்தை அவர்களுக்கு அவர் கூற ஆரம்பித்த போது, அது அவர்களை வேறு பிரித்தது. தங்கள் சொந்தபாரம் பரியங்களை அவர்கள் உடையவர்களாய் இருந்து அதைப் பிடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு முரணான காரியமாயிருந்தது. ஆனாலும் அவர் வேத வாக்கியங்களுடன் சரியாகக் காணப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், குருடாக்கப்பட்ட உலகத்தினுடைய கண்கள் அதைக் காண முடியவில்லை; இப்பொழுதும் சரி, ஒவ்வொரு காலத்திலும் அதாவது நான் கூற முனைவது என்னவென்றால் ஒட்டு மொத்தமாக அவர்களாலே முடியவில்லை. நடந்தது என்ன?அவர் தோல்வி அடைந்தது போன்று காணப்பட்டது. 118அந்த க்ஷணப் பொழுதிலேயே அவருடைய புகழானது அவரை விட்டு அகன்றது என்பதை நீங்கள் கவனியுங்கள். எப்பொழுது?அவர்களுக்கு அவர் வார்த்தையை கூற ஆரம்பித்த பொழுதிலிருந்து. அவர் சென்று சுகமளிக்கும் ஆராதனைகளையும் மற்றும் கூட்டங்களையும் நடத்தின போது, ''ஓ, ரபி, இங்கு வாருங்கள், ரபி இங்கே வாருங்கள்,'' என்று ஒவ்வொருவரும் அவரை அழைக்க விரும்பினர். ஆனால் அவருடைய போதகமானது ஆரம்பமான போதோ, ''ஓ, உம்முடைய போதகங்கள் எங்கள் ஜனங்களை கலக்க முறச் செய்கிறது. ஓ, ரபி, என்னுடைய சபையில் இன்னுமாக உம்மை என்னால் வைத்திருக்க முடியாது. ஏனென்றால் நீர் எங்களுடைய ஜனங்களைக் குழப்புகிறீர். உம்முடைய போதகமானது நாங்கள் விசுவாசிக்கின்ற காரியத்திற்கு மிகவும் முரண்பாடாய் இருக்கின்றது. ரபி, இதை உம்மால் செய்யக் கூடுமா.'' (அது இன்னும் மாறவேயில்லை.பாருங்கள், மாறவேயில்லை, ஆம்) அவர் யார் என்பதை வேத வாக்கியங்கள் நிரூபித்தும், உறுதிப் படுத்தப்பட்டவராய் அவர் இருந்தும் கூட இன்னுமாக அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. முடிவில் சாத்தான் அவரை, சிலுவையில் அறைந்து அவரைப் பிடித்து விட்டேன்'' என்று எண்ணினான். அது வரையிலும் அவர் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். முடிவாக அவருடைய காரியத்தை முடித்து விட்டதாக எண்ணி அவரை கல்லறைக்குள் வைத்தனர். ஆனால் அந்த பொழுதில் தான் தேவன் காட்சியில் வந்தார். அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்தார்! என்னே? 119அதே விதமாகத்தான் பவுல், அவன் கூறினான். ''எல்லாரும். தேமா, என்னை விட்டு போய் விட்டான். வார்த்தையின் நிமித்தமாக எல்லா மனிதரும் என்னை விட்டுப் போய் விட்டார்கள்.'' தேமா, இரவு நடன கேளிக்கை விடுதிகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் சென்றிருப்பான் என்று நான் விசுவாசிக்கவில்லை. ஆனால், தேமா போய்விட மனதாயிருந்தான். ஆகவே மற்றவர்கள் எல்லோரும் சென்ற இடத்திற்கே தேமாவும் சென்று விட்டான். ஆகவே, தான் பவுல், “தேமா, என்னை விட்டு பிரிந்து போய் விட்டான்'' என்று கூறினான். என்ன? அவனுடைய ஊழியமானது அதனுடைய தலைக்கல்லை நோக்கி, அதனுடைய முடிவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாயிருந்தது. ஏனென்றால், அவன் ஸ்தேவானைக் கொன்றவனாயிருந்தான். அவனுடைய மரணத்திற்கு இவன் சாட்சியாயும், அதற்கு ஒப்புதல் அளித்தவனாயும் இருந்தான். ஆகவே அவள் மரிக்க விரும்பினான். அந்த அகபு, அந்த பிரசித்திப் பெற்ற தீர்க்கதரிசி அவனோடு (பவுல் - தமிழாக்கியோன்) நின்று, அவன், எருசலேமிற்கு போகக் கூடாது என்று கூறின போது அவன், ''போகக் கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் எருசலேமிற்குள் சென்று சங்கிலிகளால் கட்டப்பட்டு கட்டப்பட்டவனாக இருக்க மாத்திரம் நான் விரும்பவில்லை. ஆனால் நான் சென்று கர்த்தராகிய இயேசுவிற்காக நான் மரிக்கவும் ஆயத்தமாயிருக்கின்றேன்'' என்று கூறினான். அது என்னவாயிருந்தது? அவன், தன்னுடைய ஊழியத்தை முத்தரித்துக் கொண்டிருந்தான். 120ஓ, ஜீவிக்கின்ற தேவனுடைய சபையே, நாம் இரவு முழுவதும் பேசிக் கொண்டேயிருக்கலாம். நாம் எவ்வாறு நம்முடைய செய்தியை முத்தரிக்கப் போகிறோம்? அதை நாம் எவ்வாறு செய்யப் போகிறோம்? தேவனே, இந்த வார்த்தையை நாங்கள் எடுத்து வீரமுள்ளவர்களாக நிற்க உதவி செய்யும். வார்த்தையுடன் நான் மரிக்கட்டும்; வார்த்தையுடன் வாழட்டும், வார்த்தையோடு மரிக்கட்டும். வெளிச்சத்தை பரவச் செய்யும், ஏனென்றால் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். நண்பர்களே, நாம் அந்த மணி நேரத்தில் உள்ளோம். நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், அதை நாம் விசுவாசிப்போம். முதலாவதாக உங்களை இவ்வளவு நேரமாக காக்க வைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சரியாக இரண்டு மணி நேரங்கள், ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் என்று நான் நினைக்கிறேன். மனவருத்தம் ஏற்படும்படி எதுவும் இல்லை என நான் நம்புகிறேன். மனதைப் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல. அப்படிப்பட்ட ஒரு எண்ணம் எங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் இருக்குமென்றால் இங்கிருக்கும் ஊழியக்காரர்களாகிய நாங்கள், பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட இங்கிருக்கும் என் சகோதரர்கள் அந்த காரியங்களை மாத்திரமே கூறுவோமென்றால், நாங்களே தவறானவர்களாக காணப்படுவோம். பாருங்கள்? 121நான் இரட்சிக்கப்பட்ட போது என்னுடைய பாப்டிஸ்டு போதகரிடத்தில் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன் என்றும், ஆகவே இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம்... கர்த்தருடைய தூதன் நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினதையும் அவரிடம் (பாப்டிஸ்டு போதகர் - தமிழாக்கியோன்) கூறினேன் அதற்கு அவர் ''பில்லி, நீ மன பயத்தினால் ஒரு பயங்கரமான கனவை கண்டிருப்பாய்'' என்று கூறினார். நான், ''டாக்டர் டேவிஸ், நான் ஒரு தூதனைக் கண்டேன்'' என்று கூறினேன். அவர், ''ஓ, முட்டாள்தனம்! அது பிசாசினால் உண்டான ஒன்று நீ ராஜாக்களுக்கும், ஆளுநர்களுக்குமா பிரசங்கிக்கப் போகிறாய்?'' என்று கேட்டார். பாருங்கள்? ஓ, என்னே, அது மிகவுமாய் என்னைப் புண்படுத்தியது. நான், “அதைத் தான் அவன் (கர்த்தருடைய தூதன் - தமிழாக்கியோன்) கூறினான்'' என்று கூறினேன். ''ஏழாம் வகுப்புப் படிப்பைக் கொண்டா?'' என்று அவர் கேட்டார். ''அதைத் தான் அவன் கூறினான்'' என்று நான் கூறினேன். அவர், ''யார் உனக்கு செவி கொடுப்பார்கள் என்று நினைக்கிறாய்? சிறந்த மருத்துவ ஆராய்ச்சிக் காரியங்கள் மற்ற எல்லாமும் இன்றைக்கு இருக்கின்ற வேளையில் நீ எப்படி சென்று தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கிக்கப் போகின்றாய்?'' என்று கேட்டார். ''எத்தனை கோலியாத்துக்கள் அங்கே நின்றாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல'' என்று நான் கூறினேன். அவர்கள், உனக்கு செவி சாய்ப்பார்கள் என்று நினைக்கிறாயா என்று அவர் கேட்டார். அதற்கு நான், ''தேவன் என்னை அனுப்புகிறார் என்றால் எனக்குச் செவி கொடுக்க யாராவது இருப்பார்கள்'' என்று கூறினேன். 122ஜனங்களாகிய உங்களைக் குறித்து அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. நான் உங்களிடம் வந்த போது, ஒரு கை உறையை கையில் பொருத்துவது போன்று இருந்தது, நான் உங்களுடன் சரியாக பொருந்திவிட்டேன். நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். என்னுடைய சகோதரர்களாகிய போதகர்களை நான் நேசிக்கின்றேன். இன்றிரவு நாம் இங்கே அமரத்தக்கதாகவும், இவ்விதமான ஒரு செய்தியை பிரசங்கிக்கத் தக்கதாகவும், இந்த சகோதரன் தனது சபையைத் திறந்து கொடுத்தது போல ஒரு பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு அல்லது லூத்தரன்கள் தங்களுடைய சபையை திறந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா, செய்யவே மாட்டார்கள். இந்த மனிதர்களோ சத்தியத்தை விசுவாசிக்கின்ற வீரமுள்ள நபர்கள். இப்பொழுது, வார்த்தையோடு இவர்களுடன் ஒருமித்து நின்று உலகத்தின் காரியங்களிலிருந்து விலகி நில்லுங்கள். சகோதரிகளே உங்கள் தலைமயிர் வளரட்டும். நேர்த்தியாக ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இந்த இழிவான, வெட்கத்திற்குரிய காரியம் உங்கள் மீது உள்ளது. உங்கள் முகத்தில் உள்ள அந்த சாயத்தை எடுத்துப் போடுங்கள். பாருங்கள்? சாயத்தினாலும், உங்கள் மயிரைக் கத்தரிப்பதின் மூலம் உங்களை அழகு படுத்துவதைக் காட்டிலும் நீங்கள் அணிந்து கொள்வதற்கென அதிகமான வேத வாக்கியம் உங்களுக்கு இருக்கின்றது. அது சரி. அதைச் செய்யாதீர்கள். அதைச் செய்யாதீர்கள், ஒரு ஸ்திரீ அவ்விதம் செய்வது கனவீனமான காரியம் என்று வேதம் கூறுகின்றது. தலை மயிரானது அவளுடைய மகிமையாயிருக்கிறது. இப்பொழுது, “அது ஒரு சிறு காரியம் தானே'' என்று நீங்கள் கூறலாம். அது சரிதான், ஆனால் சிறு காரியங்களை வழியிலிருந்து அகற்றிவிட்டு பிறகு பெரிய காரியங்களைக் குறித்து நாம் பேசலாம். துவக்கமானது சரியானதாக இருக்கட்டும். 123இப்பொழுது சகோதரர்களே, ஓ, என்னே. மனிதனுக்கு ஒரு காரியத்தை நான் கூறட்டும். திரு. என்னுடைய சகோதரனே, உன்னுடைய மனைவி அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய நீ அனுமதித்து, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட ஒருவன் என்று நீ கூறிக் கொள்வாயானால், உன்னைக் குறித்து நான் வெட்கமடைகிறேன். உன்னுடைய மனைவியை அப்படி தெருவில் திரிய அனுமதித்தால், அது உனக்கு ஒரு வெட்கக்கேடான காரியமாகும். நீ இவ்விதமாக பாலுணர்ச்சியை தூண்டும் விதத்திலும் மற்றக் காரியங்களைப் போலவும் நீ ஆடை அணிந்திருக்கிறாய், வேதம் என்ன கூறுகிறது என்பது உனக்குத் தெரியுமா, இயேசு, ''ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரஞ் செய்தாயிற்று'' என்று கூறினார். நீங்கள், ''இப்பொழுது என்னுடைய சகோதரனே ஒரு நிமிடம் பொறுங்கள், நான் மாசற்றவளும் பேதையுமாயிருக்கிறேனே'' என்று கூறலாம். என் சகோதரியே நீ அப்படித்தான் என்று நான் நம்புகிறேன். உன்னுடைய இயற்கையான நடத்தையில் நீ மாசற்ற பேதை தான். ஆனால் நீ உன்னை தானே அவ்விதமாக காண்பித்து, ஒரு பாவி உன்னை நோக்கிப் பார்ப்பானானால், யார் குற்றவாளி? நீ தான். ஏனென்றால் அவ்வாறே உன்னைத் தானே காண்பித்தாய். பிறகு நியாயத்தீர்ப்பின் நாளிலே, அந்த பாவி விபசார குற்றத்திற்கு பதில் கூறும் போது, தன் இருதயத்தில் யாருடன் அவன் விபச்சாரம் செய்தான் உன்னுடன் தான். ஏன்? ஏனென்றால் நீ அவ்விதமாக உன்னைத் தானே காண்பித்துக் கொண்டாய். இப்பொழுது அதுதான் உண்மை , சத்தியம் ஆகும். சகோதரியே, தயவு செய்து அதை, அதை நீ செய்யமாட்டாயா, இயேசுவின் நாமத்தில், உங்கள் சகோதரனாக நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்ளலாம் அல்லவா? சகோதரனே, அவ்விதமாக நீ உன் வீட்டை நடத்திக் கொண்டிருப்பது வெட்கக் கேடான ஒரு காரியமாகும். சரிபடுத்திக் கொள். நீ ஒரு மனிதனாயிருப்பதால் உன்னைக் குறித்து மேம்பட்ட நம்பிக்கையைக் கொண்டுள்ளேன். பாருங்கள்? 124இரண்டு அல்லது மூன்று மனைவிகளுடன் வாழுகின்ற மூப்பர்களையும், அதைப் போன்ற மற்ற காரியங்களையும், ஜனங்களையும் உள்ளே வர அனுமதிக்கின்ற போதகர்களே, ஊழியக்காரனே, உனக்கு வெட்கம் என்பது இல்லையா? அந்த காரியங்களைக் குறித்து வெட்கமடைவதில்லையா? புகை பிடிக்கின்ற, விபச்சாரத்தில் வாழ்கின்ற, மற்ற எல்லாக் காரியங்களையும் செய்கின்றவர்களை அங்கத்தினர்களாக சேர்த்துக் கொண்டு, பிரசங்க மேடையிலிருந்து அதைக் குறித்து ஒன்றுமே கூறாமல் இருப்பது உனக்கு வெட்கக்கேடான காரியமாகும். சகோதரனே உனக்காக நான் ஜெபிக்கின்றேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னோடு கூட பொறுத்திருந்து உங்களுடைய பொறுமைக்காக நன்றி. இப்பொழுது, நான் ஆச்சரிய முறுகிறேன்.... அந்த சாயங்கால வெளிச்சமானது வந்திருக்கிறது. சாயங்கால வெளிச்சம் இங்கிருக்கிறது. வார்த்தைக்கு திரும்பியுள்ளது. 125இப்பொழுது, உங்கள் தலைகளையும், இருதயங்களை தாழ்த்தியிருக்கையில் உங்களையே இக்கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். ''இந்த வார்த்தையுடன் நான் சரியாகக் காணப்படுகிறேனா? அப்படி இருக்கின்றேனா?'' பிரசங்க மேடையிலிருந்து செய்யப்படுகின்ற என் ஜெபமானது, ''ஓ, தேவனே, உம்மைப் போன்று இல்லாத காரியங்கள் எல்லாவற்றையும் என்னிடத்திலிருந்து தறித்து எடுத்துப் போடும். ஓ, தேவனே, என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும்'' என்பதே. நாம் இங்கே பாதையின் முடிவில் இருக்கின்றோம். அது சரி, நீங்கள் உத்தமமாக உயர்த்தி, ''தேவனே, உம்மை போன்று இல்லாத காரியங்களை எல்லாம் என்னிடத்திலிருந்து வெட்டி எடுத்தருளும். கர்த்தாவே என்னை வனையும், என்னை உருவாக்கும் என்று உங்களால் கூறக்கூடுமா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே யாராவது சரியான நிலையில் இல்லாமல் ஒரு பாவியாயிருந்து கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது ஒரு பின்மாற்றக்காரனாய் அல்லது ஏதோ ஒன்றாய் இன்றிரவு இங்கே வந்திருப்பாயானால் இங்கே பீடத்தின் அண்டையில் வந்து நிற்க அழைக்கப்படுகிறாய். வியாதியஸ்தர்களுக்காக ஏறெக்கப்படுகின்ற என்னுடைய ஜெபத்தை தேவன் கேட்பார் என்று நீ விசுவாசிப்பாயானால், அவர் கேட்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆகவே நீயும் நானும் ஒன்றாக நம்முடைய விசுவாசத்தை தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் பலியின் மீது வைத்து ஜெபத்தை ஏறெடுப்போம். தேவன் அதைக் கேட்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். வந்து ஜெபத்தில் நிற்க நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். 126இப்பொழுது, எங்கள் பரலோகப் பிதாவே, நீண்ட நேரமாக பேசப்பட்ட இந்த அறைகுறையான குறைபாடுள்ள வார்த்தைகளையும், இந்த ஜனங்களையும் உம்மிடத்தில் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம். கர்த்தாவே அநேகர் சோர்ந்து களைத்துப் போய் வீட்டிற்கு சென்றிருக்கின்ற வேளையில், ஒருவேளை சிலர் சற்று மனக்கசப்பு அடைந்திருக்கலாம். கர்த்தாவே கூட்டத்தில் யார் யார் முழுவதுமாக இருந்தனர் என்று என்னால் கூற இயலவில்லை. ஆகவே பிதாவே, அது உமது வார்த்தையாகும். என்னுடைய இருதயத்தை நீ அறிந்திருக்கிறீர். ஆகவே நான்... அதை செய்யாதிருந்தால் எனக்கு ஐயோ. கர்த்தாவே, அதை நான் செய்தாக வேண்டும். ஆகவே, நான் இப்பொழுது ஜெபிக்கிறேன். வார்த்தையைக் குறித்த சரியான புரிந்து கொள்ளுதலை உடையவர்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள். நீர் எவர்களை ஜீவனுக்கென்று அழைத்திருக்கிறீரோ, தங்கள் இருதயத்தை தேவனை நேசிக்கத்தக்கதாக கொண்டிருந்து உலகத்தில் உள்ளதை நேசிக்காமல் இருக்கிறவர்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். அவருடைய சபையும் புரிந்து கொள்ளும். நான் இந்த காரியங்களுக்காக மன்றாடுகிறேன். பிதாவே, அங்கே உள்ள கூடுதலான அந்த எல்லா காரியங்களையும் தறித்து எறிவதற்காக, ஒரு விருத்தசேதனத்திற்காக இங்குள்ள எல்லாக் கைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேவனே எங்கள் எல்லோருக்கும் உதவி செய்யும். கர்த்தாவே சரியாக அவர்களுடனே நான் நிற்கின்றேன். நானும் அவர்களில் ஒருவனாவேன். பாவமும், நிந்தையும் என்றென்றைக்குமாக அழிக்கப்படும் அந்த மகிழ்ச்சிக்குரிய ஆயிரவருட நாளின் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, பிதாவே, நாங்கள் இந்த உலகத்தில் இருக்கையில் இந்த காரியங்களுக்கு நாங்கள் உட்பட்டிருக்கிறோம். தவறுகளுக்கும், பாவங்களுக்கும் நாங்கள் உட்பட்டவர்களாயிருக்கின்றோம். ஆனால் அதைச் செய்யப் பிரியப்படாமல் இன்னுமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றோம். வேதம் கூறுகின்றது போல, ''கடிந்து கொள்ளப்படும் போது சோர்ந்து போகாதே“ ஆனால், பிதாவே, வார்த்தையின் கடிந்து கொள்ளுதல் மற்றவர்களை பலமாக வெட்டுவது போன்று என்னையும் பலமாக வெட்டுகிறது, அவர்கள் அதை அந்த விதமாக அதைப் புரிந்துக்கொள்ளட்டும் என நான் ஜெபிக்கிறேன். 127இப்பொழுது அவர்களை ஆசீர்வதிக்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். ஏற்கனவே நாங்கள் ஜெபித்தது போல, நாங்கள் கேட்கப் போவதை அறிந்தவராக கவனித்துக் கொண்டிருக்கின்ற கர்த்தாவே, தவறான ஒன்றை நான் கேட்க விரும்பவில்லை. சொற்களால் நிறைந்த ஏதோ ஒன்றை நாங்கள் கேட்க விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் உம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். இன்றிரவு நான் இங்கு வந்து பிரசங்கிக்கத் தக்கதாக தன் கதவைத் திறந்த இந்த எங்களுடைய சிறிய சகோதரனைஆசீர்வதிக்கும்படியாக நான் உம்மை கேட்கிறேன். இவருடைய ஒவ்வொரு அங்கத்தினர்களும் கர்த்தாவே, ஒரு... தேவனுடைய வரங்களும் மற்ற எல்லாக் காரியங்களும் இசைவாகச் செல்லுகின்ற ஒரு ஸ்தலமாக, ஒரு கலங்கரை விளக்கமாக இது அமையட்டும். இங்கு அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு ஊழியக்காரரையும், அவர்களுடைய சபைகளையும் ஆசீர்வதியும். ஒரு அசைவு அல்லது முசுக்கொட்டைச் செடியின் ஓசையைப் போன்று தேவனுடைய ஆவியானது பீனிக்ஸை கடந்து சபைகளை ஐக்கியத்தில் கொண்டு வந்து ஊழியக்காரர்கள் பிரசங்கிக்கக் கூடாத அளவிற்கு தேவனுடைய மகிமைக்கென்று ஒரு மகத்தான எழுப்புதலைக் கொண்டு வந்து, பரிசுத்தவான்கள் சீக்கிரமான மத்தியான பொழுதிலேயே கூடிவந்து அழுது, ஜெபித்து, செய்திகளையும் சாட்சிகளையும் கூறி, ஒரு உண்மையான ஆவியின் பொழிவை அடைந்து, கவனியுங்கள் முழுபட்டினமே ஈர்க்கப்பட்டு வருகையில், தேவனே அதை இப்பொழுது அருளும். கர்த்தாவே எங்கள் மத்தியில் உள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தும். அவர்களுக்கு தெய்வீக விடுதலையை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் பிதாவே. 128இப்பொழுது நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கின்ற வேளையில், பீடத்தைச் சுற்றி நிற்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் யாராவது அங்கே இருப்பார்களானால், நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கின்ற வேளையில் ஒரு சிறிய, அருமையான, பழைய சுவிசேஷ பாடலை மந்த ஓசையில் வாய் திறவாது பாடுவோம் (hum) பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாகவும், இன்னும் ஆழமான அனுபவத்தைப் பெறவும், அல்லது நீ இரட்சிக்கப்பட்டு இன்னுமாக பரிசுத்த மாக்கப்படாமல் இருந்தால் அல்லது எதுவாயிருந்தாலும் நாங்கள் உனக்கு ஜெபிக்க வேண்டும் என்று விரும்புவாயானால், இந்தச் சிறிய பாடலை வாய் திறவாது இசைக்கையில் நாங்கள் அதை (ஜெபிக்க தமிழாக்கியோன்) சந்தோஷத்துடன் செய்வோம். நான் அவரை நேசிக்கின்றேன். நீங்கள் அவரை நேசிப்பீர்களானால் அவருடைய வார்த்தைக்கு நாம் கனத்தை செலுத்துவோம். நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில். அவர்கள் வந்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் தங்கள் இடத்தில் நிற்க நான் விரும்புகிறேன். அதுசரி, சகோதரியே. நேசிக்கிறேன் நேசிக்கிறேன், முந்தி அவர்... (இப்பொழுது வர விரும்புகிறவர்கள் பீடத்தைச் சுற்றிலும் வாருங்கள்)... என்னை. சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். 129குட்டை மயிரை உடைய சகோதரிகளாகிய நீங்கள் இங்கு தேவனுடன் பொருத்தனை செய்து கொள்ளலாம் அல்லவா? உங்களுக்கு நான் அதை வேதாகமத்திலிருந்து வாசித்துக் காண்பிக்க வேண்டுமா? அது சரி. ''கர்த்தாவே, எல்லா காரியங்களிலும் நான் சரியாக இருக்க விரும்புகிறேன். சரியாக நான் அடியெடுத்து வைக்க விரும்புகிறேன். நான் சரியான பாதையில் சென்று அங்கேயே இருக்க விரும்புகிறேன். ஆகவே, கர்த்தாவே, இன்றிரவு உம்மிடம் பொருத்தனை செய்து கொள்ள விரும்புகிறேன். இப்பொழுதிலிருந்து சரியாக அது வளரத் துவங்கும்'' என்று இங்கு வந்து நீங்கள் ஏன் கூறக்கூடாது. ஒரு மனிதன் நீண்ட மயிரை உடையவனாயிருந்து ஒரு ஸ்திரீயைப் போன்று காணப்படுவானானால் அது அவனுக்கு ஒரு வெட்கக்கேடான காரியம் என்று வேதம் கூறுகின்றது. ஒன்று ஆதாமுடனும் ஒன்று ஏவாளுடனும், ஆக தேவன், இரண்டு உடன்படிக்கைகள் வேதம் முழுவதும் உள்ளன. அந்த இரண்டு உடன்படிக்கைகளை செய்தார். அவர்களை வித்தியாசமான உடுத்துவித்தார். ஆகமொத்தம் அவர்கள் வித்தியாசப்பட்டவர்களே. அவர்கள் எப்பொழுதும் வித்தியாசமாகவே இருந்து வருகின்றனர். இரண்டு உடன்படிக்கைகளைக் குறித்து எப்பொழுதாவது, என்றாவது ஒரு இரவு நான் பிரசங்கிக்க விரும்புகிறேன். அதிலுள்ள வித்தியாசத்தை நான் காண விரும்புகிறேன். ஓ, என்னே, அது மகத்துவமானது. அது உங்கள் விவாகமும் விவாகரத்தும் போன்ற காரியங்களிலும் உள்ளது. நீங்கள் அதைக் குறித்த சத்தியத்தை அறிந்தீர்களானால் முழு காரியத்தையுமே அது ஒரு முடிவிற்கு கொண்டு வரும். அது சரி. ஆகவே இப்பொழுது நிச்சயமுடையவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் வருவீர்களா? வாருங்கள். நேசிக்கிறேன்... (உங்களுக்கு பரிசுத்த ஆவி தேவையாய் இருக்கின்றதா? மேலே வந்து சுற்றிலும் நில்லுங்கள் முந்தி அவர்கள் நேசித்ததால். சம்... (அவரோடு நெருங்கி நடக்க விரும்புகிறீர்களா? வாருங்கள், ஒரு உறுதி மொழியை எடுத்து அதைக் கைக்கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அதைக் கைக்கொள்ளாவிட்டால் நீங்கள் ஒரு உறுதி மொழியை செய்வதில் எந்த ஒரு பயனும் இல்லை.) கல்.... (நீங்கள் வந்து உங்களுடைய உறுதி மொழியைச் செய்யலாம். தேவன் அதை நிரப்ப வேண்டும். நீங்கள் செய்த உறுதி மொழியை மாத்திரத் கைக்கொள்ளுங்கள்.) 130இப்பொழுது என்னுடைய ஊழியக்கார சகோதரர்கள் இங்கு வந்து, நாம் ஜெபிக்கையில் இந்த அருமையான ஜனங்களுடன் நின்று ஒவ்வொருவருடன் பேசி அவர்களுடைய தேவைகள் என்னவென்பதை கேட்டு அறியுங்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்ளப் போகின்றேன். உங்களால் இயன்றவரை ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். இப்பொழுதும் இந்த ஜெபமானது ஏறெடுக்கப்படுகையில் நீங்கள் மிக பயபக்தியுடன் நில்லுங்கள். தேவன் உங்களை மேன்மைப்படுத்துவார். இப்பொழுது இங்கே ஜெபத்திற்காக சுற்றிலும் நின்றுள்ள இந்த மக்களின் பின்னால் வந்து, நீங்கள் நிற்கலாம். கல்வாரி மரத்தில். இப்பொழுது மறுபடியுமாக அங்கே... ஊழியக்காரர்கள் இரண்டு பக்கமும் வந்து கொண்டிருக்கின்றனர். நேசிக்கிறேன்... (பல்வேறு ஸ்தாபனங்களின் ஊழியக்காரர்கள் இப்பொழுது ஒன்றாக வந்திருக்கின்றனர். இரத்தத்தின் கீழ் உள்ளவர்கள், அதை நான் காண விரும்புகிறேன்.) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் (என்னே!) சகோதரர்களே, இப்பொழுது வாருங்கள், நீர் நிற்கின்ற நபரின் அருகில் வந்து அவர் மேல் கைகளை வைத்து தேவனிடத்திலிருந்து அவர்களுக்கு தேவைப்படுவது என்னவென்பதை கேட்டறியுங்கள். உங்களுக்குத் தெரியுமா? இங்கே பாருங்கள். பல்வேறு சபைகளைச் சேர்ந்த ஊழியக்காரர்கள் ஒன்றாக நிற்கிறதை நான் காண்கையில் இது ஒரு மகத்தான வேளையாய் இருக்கின்றதல்லவா? அங்கே கட்டில்கள் மேல் கிடத்தப்பட்டிருந்த சகோதரிகள் எழுந்துவிட்டார்கள். நடந்து சென்றுவிட்டார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய நாமத்தில் நிற்கின்றார்கள். அதற்காக நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். 131இப்பொழுது கூட்டத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்திலே என்னிடம் பேசுவது போல் தேவனிடத்தில் பேசுங்கள், அதாவது நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் என்னிடம் வந்து, ''சகோ. பிரான்ஹாம் என்னை மன்னியுங்கள், நான் இதைச் செய்தேன், அதற்காக என்னை மன்னிப்பீர்களா? அதை நான் மறுபடியுமாக உமக்கெதிராக செய்ய மாட்டேன் என்று வாக்களிக்கிறேன் சகோதரன் பிரான்ஹாம்'' என்று கூற விரும்புவீர்கள். இப்பொழுது, என் பெயரை என்னிலிருந்து சற்று மாற்றி உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பெயரிற்கு மாற்றம் செய்யுங்கள். ஆகவே, உங்களுக்கு சுகமளித்தல் தேவைப்படுகிறது என்றால், “சகோதரன். பிரான்ஹாமே பாருங்கள், நான் கவலையாயுள்ளேன். இன்றிரவு உணவு ஆகாரம் சாப்பிட எதுவுமில்லை. உங்களிடம் ஒரு டாலர் (அமெரிக்க ரூபாய் - தமிழாக்கியோன்) இருந்தால் அதை எனக்குத் தருவீர் என்று எனக்குத் தெரியும்'' என்று நீங்கள் கூற விரும்புவீர்கள் என்றால், பாருங்கள், இப்பொழுது, ''உம்மிடம் சுகமளிக்கும் வல்லமை இருக்குமானால் என்று நீங்கள் தேவனிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவர் அதைக் கொண்டுள்ளார்.'' பாருங்கள்? ''உங்களிடம் சுகமளிக்கும் வல்லமை இருக்குமானால்'' என்று நீங்கள் தேவனிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவர் அதைக் கொண்டுள்ளார். பாருங்கள்? ''உங்களிடம் அது இருக்குமானால்'' என்று நீங்கள் என்னிடத்தில் கூற வேண்டியதாயிருக்கும். ஆனால் அவரிடத்தில், ''உம்மிடத்தில் இருக்குமானால்'' எனக் கேட்கத் தேவையில்லை. அவர் கொண்டிருக்கிறார். பாருங்கள்? ஆகவே, ''நீங்கள் சகோதரன் பிரான்ஹாமே எனக்கு ஒரு டாலர்த் தருவீரா? சாப்பிட ஏதாவது எனக்கு தேவையாயிருக்கின்றது'' என்று கூறுவீர்களானால், உங்களுக்குத் தெரியுமா, நிச்சயமாக நான் செய்வேன். என்னிடம் அது இருந்தால் எந்த நேரத்திலும் நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன். அவ்விதம் நான் செய்யாவிடில் நான் குரூரமான இருதயத்தை கொண்டவனாக இருப்பேன். ஆகவே, கடினமான பாவம் நிறைந்த ஒரு மனிதனான நான் உம்மைப் போன்ற யாரோ ஒருவனுக்கு இரக்கம் நிறைந்த இருதயமுடையவனாய் இருப்பேன் என்றால் தேவன் எப்படிப்பட்டவராய் இருப்பார்? 132“பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது பரிசுத்த ஆவியைக் கேட்பவர்களுக்கு, உங்கள் பரம பிதா அவர்களுக்கு ஆவியை அளிப்பது அதிக நிச்சயமல்லவா.'' ''நீங்கள் மீனைக் கேட்டால், அவர் உங்களுக்கு பாம்பைக் கொடுப்பாரா? நீங்கள் அப்பத்தைக் கேட்டால், அவர் உங்களுக்கு கல்லைக் கொடுப்பாரா?'' நிச்சயமாக அப்படியல்ல! ஏன், நீங்கள் அந்த வழியில் விசுவாசத்துடன் கேட்டு, அதை நம்பும்போது, என்னிடத்தில் ஏதாவதொன்று கிடைப்பதை காட்டிலும் பத்து லட்சம் மடங்கு அதிக சீக்கிரம் அவரிடத்தில் கேட்டால் கிடைக்கும். நான் உங்களுக்கு உதவுவேன் என்று உங்களுக்குத் தெரியும். என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். இந்த சகோதரர்களும் அவ்விதம் செய்வார்கள். எங்களுடைய சட்டைப் பையை துழாவி அதிலுள்ள ஒவ்வொரு காசையும் நாங்கள் கொடுப்போம். ஆனால் இதுவோ நீங்கள் நம்பிக்கையுடன் கூடிய விசுவாசத்தினால் செய்யப்பட வேண்டிய ஒன்றாய் இருக்கிறது. இப்பொழுது நாங்களும் நீங்களும் கூடியிருக்கின்ற மக்களும் ஜெபிக்கையில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசிக்கின்றீர்களா, தேவன் வந்து நம்முடைய ஜெபங்களை அங்கீகரிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் உங்களுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார் என்ற ஓர் உணர்வை நீங்கள் பெற்ற மாத்திரத்தில், ''கர்த்தாவே, நான் தவறு செய்தேன், அதை இனி நான் செய்ய மாட்டேன் என்னுடைய கரத்தை உயர்த்தி இனிமேல் நான் அதை செய்ய மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்'' என்ற ஒரு உடன்படிக்கையை நீங்கள் செய்தீர்கள். உங்களுடைய வார்த்தையைக் கொண்டே அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். ஆகவே, அவ்வாறே நீங்கள் விசுவாசித்தால் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் கரங்களை மாத்திரம் உயர்த்தி கர்த்தாவே, என்னுடைய உறுதி மொழியை நான் செய்தேன். ஆகவே, அது உம்முடையது என நான் அறிவேன், அதற்கு பதிலளிப்பதாக நீர் வாக்குரைத்திருக்கின்றீர், நீர் தவற முடியாது'' என்று அவருக்கு நன்றியை செலுத்துங்கள். 133பரலோகப் பிதாவே, உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள், இந்த வேளையில், உம்முடைய கவனத்தையும் உம்முடைய ஆசீர்வாதங்களைக் கோரி இங்கு முன்னே வந்திருக்கும் இந்த மக்கள் குழுவிற்கு முன்பாக நாங்கள் நிற்கின்றோம். பிதாவே, இவர்கள் செய்தியின் சாயங்கால வெளிச்ச நேரத்தின் இருக்கிறார்கள். கர்த்தாவே அவர்களில் அநேகர் அறிக்கையிடுகின்றனர். சிலர் பதறலோடு உள்ளனர். தேவனே, நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் புறம்பே தள்ளுவதில்லை. ஏனெனில், நீர் உம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வீர் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். பேதுருவும், சீஷர்களும் அப்போஸ்தலர் 4ஆம் அதிகாரத்தில் ஜெபித்தது போல நானும் உம்முடைய வார்த்தையை உம்முடைய நினைவிற்கு கொண்டு வரும்கிறேன், அவர்கள், ''கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நினைவு கூறும்! புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன்?'' என்று கூறினர். 134இப்பொழுது பிதாவே, உம்முடைய வார்த்தையைக் கொண்டு வருகின்றோம். நீர் கூறினீர், “என்னில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். என்னிடத்தில் வருபவனை நான் ஒரு போதும் தள்ளுவதில்லை. என்னுடைய வார்த்தைகளை கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். அவன் நியாயத்தீர்ப்புக்குள் வராமல் மரணத்தின் மேல் வெற்றி கொண்டு ஜீவனை அடைகிறான்.'' ஓ, நம்முடைய விண்ணப்பங்களை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அவர் நமக்கு பதிலளிப்பார். அவர் நிறைய...''தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுகிறவன் மன்னிப்பு அடைவான். தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்.'' ஆகவே, நாங்கள் எங்களுடைய தவறுகளை அறிக்கையிடுகிறோம். ஜனங்களுடைய தவறுகளை நான் அறிக்கை செய்கிறேன். என்னுடைய சொந்த தவறுகளை அறிக்கையிடுகிறேன். இரக்கத்திற்காக நான் கெஞ்சுகிறேன். சுகத்தை நான் கேட்கிறேன். கிருபையை நான் கேட்கிறேன். கர்த்தாவே இப்பொழுது இங்கு காத்துக் கொண்டிருக்கின்ற இந்த மக்களின் மீது பரிசுத்த ஆவியைப் பொழிய வேண்டுமாய் நான் கேட்கிறேன். அவர்களுடைய வாழ்க்கையானது தேவனுடைய வனைகின்ற கலத்தில் மாற்றியமைக்கப்பட்டு தேவனுடைய குமாரனின் சாயலில் வடிவமைக்கப்பட்டு தேவனுடைய குமாரனின் சாயலில் வடிவமைக்கப்படட்டும். ஆதலால் அவரை உயிர்ப்பித்த அந்த ஆவியானது இவர்களுடைய சரீரங்களில் வந்து தேவனுடைய குமாரர்களாக குமாரத்திகளாக மாறட்டும். கர்த்தாவே, அதை அருளும். நீர் இங்கு பிரசன்னமாயிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசமாயிருக்கிறோம். உம்முடைய வார்த்தையை நீர் கனம் பண்ணுவீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். வார்த்தையின் பிரயாசத்தை நீர் கனம் பண்ணுவீர் என நாங்கள் விசுவாசிக்கிறோம். இங்கு உம்முடைய பிரசன்னம் வந்து இவர்களை சந்திக்கத்தக்கதாக பீடத்தண்டையில் காத்துக் கொண்டிருக்கையில் இந்த மக்களின் மீது இப்பொழுது இவ்வாசீர்வாதங்களை அனுப்பும். இயேசுவின் நாமத்தில். 135இப்பொழுது, நீங்கள் விசுவாசித்தால், பெற்றுக் கொண்டீர்கள் என விசுவாசித்தால் உங்களுடைய கரத்தை தேவனிடத்தில் உயர்த்துங்கள். அதை விசுவாசத்தின் ஜெபம் என நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுடைய உறுதிமொழியுடன் தேவனிடத்தில் திரும்புகையில், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கூடியுள்ள மக்கள் எழுந்து நிற்கவும், தேவனிடம் பொருத்தனை செய்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் எழுந்து நின்று, ''அதை நான் விசுவாசிக்கிறேன். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன்'' என்று இப்பொழுது கூறுங்கள். இப்பொழுது, உங்கள் கரங்களை உயர்த்தி அவருக்கு துதியை செலுத்துங்கள். எல்லாம் சரியாகிவிடும். தேவனுக்கு மகிமை! கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய கருணைக்காகவும், உம்முடைய இரக்கத்திற்காகவும், நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவின் மூலம் உமக்கு துதிகளை ஏறெடுக்கிறோம்.